Wednesday, October 30, 2013

ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவரது வீடு சென்னை பெருங்குடியில் இருக்கிறது. இடப் பெயர்களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் இவர், சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை முதலில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்பித்தார். தனது ஆய்வுகளை முடிப்பதற்காக தன் அரசுப் பணிக்கு 2ஆண்டுகள் விடுமுறை சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.

1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப் பெயர்கள் மீது காதல் கொண்டேன். எங்கு மாறுதலாகிச் சென்றாலும் ஊர்ப் பெயர்கள் அடங்கிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் புத்தகங்களைத் தூக்கிச் சென்றேன்.

மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.

ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன். இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.

பின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.

இன்னொரு ஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன. ஆதிமனிதன் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், பின்னர் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தான் என்றும் இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது, இந்த இடப் பெயர்வுடன் பெரிதும் பொருந்துகிறது. இது பற்றிய எனது கட்டுரை உலக அளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது.

சுமார் 9ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு. சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.

நான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.

அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.

தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது…

4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது? யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன.

எனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான். சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம்.

பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன. (வரைபடத்தைக் காண்க.)


இடப்பெயர்வு நடந்திருக்கலாம். அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின், மிச்சம் இருந்தவர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களை இழந்திருக்கலாம். ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.

சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை.

சங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம். எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது? பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம்.

(வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல். கி.பி.535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.)

தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றன. மணல்மழை பாலைவனத்தில் தான் சாத்தியம்.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். “பொன்படு கொங்கானம்” என்ற வரி. கொங்கணம் அதாவது கோவா, மகாராஷ்டிரப் பகுதி. இப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆக, சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கக் கூடும் என்றே கருதுகிறேன்.

தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகிற அறிவுப்பூர்வமான ஆய்வுகள், இந்திய வரலாற்றை உண்மையின் ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

Monday, September 16, 2013

நமது இந்துதர்மத்தில் அம்மா, அப்பாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், உடன் பிறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், வாழ்க்கைத் துணைக்குச் செய்ய வேண்டிய கடமைகள், தமது மகன்/ளுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்று ஏராளமான பொறுப்புகள் இருக்கின்றன. இதில் இறந்த முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய பொறுப்புகள் மிக மிக முக்கியமானவை!

Purattasi Amavasya


உதாரணமாக நமது அம்மாவின் அம்மாவாகிய பாட்டி வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சிவனடி சேர்ந்திருந்தால், ஒவ்வொரு வருடமும் அதே வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் அவருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்; இதைப் போன்றே அம்மாவின் அப்பாவான தாத்தா, அப்பாவின் பெற்றோர்களான தாத்தா, அப்பத்தா என்று அவரவர் சிவனடி சேர்ந்த திதியை சரியாகக் கண்டறிந்து தர்ப்பணம் செய்யவேண்டும்; இன்றைய வேகமான வாழ்க்கையில் இது எல்லோருக்கும் சாத்தியமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. எனவே, நமது முன்னோர்களாகிய சித்தர்களும்,ரிஷிகளும் இதற்கு ஒரு மாற்று வழியை உருவாக்கியிருக்கிறார்கள். அதுதான் அமாவாசை அன்னதானம்!!

ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் அமாவாசை நாளில்  அன்னதானம் செய்வதன் மூலமாக இறையடி சேர்ந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பலன்கள் கிட்டும்; அதுவும் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவசை, தை அமாவாசை இந்த மூன்று அமாவாசைகளில் மட்டுமாவது அன்னதானம் செய்வதன் மூலமாக முன்னோர்களின் ஆசியைப் பெற முடியும். இந்த சூட்சுமத்தை உணர்ந்தவர்களே பல தலைமுறைகளாக நிம்மதியோடும், செல்வச் செழிப்போடும், செல்வாக்கோடும் வாழ்ந்து வருகிறார்கள்.

அதுவும் புரட்டாசி அமாவாசை அன்று நாம் செய்யும் அன்னதானம்,தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த புண்ணியத்தைத் தரும் என்பது நமது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் அவர்கள் தமது ஆன்மீக ஆராய்ச்சியின் மூலமாக கண்டறிந்துள்ளார்.

முதல் மூன்று யுகங்களான கிருதயுகம், திரோதாயுகம், துவாபரயுகம்- இம்மூன்றிலும் நாம் செய்யும் யாகங்கள், பூஜைகள், தானங்கள் நமது கர்மவினைகளை முழுமையாக நசித்துவிட்டு, அளவற்ற புண்ணியத்தையும், சகல சம்பத்துகளையும் தரும். ஆனால், நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் இறை நாம ஜபமும், சரியான திதியில் செய்யப்படும் அன்னதானமும் மட்டுமே நமது கர்மவினைகளில் இருந்து காக்கும்; ஏனெனில், அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு செய்யப்படும் இறைசெயல்கள் மட்டுமே கலியுகத்தில் நமக்கு பலன் தரும். நமது கர்மவினைகளிலிருந்து விடுபட நாம் மட்டுமே தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.

தினமும் ஒருமணி நேரம் வரை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று எழுதுதல் அல்லது ஜபித்தல்; புரட்டாசி அமாவாசையன்று  அன்னதானம் செய்தல் போன்றவை மட்டுமே நமது கர்மவினைகளை கரைத்து நம்மை நிம்மதியான வாழ்க்கைக்கு கொண்டு செல்லும்;

நமது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் என்ற சகஸ்ரவடுகர் அவர்கள் புரட்டாசி அமாவாசை அன்னதானத்தை தமது சொந்தப் பொறுப்பில் பல வருடங்களாக நடத்தி வருகிறார். இந்த வருடம் முதல் நமது ஆன்மீகக்கடலின் வேண்டுகோளுக்கு இணங்க நம்மையும் இந்த அன்னதானத்தில் பங்கு பெற அழைக்கிறார்.

புரட்டாசி மாதத்து அமாவாசையானது இந்த வருடம் 4.10.2013 வெள்ளிக்கிழமை காலை 7.04க்குத் துவங்கி, 5.10.2013 சனிக்கிழமை காலை 6.52 வரை நிறைவடைகிறது. இந்த அமாவாசையன்று நமது முன்னோர்களுக்கு நாம் செய்யும் அன்னதானமானது கடந்த 12 ஆண்டுகளாக (2001 முதல் இந்த வருடம் வரை) நம்மால் செய்யமுடியாமல் விடுபட்ட முன்னோர்களுக்கான தர்ப்பண கடனை நீக்கிவிடும். (பலருக்கு தீரவே தீராத கடன்கள், நீண்ட  கால நோய்கள், தொழிலில் எவ்வளவு திறமையாக செயல்பட்டும் சாதிக்கமுடியாமல் தவிப்பது, வரவுக்கும் செலவுக்கும் நடுவே குடும்பம் நடத்த முடியாமல் போராடிக் கொண்டிருப்பது; குடும்பத்தில் கணவன்-மனைவி ஒற்றுமையின்மை, குழந்தைகள் பெற்றோரை மதிக்காமல் தான் தோன்றித்தனமாக வாழ்வது - இவைகளுக்குக் காரணம் முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாமல் இருப்பதே. சிலர் ஏனோதானோ என்று அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு செய்திருப்பர்; அதுவும் காரணமாக அமைந்திருக்கும். நாம் செய்தாலே அளவற்ற புண்ணியம் தரும் இந்த அன்னதானத்தை நமது ஆன்மீக குருவின் தலைமையில் செய்தால்...யோசித்து பாருங்கள்.

இந்த புரட்டாசி அமாவாசை அன்னதானத்தில் பங்கு பெற விரும்புவோர் 1.10.2013 செவ்வாய்க்கிழமைக்குள் ஐயா அவர்களை நேரடியாக சந்தித்து தமது பங்காக அரிசி, பலசரக்குகளை வாங்கித் தரவேண்டும்; பணமாகத் தர அனுமதியில்லை; அன்னதானத்துக்குரிய பொருட்களை நீங்களே வாங்கித் தரவேண்டும்; எவ்வளவு என்பது முக்கியமில்லை; நீங்கள் மனப்பூர்வமாக நமது ஆன்மீக குரு அவர்களின் தலைமையில் இந்த அன்னதானத்தை செய்ய இருக்கிறோம் என்ற மனப்பான்மையே முக்கியம்.

எங்கே? எப்போது நமது ஐயாவை சந்திப்பது? எவ்வளவு வாங்கித் தருவது? எப்படி வாங்கித் தருவது? போன்ற சந்தேகங்களை நீங்கள் ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி அவர்களிடம் 9092116990 என்ற எண்ணில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை எல்லா நாட்களில் கேட்கலாம்;

மேலும் நீங்கள் எந்த நாளன்று ஐயாவை நேரில் சந்தித்து இந்த அன்னதானத்திற்கு தானம் வழங்குகிறீர்களோ, அதற்கு மறுநாளில் இருந்து உங்கள் வீட்டுப் பூஜை அறையில் மாஞ்சுள்ளி ஐந்தும், வேப்பஞ்சுள்ளி ஐந்தும், அரசமரத்து சுள்ளி ஐந்தும் மஞ்சள் தடவி வைத்திருக்க வேண்டும். (சுள்ளி என்பது மரங்களில் இருந்து உதிரும் குச்சிகள்) குறைந்தது 9 நாட்களும், அதிகபட்சமாக 21 நாட்களும் வைத்திருந்து,4.10.2013 அன்று அன்னதானம் நடைபெறும் இடத்திற்கு கண்டிப்பாக இவைகளைக் கொண்டு வர வேண்டும்.அவ்வாறு வரும்போது (முடிந்தால்) உங்கள் குடும்பத்தாருடன் வருகை தர வேண்டும். இந்த சுள்ளிகளைக் கொண்டு முன்னோர்களுக்கான கூட்டு வழிபாடு நடத்தப்பட்டு, அதன் முடிவில் உங்கள் அனைவரது சார்பாக அன்னதானம் செய்யப்படும்.

அன்னதானம் நடைபெறும் இடம்:

அருள்நிறை கழுகாச்சலமூர்த்தி திருக்கோவில் வளாகம்,
கழுகுமலை பேரூராட்சி, சங்கரன்கோவில் தாலுகா,
திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.

பேருந்து வழித்தடம்:

மதுரை டூ திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியில் இறங்க வேண்டும்; அங்கிருந்து கழுகுமலைக்கு வரலாம்;

ரயில் வழித்தடம்:

மதுரை டூ திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் செல்லும் பெரும்பாலான ரயில்கள் கோவில்பட்டியில் நிற்கும்.கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் பேருந்துகள் கழுகுமலையில் நிற்கும்.

குறிப்பு: முதல் நாளே வந்து தங்க விரும்புவோர் கோவில்பட்டியில் தங்குவது நன்று.

நடைபெறும் நாள்: 4.10.2013 வெள்ளிக்கிழமை

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

Tuesday, August 6, 2013

வானம் 12 பிரிவுகளாகப்பிரிக்கப்பட்டு, 12 ராசிகளாக பெயரிடப்பட்டுள்ளன. அவையே ஆன்மீகமயமாக்கப்பட்டு, ஜோதிடமாக உருவெடுத்தது. இந்த 12 ராசிகளில் ஞானத்தை வழங்கும் ராசிகள் கடகராசியும், மகர ராசியும் ஆகும். கடகராசியில் ராகு அல்லது கேதுவும், மகரராசியில் கேது அல்லது ராகுவும் இருக்க பிறந்திருந்தால் அவர்கள் இறைவனது அளவற்ற அனுக்கிரகத்திற்கு பாத்திரமானவர்கள் ஆவர்.

சொர்ண ஆகர்ஷன பைரவர், இலுப்பைக்குடி
சொர்ண ஆகர்ஷன பைரவர், இலுப்பைக்குடி

அதே போல, ஆடிமாதத்தில் அமாவாசை வரும் நாளன்று கடகராசியில் சூரியனும், சந்திரனும் ஒன்று சேருவார்கள்; தை மாதத்தில் வரும் அமாவாசையன்றும் சூரியனும் சந்திரனும் ஒன்றிணைவார்கள். இந்த இரண்டு அமாவாசை நாட்களிலும் நாம் செய்யும் எந்த ஒரு புண்ணியச் செயலும் பல கோடி மடங்காகப் பெருகி நமது வாழ்க்கையில் கர்மவினைகளை அழிக்கும்; அளவற்ற புண்ணியத்தையும், செல்வ வளத்தையும், ஆரோக்கியத்தையும், நிம்மதியையும் அள்ளித் தரும்.
 • விஜய வருடத்தின் ஆடி அமாவாசை நாளான இன்று 6.8.2013 செவ்வாய்க்கிழமையும், பூச நட்சத்திரமும்,அமாவாசைத் திதியும் சேர்ந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசையானது பூச நட்சத்திரத்தில் தான் வரும்.
 • இறைவழிபாட்டுக்குரிய செவ்வாய்க்கிழமையன்று ஆடி அமாவாசை வருவது அரிதிலும் அரிதாகும்.
 • இந்த நன்னாளில் நாம் அன்னதானம் செய்யலாம்; ஆடை தானம் செய்யலாம்; (முடிந்தால்) சொர்ணதானம் செய்யலாம்; தண்ணீர் தானம் செய்யலாம்; கோவில்களில் உழவாரப் பணியில் ஈடுபடலாம்; பிறருக்கு முக்கியமான உதவி செய்யலாம்; மந்திரங்கள் ஜபிக்கலாம்;
நமது கர்மவினைகளை நீக்கும் சக்தி காலத்தை இயக்கும் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு உண்டு. ஏனெனில், நம்மை இயக்கும் நவக்கிரகங்கள், அந்த நவக்கிரகங்களைக்  கட்டுப்படுத்தும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்ச பூதங்கள், அந்த பஞ்ச பூதங்கள் மூலமாக நவக்கிரகங்களையும், நவக்கிரகங்கள் மூலமாக மனிதர்களாகிய நம்மையும் வழிநடத்தும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் (மும்மூர்த்திகள்) = இவர்கள் அனைவரையும் நிர்வகிப்பவர் ஸ்ரீகால பைரவப் பெருமான் மட்டுமே!
 • இந்த நன்னாள் முழுவதும் நாம் ஒவ்வொருவரும் (அசைவம் சாப்பிடாமல் இருந்து) ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிப்பது அவசியம்; அவசரம்; முக்கியம்!!!
 • இதைச் செய்யமுடியாதவர்கள், இன்று ஏதாவது ஒரு மணிநேரம் (குரு ஓரை வரும் நேரமான காலை 12 மணி முதல் மதியம் 1 மணி வரை; அல்லது இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை) ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்கலாம்;
 • இந்த மந்திரத்தை இன்று ஏதாவது ஒரு பழமையான சிவாலயம் சென்று ஏதாவது ஒரு மணி நேரம் ஜபிக்கலாம்; மூலவராகிய சிவபெருமான் முன்பாகவோ, ஸ்ரீகால பைரவப் பெருமான் முன்பாகவோ ஜபிக்கலாம்; முடிந்தால் கோவிலில் மஞ்சள் துண்டு விரித்து, இரு கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை (ஐந்து முகம்) வைத்துக் கொண்டு ஜபிக்கலாம்;
 • இதையும் செய்ய முடியாதவர்கள், அருகில் இருக்கும் ஜீவசமாதிக்குச் சென்று இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;
 • அல்லது நமது வீட்டிலேயே இந்த மந்திரத்தை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் ஜபிப்பது நன்று;
தினசரி ஸ்ரீகால பைரவ மந்திரம் எழுதுபவர்கள் இன்று குறைந்தது மூன்று மணி நேரம் ( காலை 12 மணி முதல் 1 மணி வரை; மாலை 4.30 முதல் 6 மணி வரை; இரவு 7 மணி முதல் 8 மணி வரை) பின்வருமாறு எழுதலாம்;
ஓம் (உங்கள் குலதெய்வம்) நமஹ
ஓம் கணபதி நமஹ
1.ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
2.ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
என்று 108 முறை எழுத வேண்டும். இந்த  நாளில் மட்டும் மூன்று ஒரு மணி நேரமும், பிற நாட்களில் ஏதாவது ஒரு 108 முறை வீதம் ஒரு வருடம் வரையிலும் தினமும் எழுத வேண்டும். இன்று மூன்று ஒரு மணி நேரத்திற்குள் எத்தனை தடவை 108 முறை எழுத முடியுமோ அத்தனை தடவை எழுதலாம்.

இவ்வாறு செய்வதன் மூலமாக நமது கடுமையான கர்மவினைகள் அடியோடு நீங்கிவிடும்; அப்பேர்ப்பட்ட அற்புதமான நாள் இந்த ஆடி அமாவாசை!

இந்த நன்னாளில் சதுரகிரி அல்லது அண்ணாமலை அல்லது பர்வதமலை அல்லது கொல்லிமலை அல்லது காசி அல்லது இமயமலை அல்லது எந்த ஒரு மலைமீதும் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும் மூலவருக்கு முன்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து இந்த மந்திரத்தை ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் ஜபிப்பது அவசியம்.

குறிப்பாக கன்னி, துலாம், விருச்சிகம், மீனம், மேஷம், கடக ராசியினர் இந்த மந்திரத்தை ஜபிப்பதால் சனிபகவானின் தாக்கம் பெருமளவு குறையும். ஒரே நேரத்தில் ஸ்ரீகால பைரவரின் அருளும்,சதாசிவனின் ஆசியும் கிட்டும்.

செய்வோமா?

ஓம்சிவசிவஓம்

நன்றி : வீரமுனி ஐயா, ஆன்மிகக்கடல்.

Monday, July 1, 2013

சுக்கிர பகவானுக்குரிய பரிகார ஸ்தலம் ஸ்ரீரங்கம் என்றெண்ணி... ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் சென்று... காசு பறிக்கும் கும்பலிடம் சிக்கி சின்னாபின்னமாகி வெளியே வந்து மூச்சு விட்டபோது தான் மண்டையில் உரைத்தது ஆன்மிகக்கடல் வீரமுனி ஐயாவிடம் கேக்காமல் போனோமே என்று.

உடனே போன் செய்து விவரத்தை சொன்னால் மண்டையில் உரைக்கும்படியாக சொன்னார்....சுக்கிரபகவனாக்குரிய சக்திவாய்ந்த பரிகாரஸ்தலம் திருக்கோவிலூர் என்று.

இனி  ஐயாவினுடைய எழுத்துக்கள்.

திருக்கோவிலூரில் இருக்கும் ஸ்ரீகாலபைரவர்
திருக்கோவிலூரில் இருக்கும் ஸ்ரீகாலபைரவர்

சுக்கிர தோஷங்களை முழுமையாக நிவர்த்தி செய்யும் ஸ்தலம் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோவில். (அட்ட வீரட்டானங்களில் இரண்டாவது வீரட்டானம் இந்த திருக்கோவிலூர்)

ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மட்டுமே வாகன வசதிகள்,புத்தம் புது ஆடை ஆபரணங்கள்,சுகமான திருமண வாழ்க்கை, சரசக்கலை  போன்றவை எந்தக் குறைவின்றியும் அமையும். ஆனால், கலியுகமான நாம் வாழும் காலத்தில் அப்படி எல்லோருக்கும் அமைந்திருக்கிறதா?

ஜோதிட விதிகளின் படி ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் சுக்கிரன் உச்சமாகக் கூடாது;நீசமாகக்கூடாது;மறையக் கூடாது;சனி,செவ்வாய்,ராகு,கேது,சூரியன் போன்ற கிரகங்களோடு சேரக்கூடாது.அசுர குருவாகிய சுக்கிரன், தேவகுருவாகிய வியாழன் என்ற குருவுடனும் சேராமல் இருக்க வேண்டும்.இன்னும் சில ஜோதிடவிதிகளும் உண்டு.

சுக்கிரன் மீன ராசியில் ரேவதி நட்சத்திரத்தில் உச்சமாகிறார்;அதே சுக்கிரன் கன்னி ராசியில் அஸ்தத்தில் நீசமாகிறார்.லக்னத்துக்கு 3,6,8,12 ஆம் இடங்களில் இருந்தால் அவரது வாழ்க்கையில் ஏதாவது ஒரு சுகக் குறைவு இருக்கவே செய்யும்.இப்படிப்பட்ட கிரகநிலையுடன் இருப்பவர்கள் படித்தபடிப்புக்கு ஏற்றாற்போல  நாகரீகமாக ஆடை அணியமாட்டார்.காதல் அரசியலில் சாணக்கியத்தனத்தோடு இருக்க மாட்டார்.ரொமான்ஸ் கலையில் இவர் எப்போதும் கத்துக்குட்டிதான்.இவரை காதலிக்க விரும்பும் எதிர்பாலினத்தின் ‘சிக்னல்’களை இவரால் புரிந்துகொள்ளவே முடியாது.(ஆனால்,தனது வாழ்க்கைத் துணையை தமது அன்புக்குப் பாத்திரமாக வைத்திருக்க வேண்டுமே?)

ஒருவரது பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் லக்னத்துக்கு 3,6,8,12 ஆம் இடங்களில் இருந்தால் அவர் இப்பிறவியில் செய்யும் அத்தனை புண்ணியங்களுக்கான பலன்களும் அடுத்த பிறவியில் தான் அனுபவிப்பார்;இதைப் புரிந்து கொண்டு ஏராளமான புண்ணியக் காரியங்களைச் செய்வோரும் உண்டு.அப்படிச் செய்வதன் மூலமாக அவரது குழந்தைகள் சகல சம்பத்துக்களுடன் வாழ்வார்கள்.அதே சமயம்,ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1,2,4,5,7,9,10,11 ஆம் இடங்களில் சுக்கிரன் இருந்தால்,அவர் இப்பிறவியில் செய்யும் அத்தனை புண்ணியங்களையும் இந்த ஜன்மத்திலேயே அனுபவிப்பார்.(பாவக்கிரகங்கள் சேராமலும்,பார்க்காமலும் இருந்தால் முழுமையாக அனுபவிக்கும் யோகங்கள் ஏற்படும்)

நூறு பேர்களின் பிறந்த ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால் சராசரியாக   ஒன்பது பேர்களுக்கு மட்டுமே சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கிறது.சுக்கிரன் உடன் பாவக்கிரகங்கள் சேர்வதாலும்,அப்படிச் சேர்ந்து அவைகளின் திசாபுக்தி வருவதாலுமே நாட்டில் காமம் சார்ந்த வக்கிர சம்பவங்கள் நிகழ்கின்றன.அவர்களிலும் பாதிபேர்களுக்கு வேறுவிதமான தோஷங்கள் இருந்து,சுக்கிரனை செயலிழந்து போக வைக்கின்றன.அந்த தோஷங்களை நீக்கியப்பின்னரே,சுகமான வாழ்க்கை அமைகின்றது.நாத்திகம்,கம்யூனிஸம், பத்திரிகைப் பிரச்சாரங்களால் இந்து தர்மம் பற்றிய பெருமைகள் மறைக்கப்பட்டுவிட்டன;அல்லது அழிக்கப்பட்டுவிட்டன;எனவே, இவைகளை நம்புவோர் எண்ணிக்கை  நமது தமிழ்நாட்டில் மிகக் குறைவு.

சுக்கிரனது பலத்தை தேவையான அளவுக்கு அதிகரிக்க பல விதமான கோவில்கள் இருக்கின்றன.பல ஜோதிட வார இதழ்களிலும்,புத்தகங்களிலும் இது தொடர்பாக விளக்கங்களும்,புராணரீதியாக காரணங்களும் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.அந்தக் கோவில்களின் சக்தியை விடவும்,முழுமையான சக்தி அட்டவீரட்ட ஸ்தலமாகிய திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் நிரம்பியிருக்கிறது.ஏனெனில்,சுக்கிரபகவான் புனர் ஜன்மம் எடுத்தது இந்த திருக்கோவிலூரில்தான்! தாம் மறுவாழ்வு பெற்ற இந்த கோவிலில் தம்மை வழிபடுபவர்களுக்கு சகலவிதமான சுக்கிரதோஷங்களையும் நீக்கி,சுகம் நிறைந்த வாழ்க்கையை அளித்துவருகிறார்.

ஆட்டோ ஓட்டுபவர்கள்,வாடகை கார்கள்/வேன்கள் வைத்து தொழில் செய்பவர்கள்,உணவகம் நடத்துபவர்கள்,இனிப்புப் பதார்த்தங்கள் தயாரிப்போர், இனிப்புக்கடைகள் வைத்திருப்போர்,பெண்கள் கல்வியகங்கள் வைத்திருப்போர்,கரும்புத்  தோட்டங்கள் வைத்திருப்போர்,சர்க்கரை ஆலை நடத்துவோர்,ஏற்றுமதி செய்யப்படும் விவசாயப் பொருட்கள் விளைவிப்போர்,ஃபேன்ஸி ஸ்டோர்கள் நடத்துபவர்கள்,அழகு நிலையம் நடத்துபவர்கள்,அழகுக்கலைப் பயிற்சி மையங்கள் நடத்துபவர்களுக்காக பின்வரும் வழிபாட்டுமுறையை நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த வழிபாட்டை தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் வரை மட்டும் பின்பற்றுவதன் மூலமாக மேற்கூறிய தொழில் அல்லது அது தொடர்பான தொழில்களில் அனைத்து தடைகளும் நீங்கி,மகத்தான வளர்ச்சியை எட்டுவார்கள் என்பது சர்வநிச்சயம்.இந்த ஆறு வெள்ளிக்கிழமைகளில் கடைசி அல்லது முதல் வெள்ளிக்கிழமை மட்டும் விழுப்புரம் அருகில் இருக்கும் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோவிலுக்குச் சென்று பின்வரும் பொருட்களால் அங்கே இருக்கும் சுக்கிர பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.அப்படி அபிஷேகம் செய்தபின்னர்,அந்த அபிஷேகத் தண்ணீர்க் கலவையை நமது வீட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.அதில்,நாம் குளிக்க வேண்டும். ஆறு வெள்ளிக்கிழமைகளுக்கு மேல் செய்யக் கூடாது.

அதே சமயம்,கடைசி வெள்ளிக்கிழமையன்று இங்கே வழிபாடு செய்யும்போது, மூலவராகிய திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரருக்கும் அபிஷேகம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.(வசதியுள்ளவர்கள் அதே நாளில் இங்கே இருக்கும் ஸ்ரீகால பைரவருக்கும் தனியாக ஒரு அபிஷேகம் செய்யலாம்.இந்த கால பைரவரையும்,இந்த வீரட்டேஸ்வரரையும் கருவூர் சித்தரின் வழிகாட்டுதலின் படி ராஜராஜசோழ மன்னன் தொடர்ந்து வழிபட்டார்; அப்படி வழிபட்டதால்,சோழ சம்ராஜ்ஜியம் உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமாக விரிவடைந்தது;எவ்வ்வ்வ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியமாகத் தெரியுமா? வடக்கே சைபீரியாதான் எல்லை; தெற்கே அண்டார்டிக்கா எல்லை;மேற்கே ஆப்ரிக்கக்கண்டமும்,கிழக்கே நியூஸிலாந்தும் எல்லையாக மிகப் பிரம்மாண்டமாக உருவெடுத்தது;இன்றும்,ஆஸ்திரேலியாவின் மேற்கு வனப்பகுதியில் தமிழ்ப்பேசும் ஆதிகுடிகள் வாழ்ந்து வருகிறார்கள்;இவர்கள் ராஜராஜசோழ மன்னன் காலத்தில் ஆஸ்திரேலியாவை ஆள்வதற்காக நமது தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப் பட்டவர்கள்!!!)

மல்லிகைப் பூக்களால் மட்டும் கட்டப்பட்ட மாலை மற்றும் போதுமான மல்லிகை உதிரிப்பூக்கள், விபூதி, மாப்பொடி,பால்,பன்னீர் இவைகளால் அபிஷேகம் செய்ய வேண்டும்.அபிஷேகத்தின் முடிவில் சுக்கிர பகவானுக்கு நாம் வாங்கி வந்த மல்லிகைப் பூக்களால் மட்டும் கட்டப்பட்ட மாலையையும்,வெள்ளைப்பட்டுத் துண்டினையும் சார்த்த வேண்டும்.யாருக்கு சுக்கிர தோஷம் நீங்க வேண்டுமோ,அவர்கள் பெயர்,பிறந்த நட்சத்திரம் சொல்லி, மல்லிகை உதிரிப்பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.இதன் மூலமாக சுக்கிரனால் ஏற்பட்டிருக்கும் தோஷங்கள் தீரும்.

சுக்கிரன் கன்னிராசியில் இருக்கப்பிறந்து,சுக்கிர திசை நடப்பில் இருப்பவர்களும்,சுக்கிர திசை இனிமேல் வர இருப்பவர்களும் இதே வழிபாட்டுமுறையை ஆறு பவுர்ணமி நாட்களுக்கு பின்பற்றிட சுக்கிரனது நீசத்தன்மை முழுமையாக நீங்கிவிடும்.

ஓம்சிவசிவஓம்

Wednesday, June 26, 2013

நட்சத்திரப்படி வணங்க வேண்டிய பைரவ ஸ்தலங்களில் இன்று பூச நட்சத்திரத்திற்குரிய "ஸ்ரீ வாஞ்சியம்" ஸ்தலத்தைப் பற்றி பார்ப்போம்.

கும்பகோணத்திலிருந்து நன்னிலம் வழித்தடத்தில் அச்சுத மங்களத்திலிருந்து தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது  ஸ்ரீ வாஞ்சியம் ஆகும்.

இறைவன்-ஸ்ரீ வாஞ்சிலிங்கெஸ்வரர்
இறைவி-மங்கள நாயகி
தீர்த்தம்-குப்த கங்கை

Sri Vanjiyam Temple

Sri Vanjiyam Temple

Sri Vanjiyam Temple

Sri Vanjiyam Temple

Sri Vanjiyam Temple

Sri Vanjiyam Temple

Sri Vanjiyam Temple


புனித நீராடல்:

திருவாஞ்சியத்தில் இருக்கும் குப்தகங்கையில் மகாசங்கராந்தி, அமாவாசை, அர்த்தோதயம், மஹோதயம், விஷீ,சூரிய,சந்திர கிரகணகாலம் கார்த்திகை, ஞாயிறு, சோமவாரங்கள், மாசிமகம், மார்கழி திருவாதிரை நட்சத்திரம் போன்ற தினங்களில் திருத்தலம் வந்து சிவபெருமானை வழிபடுவதற்கு முன்னரே மனம் உருகி நம் பாவங்களை நினைத்து முறைப்படி வழிபட்டு இப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் இவர்களின் சகல பாவங்கள் நீங்கி வருங்காலங்களில் சகல இன்பங்களும் பெற்று மறுமையில் நற்கதியடைவார்கள். காசியை விட 100 மடங்கு புனிதமானது. பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

முதலில் குப்தகங்கையில் நீராடி இடப்புறம் அக்னிமூலையில் தனிகோயில் கொண்டுள்ள எம தர்மராஜனை வணங்கி அதன் பின் வாஞ்சி நாதனை வழிபடவேண்டும்.

சிறப்பம்சம்:

திருவாஞ்சியலிங்கம் மிகவும் பழமையானது. 64 சுயம்பு லிங்கங்களில் ஒன்றான ஸ்ரீ வாஞ்சிநாதர்லிங்கம், மேரு, மந்திரகைலாசர்,  காசி, ஸ்ரீ சைலம் போன்ற சித்தி தரக்கூடிய தலங்கள் தோன்றுவதற்கு முன்வே தோன்றியது. சிவபெருமானே பார்வதி தேவியிடம் தமக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறியத் தலம் ஸ்ரீவாஞ்சியம் ஆகும்.

உலகிலேயே எம தர்மராஜனுக்காக தனிக்கோயில் அமைக்கப்பட்ட வழிபடும் தலமாக சிறப்பு பெற்றதும் ஸ்ரீ வாஞ்சியம் ஆகும். கோயிலின் அக்னி மூலையில் தனி கோயில் உள்ளது. மனிதன் இறந்த பிறகு தன் சந்ததிகள் யாரும் ஈமகாரியம் செய்வாரோ இல்லையோ என்ற கவலை உடையவன் உயிரோடு இருக்கையிலேயே இங்கு வந்து பிண்டம் போட்டு சடங்குகள் செய்யின் இவர்களது  இறப்புகுப் பின் கொடுக்க வேண்டிய  தானங்களை முன்னரே செய்தால் இறப்புக்குப் பின் நற்கதி அடைவார்கள்.

இத்தலத்திற்கு வந்து போவோரின் தரித்திரம் நீங்கப் பெற்று வளமுடன் கூடிய வாழ்க்கை பெறுவது நிச்சயம். திருவாஞ்சிநாதரை வழிபட்டவர்கள் பிரம்மா, விஷ்ணு, இந்திரன், சூர்யன்,  எமதர்மர், பைரவர்,கங்கை, அக்னி, கௌதமர், ஜமதக்னி, காச்சியபர், விசுவாமித்திரர், பரத்வாஜர், பராசர், மாமுனிவர்,  வசிஷ்டர்,  வால்மீகி ஆகியோர்.

பூமியில் தோன்றிய சுயம்பலிங்கங்கள் 64ல் மிகவும் முக்கியமானது  திருவாஞ்சியத்தில் இருக்கும்லிங்கம். இந்தலிங்கம் தான் உலகிற்கு முன்னதாக தொன்றியதாகவம் இந்த லிங்கத்துள் சதாசிவம் இருப்பதால் உலகெங்கும் உள்ளலிங்கங்கள் அனைத்தம் திருவாஞ்சியலிங்கத்தை வழிபட வணங்கிவருகின்றன. இந்த சுயம்லிங்கத்தை எவர் ஒருவர் பக்தியுடன் தரிசிக்கிறாரோ அவர் கைலாய நாதரை நேரில் தரிசித்து சிறப்பு பெறுவார்.

இங்கு பிரகராம் சுற்றிஉள்ள அனைத்து சுவாமிகளையும் தன் கைக்குள் கட்டளைக்குள் அடக்கியிருப்பதாகவும் அனைத்து சக்திகளையும் ஸ்ரீவாஞ்சிநாதரே கையகப்படுத்தியுள்ளவராக அருட்பாலிக்கின்ற காரணத்தால் அனைத்து சிவாலயங்களிலும் பிரசித்து பெற்றதாக திருவாஞ்சியம் திகழ்கின்றது.

பொதுவாக காசி சென்று வந்தவர்களுக்கு  எமபயம் இல்லை. ஆனாலும் பைரவ தண்டனை உண்டு. ஆனால் வாஞ்சியில் இறப்பொருக்கு எமபயம் பைரவ வதை கிடையாது. பைரவர் மண்டலத்தின் அதிபதி இத்தலத்தில் தனது ஆயுதங்களை கீழே போட்டு விட்டு யோகபைரவராக அமர்ந்து சிவனை வழிபட்டுக் கொண்டு காட்சி புரிகின்றார்.

இத்தலத்தில் எவன் ஒரு நிமிடமாவது அமர்கிறானோ அல்லது ஸ்ரீவாஞ்சியம் செல்ல வேண்டும் என மனதார நினைத்தால் கூட பொதும் அவன் ஊழிவினை நீங்க நற்கதி பெறுவான் என்பது முனிவர்களின் வாக்கு.

ஏவன் ஒருவன் காலை எழுந்தவடன் மனம் உருகி திருவாஞ்சியம் என்று மூன்று முறை சொல்கிறானோ அவனுக்கு பாவம் தீர்ந்து தோஷம் போய் முக்தி கிடைப்பது நிச்சியம்.

திருவாஞ்சியம் வந்து வழிபட பில்லி சூனியம் அதாவது செய்வினை என்று கூறப்படும் எதிர்வினைகள் அறவே அகன்று தூய்மை பெற முடியம். கொலை, தற்கொலை போன்ற துர்மரணங்கள் ஏற்பட்ட வீடுகளில் வரும் தொல்லை வர்ணிக்க முடியாது இருப்பினும் துர்மரணம் கொண்ட வீட்டில் வசிப்பவர்கள் ஸ்ரீவாஞ்சியம் வந்து பஞ்சதானம் கொடுத்து வழிபட்டால் துர்மரணம் பெற்றவர்களின் ஆத்மாசாந்தி அடைந்து கர்மா விலகி நற்பயன் பெறவர்.

கணவன்-மனைவி இடைவே ஊடல் எற்பட்டு பிரிந்தவர்கள் இங்கு வந்து மங்களாம்பிகையை வழிபட்டால் இருவருக்கமிடையே பாச உணர்ச்சிகளைத் தோற்றுவித்து இருஉள்ளங்களையம் இணைப்பதில் சிறப்பு பெற்றவராகத் திகழ்கிறார். இன்றம் விவாகரத்து பெற்ற தம்பதிகள் கூட இங்கு வந்து வழிபட்டதன் மூலம் இணைகின்றனர்.

இத்தலத்தில் ஆனந்தமாக யோகபைரவராக அமர்ந்திருக்கம் பைரவரை வழிபட நரம்பு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கி நலன் பெறலாம். தீர்க்க முடியாத வழக்களில் சிறைபட்பவர்கள் இங்குள்ள பைரவரை வழிபட்டால் நீண்டகால வழக்குகள் உடைந்து நல்ல பலன் கிடைக்கம்.

இங்குள்ள சுற்று பிரகாரத்தில் உள்ள பிள்ளையாரை வெண்ணெய் சாத்தி வழிபட தீராத வயிற்று வலி உடனே தீரும்.

ஸ்ரீ வாஞ்சியத்தில் மட்டுமே ராகவும் கேதுவும் ஒன்றாக ஓரே சிலையில் பாம்பு உடலாகவும் மனித முகமாகவும் ஓரே நிலையில் சஞ்சர்க்கின்றனர். ஓரே மூர்த்தியாக எழுந்தருளியுள்ள ராகு-கேதுவை வழிபட்டால் நாகதோஷம் காலசர்ப்பதோஷம் நீங்கி நலம் பெறலாம்.

கிரகங்களில் வலிமை மிக்க சனிபகவானை கிரகமாக இரு என ஆக்ஞை பிறப்பித்த தலம் ஸ்ரீ வாஞ்சியம். சுனிபகவான் அதிதேவதையான எமதர்ம ராஜா தனி சன்னதியில் எழுந்தருளியிருப்பதால் சனி சம்பந்தப்பட்;ட தொல்லைகள்  உபாதைகள் நீங்கப் பெறுவர். சனி உபாதையிலிருந்து ஒருவன் விடுபடுவான் என்று விதி   இருக்குமேயானால் தன்னுடைய தெய்வ பலத்தினாலேயோ மூதாதையோர் தவ வலிமையினாலேயோ தன்னை அறியாமல் ஏதாவது ஒரு காரணத்ததைச் சொல்லி இங்கு வந்து என்னை வழிபட்டு உன்னை வழிபடுவான் என்பது ஸ்ரீ வாஞ்சிநாதரின் பிரதான வாக்காகும்.

ஓவ்வொரு அமாவாசையும் பிதிர் கர்மங்கள் செய்யாதவர்கள் இங்கு வந்து கொடுப்பின் நன்னை உண்டாகும்.

தொலைபேசி எண்கள் : +91-4366 291 305, 94424 03926, 93606 02973

Thursday, June 20, 2013

Gayatri Mantra
ஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி?

மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான் இருக்கிறது. லட்சக் கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சில வழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர்.

1. எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது.

சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது.

உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும். வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக் கூடாது. அறுபது நாழிகை நேரமும் எல்லாக் கர்மங்களும் தான் ஜபிக்கும் ஒரு மந்திரத்தினாலேயே ஆகிறது என்ற நிச்சயம் உடையவராக உபாசகன் இருக்க வேண்டும்.

2. ஒரு மாதத்தில் மந்திர ஸித்தி அடையலாம். ஒரு கிருஷ்ணாஷ்டமி தொடங்கி அடுத்த கிருஷ்ணாஷ்டமி முடிய. நாள் ஒன்றுக்கு 108 முறை நியமத்துடன் ஜபம் செய்வதால் மந்திர ஸித்தி உண்டாகிறது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது ஒன்று மந்திரத்திற்கு முன்னும் பின்னும் மாத்ருகா அக்ஷரங்கள் 51ஐ ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் அமைத்து ஜபம் செய்ய வேண்டும். இப்படி மாத்ருகா ஸம்புடிதமாக மந்திரத்தை நாளொன்றுக்கு 108 தடவையாக ஒரு மாதம் ஜபம் செய்ய வேண்டும். கிருஷ்ணாஷ்டமி போல கிருஷ்ண சதுர்தசீ சுக்ல அஷ்டமி, சுக்லி சதுர்தசீ திதிகளும் இந்த ஜப முறைக்கு ஏற்றவையே.

3. மாத்ருகா ஸம்புடீகரணமில்லாமல் ஒரு மாதத்தில் மந்திர ஸித்தியை விரும்புகிறவர், இந்த குறிப்பிட்ட திதிகளில் தொடங்கி குறிப்பிட்ட அடுத்த திதிகளில் முடியுமாறு நாள் ஒன்றுக்கு 1008 முறை மூலமந்திரத்தை மட்டும் ஜபம் செய்தால் வெற்றியடையவது நிச்சயம்.

4. மாத்ருகா அக்ஷரங்களில் பூதலிபி வரிசை என்று ஒரு முறை உள்ளது. அவ்வரிசைப்படி மூல மந்திரத்திற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு எழுத்தைக் கூட்டி நாள் ஒன்றுக்கு 1008 முறை ஜபம் செய்தால் மந்திர ஸித்தி நிச்சயம்.

5. ரிக்வேதப்ராதி சாக்யத்தில் 63 எழுத்துகள் கொண்ட ஒரு அரிச்சுவடி இருக்கிறது. அதிலுள்ள 63 எழுத்துகளை ஏறுஇறங்கு வரிசைகளில் மந்திரத்தின் முன்னும் பின்னும் முறையே கூட்டி நாள் ஒன்றுக்கு 108 முறை மூலமந்திரம் செய்வதாலும் மந்திர ஸித்தி நிச்சயம்.

6. கிருஷ்ணாஷ்டமி தொடங்கி கிருஷ்ண சதுர்த்தசீ வரை உள்ள ஏழே நாட்களில் மொத்தம் கூட்டி 40,000 எண்ணிக்கை வரும்படி மந்திர ஜபம் செய்ய வேண்டும். இந்த ஏழு நாள் ஜபமுறையில் தசாம்சக் கணக்கில் ஹோமம் முதலானவைகளும் செய்ய வேண்டும். இந்த ஜபம் நாள் ஒன்றுக்கு 5714 ஆகும். கடைசி நாள் 5716 ஆகும். அந்தந்த நாளில் ஹோமம் தசாம்ச கணக்கில் செய்ய வேண்டும்.

7. சூர்ய சந்திர கிரஹண காலம் பூராவும் ஒரு மந்திரத்தை ஜபம் செய்வதால் அம்மந்திரம் ஸித்தியாகிறது.

8. ஒவ்வொரு இரவு (இரவு முழுவதும்) சர்வ உபசாரங்களுடன் மூன்று முறை நவாவரண பூஜையை ஒரு மாத காலம் செய்வதால் மந்திர ஸித்தி ஏற்படுகிறது.

9. மாத்ருகா அக்ஷரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூலிகையாக பிரபஞ்சசாரம் கூறுகிறது. தான் ஸித்தி செய்ய வேண்டிய மந்திரத்தில் உள்ள எழுத்துக்களுக்குரிய மூலிகைகளை எல்லாம் கூட்டிப் பொடி செய்து குளிகைகளாகச் செய்து கொண்டு அவற்றை ஜபம் செய்யும் போது வாயில் அடக்கிக் கொண்டிருப்பதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.

10. மகாபாதுகையை தனது ஸகஸ்ரார சக்ரத்தில் தியானம் பண்ணுவதால் மந்திரம் ஸித்தியாகிறது. மஹாபாதுகைக்குள் மந்திரம் அடக்கியிருப்பதாலும் மஹாபாதுகைக்கு மேம்பட்ட வேறு மந்திரமே இல்லாததாலும் மகா பாதுகா தியானத்தால் அடைய முடியாதது ஒன்றில்லை.

11. ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி பரோக்ஷ ஞானம் திருடமாகக் கைவரப்பெற்றவன். மந்திரத்திற்கு முந்தியும், பிந்தியும் சிவோஹம் என்ற பாவனையுடன் மந்திர ஜபம் செய்வதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.

12. அஹம் ப்ரஹ்மாஸ்மி அல்லது ஈம் என்ற பரா காமகலா அக்ஷரத்தையோ முன்னும் பின்னும் மந்திரத்தில் கூட்டி ஜபம் செய்வதால் ஸகல ஸித்திகளும் கிடைக்கின்றன.

ஜபத்திற்குரிய இடங்கள்


ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று கீதையில் 6வது அத்தியாயத்தில் 11 - 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.

சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும்.

பூஜை அறை, பசுக்கொட்டில், நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம்.

கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது.

சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றது. பத்ராஸனம், முக்தாஸனம், மயூராஸனம், ஸித்தாஸனம், பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம், கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம். பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது.

கருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதி; வெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்; மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்; புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்) கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.

நன்றி : தினமலர் 

Wednesday, May 22, 2013


சென்ற பாடங்களை படித்தவர்களுக்கு சித்த வித்தையின் அடிப்படை நோக்கம் விளங்கியிருக்கும். பொதுவாக நாம் ஸ்தூலத்திலுள்ளவற்றையே உண்மையென நம்பி வாழ்கிறோம், ஆனால் ஸ்தூலத்தையும் தாண்டி எமது ஸ்தூல புலன்களுக்கப்பால் இருக்கும் சக்திகளால் நாம் கட்டுப்படுத்துவதையும் உணர்கிறோம். அவற்றை எப்படி கட்டுப்படுத்துவது, வசப்படுத்துவது என்ற ஆய்வில் மனிதன் கண்ட இருதுறைகள்தான் ஆன்மவிஞ்ஞானம், பௌதீக‌ விஞ்ஞானம்.

பௌதீக விஞ்ஞானம் புறவயச் சூழலை ஆராய்வது, ஆன்ம விஞ்ஞானம் அகச்சூழலை ஆராய்வது. ஆன்ம விஞ்ஞானத்தின முதல் நோக்கம் தன்னையறிதல் மூலம் தலைவனை அறிதல் என்பதாகும். ஆதலால்தான் அண்டத்தில் உள்ளதெல்லாம் இந்த பிண்டத்தில் உண்டு என சித்தர்கள் சொல்லிவைத்தார்கள். ஆகவே சித்த வித்தையினை, அதன் செயற்பாட்டினை தெளிவாக விளங்கி, அதன் வரைமுறைகள், பிரயோகங்கள் என்ன என்பதனை தெரிந்துகொள்ள முதலாவது நாம் மனிதராகிய எம்மைப் பற்றி அறிந்துகொள்வதாகும்.
 • மனிதன் தனது அமைப்பினை அறிந்துகொள்ள சில விதிகளை புரிந்துகொள்ளவேண்டும்.
 • எந்தவொரு பொருளும் அதன் அமைப்பில் சூக்ஷ்மம், ஸ்தூலம் என இரு இருப்பைக் கொண்டிருக்கும்.
 • எந்தப்பொருளும் சூக்ஷ்மத்திலிருந்தே ஸ்தூலதன்மைக்கும் வரும்.சூக்ஷ்மத்தில் இல்லாத எதுவும் ஸ்தூலத்தில தோன்றாது.
 • இவற்றுக்கிடையிலான இணைப்பு பிராண சக்தி எனும் உயிர் சக்தியால் உருவாக்கப்படுகிறது.
இந்த மூன்றுமே இன்றைய பாடத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட விடயங்களாகும். மற்றும் சில ஆழமான விடயங்கள் காணப்பட்டாலும் அவை பின்வரும் காலங்களில் எடுத்துகொள்ளப்படும்.

மேற்குறித்த விதியின் படி மனிதனது அமைப்பு கீழ்வரும் படத்தில் உள்ளவாறு காணப்படும்.


ஆக சித்த வித்தையின் படி மனிதனின் சூஷ்மம் ஸ்தூலம் இரண்டை பற்றியும் அறிதல் வேண்டும். மேற்கூறிய படத்தில் குறிப்பட்ட விடயங்களை சித்தர்களது நூற்களில் பஞ்ச கோசம், அந்தக்கரணம் எனும் சொற்கள் மூலம் அறியலாம். பொதுவாக சித்தர் பாடல்களுக்கு பொருள் கூறுபவர்கள் இவற்றை எது தனிப்பட அடுக்குகளாக இருப்பதாக கூறியிருப்பதை காணலாம், சூஷ்ம உடலின் கூறுகள் யாவும் ஒன்றுடன் ஒன்று கலந்தவை. தனிப்பட அடுக்குகளாக (layers) இருப்பதில்லை.

மேலே கூறப்பட்டதன் படி சூஷ்மத்தினை எமக்கு கட்டுப்படுத்தும் சக்தி வந்தால் ஸ்தூலம் தானாக கட்டுப்படும் என்பதே அனைத்து சாதனைகளினதும் குறிக்கோளாகும்.

இந்த அடிப்படையின் படி பிராணன் தான் ஸ்தூலத்திற்கும் சூஷ்மத்திற்கும் இடையிலான பாலமாகும்.  பிராணனுடன் கலந்துதான் ஸ்தூல சூஷ்ம உடல்கள் நன்மையோ தீமையோ பெறுகின்றன.

நன்மையையும் தீமையும் எவை என்பதனை அந்தக் கரணங்கலான மனம், புத்தி, சித்த அகங்காரங்கள் தீர்மானிக்கின்றன.

உதாரணம் மூலம் விளங்குவதானால் கணணி ஒன்றில்
 • வெளியே தெரியும் கணணி (Computer hardware) - ஸ்தூல உடல்
 • அதிலுள்ள அசம்பிளி லாங்குவேஜ் (Assembly language) - அகங்காரமும் ஆன்மாவும் கலந்த நான் எனும் உணர்வு .
 • புரோகிராமிங் லொஜிக் (Programming logic) - புத்தி
 • விண்டோஸ் புரோகிராம் (Windows program) - சித்தம் ஆகிய ஆழ்மனம்
 • மொனிட்டர் (monitor)  - புறமனம்
இவற்றை விளங்குவதன் மூலம் ஒருவருடைய இந்த ஒவ்வொரு பகுதியையும் கட்டுப்படுத்த எப்படி சில தகமைகள் வேண்டுமோ அப்படி எமது ஸ்தூலத்தினையும் சூஷ்மத்தினையும் கட்டுப்படுத்தும் பயிற்சிதான் சித்த வித்தை, யோகபயிற்சி இவையெல்லாம்.

இந்த அடிப்படையினைப் பற்றிய மேலதிக விளக்கங்களை தகுந்த இடங்களில்  பார்ப்போம்.

அடுத்த பாடத்தில் எந்த சாதனைக்கும் முக்கியமான மனதினை சுத்தி செய்யும் சாதனை பற்றி அடுத்த பாடத்தில் பார்ப்போம்.

ஓம் ஸத்குரு பாதம் போற்றி!
ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ:

நன்றி : உயர்திரு.சுமணன் அவர்கள்

Monday, May 6, 2013

யோகா பைரவர், திருப்பத்தூர்
வ. எண் நட்சத்திரங்கள் பைரவர் அருள்தரும் தலம்
1. அசுவினி ஞானபைரவர் பேரூர்
2. பரணி மகாபைரவர் பெரிச்சியூர்
3. கார்த்திகை அண்ணாமலை பைரவர் திருவண்ணாமலை
4. ரோகிணி பிரம்ம சிரகண்டீஸ்வரர் திருக்கண்டியூர்
5. மிருகசிரிஷம் க்ஷேத்திரபாலர் க்ஷேத்ரபாலபுரம்
6. திருவாதிரை வடுக பைரவர் வடுகூர்
7. புனர்பூசம் விஜய பைரவர் பழனி
8. பூசம் ஆஸின பைரவர் ஸ்ரீவாஞ்சியம்
9. ஆயில்யம் பாதாள பைரவர் காளஹஸ்தி
10. மகம் நர்த்தன பைரவர் வேலூர்
11. பூரம் பைரவர் பட்டீஸ்வரம்
12. உத்திரம் ஜடாமண்டல பைரவர் சேரன்மகாதேவி
13. அஸ்தம் யோகாசன பைரவர் திருப்பத்தூர்
14. சித்திரை சக்கரபைரவர் தர்மபுரி
15. சுவாதி ஜடாமுனி பைரவர் பொற்பனைக்கோட்டை
16. விசாகம் கோட்டை பைரவர் திருமயம்
17. அனுஷம் சொர்ண பைரவர் சிதம்பரம்
18. கேட்டை கதாயுத பைரவர் சூரக்குடி
டி.வயிரவன்பட்டி திருவாடுதுறை, தபசுமலை
19. மூலம் சட்டைநாதர் சீர்காழி
20. பூராடம் வீரபைரவர் அவிநாசி, ஒழுகமங்கலம்
21. உத்திராடம் முத்தலைவேல் வடுகர் கரூர்
22. அவிட்டம் பலிபீடமூர்த்தி சீர்காழி, ஆறகழூர்
(அஷ்டபைரவ பலிபீடம்)
23. திருவோணம் மார்த்தாண்ட பைரவர் வயிரவன் பட்டி
24. சதயம் சர்ப்ப பைரவர் சங்கரன்கோவில்
25. பூரட்டாதி அஷ்டபுஜபைரவர் கொக்கரையான்பேட்டை, தஞ்சாவூர்
26. உத்திரட்டாதி வெண்கலஓசை பைரவர் சேஞ்ஞலூர்
27. ரேவதி சம்ஹார பைரவர் தாத்தையாங்கார்பேட்டை
மேற்கூறிய நட்சத்திரக்காரர்கள் பைரவர் ஸ்தலத்தில் விளக்கு ஏற்ற முடியவில்லை என்றால் அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று பைரவருக்கு விளக்கு ஏற்றவும்.

செய்முறை : பைரவர் தெய்வீக மூலிகை பொடியை சிகப்பு துணியால் மட்டும் கட்டி தேய்பிறை அஷ்டமி (அல்லது) ஞாயிற்றுக்கிழமை 4.30 முதல் 6.00 இராகு காலம் நேரத்தில் 64 தீபங்களை முதலில் ஏற்ற வேண்டும். பிறகு பைரவரிடம் தங்களின் குறைகளை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டில் தினமும் காலை இரண்டு தீபம் வீதம் மாலை இரண்டு தீபம் வீதம் சுத்தமான பசுநெய் அல்லது நல்லெண்ணெய் ஆகிய இரண்டில் மட்டும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவும்.

மூல மந்திரம் :
ஓம் ஹ்ராம் ஹ்ரூம்; ஹ்ரைம்
க்ஷரௌம், ஷம், ஷேத்ரபாலாய நம:

பலன்கள் : திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சனை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.

Sunday, May 5, 2013


சென்ற பாடத்தில் கூறப்பட்டதின் படி சூஷ்மத்திலுள்ள உங்களுக்கு விருப்பமான ஒரு குருவினை தேர்ந்தெடுத்திருப்பீர்கள் என நம்புகிறேன். அவ்வாறாயின் அவரது பெயரிற்கு முன்னால் "ஓம்" சேர்த்து இறுதியில் 'நமஹ/போற்றி" சேர்த்து அதனை ஒரு எளிய மந்திரச் சொல்லாக்கிக் கொள்ளவும். உதாரணமாக "ஓம் அகஸ்திய மகரிஷியே நமஹ" என்றவாறு உருவாக்கிக்கொண்டு அவரது படத்தினையோ, தீப ஒளியினையோ ஒரு இடத்தில் நிரந்தரமாக கண்பார்வை மட்டத்தில் இருக்குமாறு வைத்துக்கொள்ளவும். குறித்த இடம்  வீட்டின் பூஜை அறையில் அல்லது சுத்தமான ஒரு சிறு இடத்தில் இடம் ஒதுக்கிக் கொள்ளவும், அந்த இடம் வேறு எந்தப் உபயோகத்திற்கும் இல்லாததாக இருத்தல் வேண்டும். அந்த இடம் நீங்களும் குருநாதரும் தொடர்பு கொள்வதற்கான இடமாக மட்டும் இருக்கவேண்டும்.

பின்பு குறித்த நேரத்தில் அமைதியாக அமர்ந்து கண்ணை மூடி சில வினாடிகள் மெதுவாக ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டு (வேறு எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்) குருநாதரின் உருவத்தையோ அல்லது தீப ஒளியினையோ பார்த்தவண்ணம் நாமத்தினை ஐந்து நிமிடமோ அல்லது 108 தடவையோ மனதில் உச்சரித்த வண்ணம் (முடியாவிட்டால் ஆரம்பத்தில் சத்தமாக உச்சரித்து பின் மானசீகமாக செய்யவும்) அவருடன் அன்பு கலந்த பார்வையாக செலுத்தவும். மனதில் எமக்கு விருப்பமான ஒருவரை வரவேற்க எப்படி காத்திருப்போமோ அந்த உணர்ச்சி பாவத்தில் இருக்கவும். இப்படி நாமத்தினை உச்சரித்து முடித்தவுடன் மனதில் அன்புடன் கீழ்வரும் பொதுவான பிரார்த்தனையினை மனதால் வேண்டவும் "குரு நாதா எனது செயல்களுக்கு காரணமான மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்களை தங்களிடம் ஒப்படைக்கிறேன், அவற்றை நல்ல அதிர்வுடையவை ஆக்கி உங்களுடன் எப்போதும் இணைந்தவையாய் எப்போதும் நானும் நீங்களும் ஒன்றே என நிலையில் எனது மனமும் செயலும் நல்லதாகிடவும், என்னிலும், என்னைச் சூழவாழ்பவர்கள் வாழ்விலும், குடும்பத்திலும், ஊரிலும், நாட்டிலும், பூமியிலும் அன்பு, ஆனந்தம்,ஞானம், செல்வம் நிறைந்து ஒத்திசைவாய் வாழ அருள் புரியவேண்டும்" என மூன்று முறை பிரார்த்திக்கவும்.

இதன் பின்பு உங்களது உடனடித்தேவையான தனிப்பட்ட பிரார்த்தனை ஒன்றை மட்டும் செய்யவும், குறித்த ஒன்று நிறைவேறும் வரை அந்த ஒரு பிரார்த்தனையினை மட்டுமே செய்யவும், உதாரணமாக " எனது தகுதிக்கும் ஆற்றலிற்கும் தக்க வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் குருதேவா" என்று பிரார்த்திக்கவும். இதற்கு பின்னர் கண்ணைத்திறந்து சில நிமிடங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை அவதானித்து வாருங்கள். முதலில் தோன்றும் எண்ணங்களை ஒரு குறிப்பேட்டில் குறித்து வரவும். 

தனிப்பட்ட வேண்டுதலிற்கு ஒரு காரியம் நிறைவேறிய பின் மற்றைய காரியத்தினை பிரார்த்திக்கவும்.  நிதானமாக சிந்தித்து உங்கள் தேவைகளை வரிசைப்படுத்தி முக்கியமானதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்யும் பொது நிச்சயமாக வெற்றி பெறுவதுடன் உங்களுக்கு நம்பிக்கையும் பிறக்கும்.

தொடங்குவது ஒரு வியாழக்கிழமையாக இருத்தல் நல்லது.

இதனை காலையும் மாலையும் தொடர்ந்து செய்து வரவும். இந்த பயிற்சி வாழ்நாள் பயிற்சியாக இருக்கட்டும். இதில் எந்த கடமை மனப்பான்மையும் வரக்கூடாது. அதாவது பலனை எண்ணி ஒரு முறை செய்வது பின்பு விடுவது என்பதல்லாமல் எந்த எதிர் பார்ப்பும் இன்றி நாளாந்தம் செய்து வாருங்கள். இப்படி தொடர்ச்சியாக செய்துவரும் காலத்தில் முதலில் உங்கள் சிந்தனை மனம் (rational mind) குரு கூறுவது போல் வந்து தவறாக வழி காட்டக்கூடும். ஆனால் தொடர்ச்சியான முயற்சியாலும் பயிற்சியாலும் ஆழ்மனது குருவுடன் தொடர்பு கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும். அதன் பின்பு உங்கள் முடிவுகள் மனதில் தோன்றும் எண்ணங்கள் சரியானதாகவும் வெற்றி பெறக்கூடியவையாகவும் இருக்கும்.

நாளாந்த கடமைகள் தவிர்ந்து மனதில் எந்த ஒரு புதிய எண்ணம் தோன்றினாலும் ஒருதடவை மனதிற்குள் "குரு நாதா இந்த எண்ணம் சரியானதா? செயற்படுத்தலாமா?" எனக்கேட்டு சிறிது நேரத்தின் பின்னர் (வாழ்க்கையின் முக்கிய விடயங்களாக இருந்தால் சில நாள் தொடர்ச்சியான பிரார்த்தனையின் பின்னர் ) அதனை செயற்படுத்துவதற்கான வழி முறைகளில் இறங்கவும்.  இப்படி நீங்கள் செய்யும் போது சரியான பாதையில் செல்வதற்கான வழியினை குரு நாதர் ஏற்படுத்தித் தருவார் .

இப்படி செய்து கொண்டு வரும்போது உங்களது சித்தமாகிய ஆழ்மனம் விழிப்படைய தொடங்கும். இந்த ஒரு சாதனை மட்டுமே போதும் நீங்கள் அனைத்து ஞானத்தினையும் அடைவதற்கான வழி.

நிபந்தனைகள்
 • இந்தப் பயிற்சியில் வரும் குரு நாதர் தொடர்பு கொண்டு தனது சுய பிரச்சனைக்கு (உங்களிற்கும்  குடும்பத்தினரிற்கும்) மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது சுய நலமாக இருக்கின்றதே என்று புலம்புவராக இருந்தால் சற்று காத்திருங்கள், வரும் பாடங்களில் விடை கிடைக்கும்.
 • தீய எண்ணங்களை செயற்படுத்துவதற்கான பிரார்த்தனைகள் செய்தல் கூடாது.
 • மன ஒழுக்கங்களை வளர்த்துக் கொள்வது விரைவாக சாதனையில் சித்தி பெற இன்றி அமையாதது. அவை பற்றி அறிந்து கொள்ள கீழ்வரும் இணைப்பில் பார்க்கவும்.
அன்பர்களே இப்போது நீங்கள் பயமில்லாமல் சித்த வித்தை கற்கலாம் என்ற நம்பிக்கை தங்களுக்கு வந்திருக்கும் என எண்ணுகிறேன். இந்தப்பயிற்சியினை செய்து உங்களுக்கும் குரு நாதருக்கும் இடையிலான தொடர்பு வலுப்பட்டவுடன் அடையும் பலன்களை நீங்கள் அனுபவித்து எமக்கும் கூறுங்கள்.

ஓம் ஸத்குரு பாதம் போற்றி!
ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ:

நன்றி : உயர்திரு.சுமணன் அவர்கள்

சென்ற பதிவில் குருகுலவாசம் பற்றி பார்த்தோம், இந்த பதிவில் நாம் கூறிய முறைப்படியான குருகுல வாசத்திற்கான படிமுறைகள் என்னவென்று பார்ப்போம்.

1 . மனதில் இவற்றை  கற்க வேண்டும் என்ற விருப்பம்.

எவன் ஒருவன் அமைதியான மனத்துடன், மௌனமாக, ஒருமைப்பட்ட மனதுடன் அறிவைத்தேடுவதற்கான பயணத்தினை அடைகிறானோ, அவன் சித்த வித்தையினையோ மற்ற எந்த அறிவினையும் அடைவதற்குரிய பாதையினை அறிகிறான், அப்படிப்பட்டவன் எப்போதும் குருவை அடைகிறான். இதுவே சித்த வித்தைக்கான முதல் அடிப்படை. இதனை நன்கு மனதில் பதியவைத்துக்கு கொண்டு இனி விளக்கங்களைப் பார்ப்போம்.

ஒரு நல்ல வளமான நிலத்தில் தரமான விதையினை விதைத்து அதற்கு தகுந்த உரமிட்டு, நீர்பாய்ச்சி பராமரித்தால் சிறந்த விளைச்சலையும் கனிகளையும் பெறுவது போல் இந்தப்பாடங்களை கற்பதால் உங்களது சித்தமாகிய ஆழ்மனதில் இவற்றின் அடிப்படை விதைக்கப்படும். விதைகள் தகுந்த சித்த மானச பக்குவம் வரும் பொழுது பலனினைத்தரும். ஆதலால் ஆர்வமுடன் இவற்றைப் படித்து மட்டுமே வருவீர்களானாலேயே ஆனால் கூட‌ அவை உங்களுக்கு தகுந்த பக்குவம் வரும் சூழ்நிலைகளில் உதவும். அத்த‌கைய‌ நிலையின் பின்பு இதில் கூற‌ப்ப‌ட்ட விட‌ய‌ங்க‌ள் உங்க‌ள‌து சொந்த‌ அனுப‌வ‌ங்க‌ளாகும்.

2. குருவின் சூஷ்ம தொடர்பு பெறுதலுக்கான விதி 

இன்று குரு தத்துவம் தனிமனித போற்றுதல்களாகவே உள்ளது. சித்த வித்தைப்படி குருதத்துவம் என்பது என்ன என்பதனை இங்கு பார்த்துவிட்டு மேலே செல்லவும்.

ஆக குருதத்துவம் என்பது எல்லையற்ற பிரபஞ்ச அறிவு அவற்றை பெரும் தன்மையினை எம்மில் உருவாக்கிக் கொள்ளும் முறைதான் குரு சிஷ்ய பாவம்.

அடுத்து குருவிட‌மிருந்து வித்தையினைப் பெறுவ‌தும் ச‌ரியாக‌ விள‌ங்கிக் கொள்வ‌தும் எப்ப‌டி? ப‌ல‌ரிற்கு நேருக்கு நேராக நின்று விள‌ங்க‌ப்ப‌டுத்தினால் ம‌ட்டுமே குருவிடம் வித்தை பெறுத‌ல் என‌ உறுதியாக‌ எண்ணுகின்ற‌ன‌ர், அது ஒருவ‌கையில் உண்மையாக‌ இருந்தாலும் குருவிட‌ம் இருந்த எல்லோரும் வித்தைக‌ளை அறிந்த‌வ‌ர்க‌ள் இல‌ர். அதேபோல் குருவை விட்டு பௌதீகமாக‌ தூரத்தில் இருந்தவர்கள் பலர் அரிய ஞானத்தினைப் பெற்றிருக்கிறார்கள். அப்ப‌டியானால் ஒரு சில‌ர் ம‌ட்டுமே குருவிட‌மிருந்து வித்தை பெற‌ த‌குதியான‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ம்தான் என்ன‌? இத‌ற்கு த‌த்துவ‌ ரீதியாக‌ ப‌ல‌வித‌ (பூர்வ‌ புண்ணிய‌ ப‌ல‌ன், குரு அருள் என‌) ப‌ல‌வித‌ விள‌க்க‌ங்க‌ள் இருப்பினும் நாம் இங்கு கூற‌வ‌ருவ‌து இத‌ற்கான‌ விஞ்ஞான அடிப்படையிலான‌ கார‌ண‌த்தினை, இத‌ன் மேல‌திக‌ விள‌க்க‌ங்க‌ள் எண்ண‌த்தின் இய‌க்க‌விய‌ல் என்ற‌ ப‌குதியில் விரிவாக‌ விள‌க்க‌ப்ப‌டும். இங்கு இத‌ன் அடிப்ப‌டையினை விள‌க்கி விடுகிறேன்.

இங்கு பௌதிக‌விய‌ல் கோட்பாட்டினை அடிப்ப‌டையாக‌ கொண்டால் எந்த‌ ஒரு எண்ண‌மும் அலைவ‌டிவ‌த்தினை (மூளையில் எண்ண‌ அலைக‌ள் ஆல்பா, பீட்டா, காமா, தீட்டா ஆகிய‌ அலைவ‌டிவாக‌ உருவாகுவ‌தாக‌ ஈ.ஈ.ஜி க‌ற்கைக‌ள் தெரிவிக்கின்ற‌ன‌)))0)) கொண்டிருக்கின்ற‌ன‌... பௌதிக‌விய‌ல்/இய‌ற்பிய‌ல் க‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு தெரியும் அலைக‌ள் ப‌ரிவுறும் என்ப‌து. ப‌ரிவு (resonance) என்பது ஒவ்வொரு அலையும் குறித்த அதிர்வினை (frequency) அடையும் போது மிக உயர்ந்த அலைவேகத்தினை அடையும். இந்த ஒத்த அதிர்வு நிலையினை அடையும் போது குறித்த தொகுதிகள் தமக்கிடையே சக்திப்பரிமாற்றத்தினை ஏற்படுத்திக் கொள்ளும். இந்த சக்திப்பரிமாற்றம் நிகழும் சந்தர்ப்பங்கள் பலவாறக இருக்கலாம். இந்த அடிப்படையிலேயே மானச, சித்த வித்தைகள் அனைத்தும் இயங்குகின்றன. இது எப்படி எனப்பார்ப்போம்.

சித்த வித்தையின் படி (மற்றைய முறைகளும்தான் பூஜை, உபாசனை, யோக சாதனை, தாந்திரீகம்) நாம் எமது சக்தியினை அதிகரித்துக் கொள்வதே எமது இலக்கு. அதாவது உயர் சக்திகளுடன் எமது  எண்ண அலைகளை பரிவுறவைத்து தொடர்புகொள்ளுவதனால் எமது சக்தியினை  அதிகரித்துக்கொள்ளலாம். அதன் படி எமது தற்போதைய "இயற்கையான எண்ண அதிர்வினை” ஒரு ஒத்திசைவானநிலைக்கு (Harmonic state) கொண்டுவந்து, பின்னர் உயர்ந்த அதிர்வொன்றுடன் (higher frequency) சமப்படுத்தும் போது எமக்கு உயர்ந்த அதிர்வின் சக்திப்பரிமாற்றம் (energy transfer) கிடைக்கிறது, இவற்றை ஆரம்பத்தில் சிறுகச் சிறுக செய்து நீண்டகாலச் சாதனையில் எம்முடன் நிலைக்கச் செய்தலே சித்த வித்தையின் இலக்கு. இப்படிச் செய்து சித்தி பெற்றதால்தான் சித்தர்கள் என பெயர் வந்தது

3 . குருவின் சூஷ்ம தொடர்பே உண்மையான குரு சிஷ்ய தொடர்பு


எம்மிடம் மனம் இருக்கிறது, தற்போது அதனை உயர் சக்தியுடன் பரிவுறச் செய்யவேண்டும். உயர் சக்தி எது எம்மைப்பொறுத்தவரையில் "குரு", எம் அனைவருக்கும் ஆதி குரு அகஸ்திய மகரிஷி, ஆகவே அவருடைய அதிர்வுடன் எமது அதிர்வை பரிவுறச்செய்வதால் எம்முள்ளே அவரது சக்தியினை பெற்றுக் கொள்ளலாம். அவர் பெற்ற சக்திகள் அனைத்தும் மன, சித்த அலைகளாக பிரபஞ்சத்தில் உள்ளன, அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் அவருடன் ஒத்திசைவதே!

இந்த இடத்தில் அகஸ்திய மகரிஷி என ஒருவரை மட்டுமே நீங்கள் தொடர்புகொள்ளவேண்டும் எனச் சொல்லவில்லை, உங்களுக்கு விரும்பிய எந்தச் சித்தரையோ, தெய்வங்களையோ, தேவதைகளைக் கூட அழைக்கலாம். எப்படியாயினும் அகத்தின் இயல்பை அறிந்த உயர் பிராண சக்தியுடைய ஞான சித்தர் ஒருவரை வழிகாட்டியாக பெற்றால் உங்களது சக்தியினை உயர்த்திக்கொள்ளலாம், ஞானத்தினையும் பெற்றிடலாம் என்பதுதான் கருத்து.

எப்படி ஒத்திசைவது? அதற்கு இறைவன் அளித்த கொடையே சித்தம் எனும் ஆழ்மனம்.

அதை இயக்குவது எப்படி? தொடர்ச்சியான எண்ணம்! ஜெபம்

ஆம் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய சக்தினை தொடர்ச்சியான எண்ண அலை மூலம் சித்தத்தில் பதிப்பிக்கும் முயற்சிதான் ஒரே வழி!

ஆகவே சித்த வித்தை கற்பதற்கு  ஆரம்பத்திலிருந்தே குருவுடன் சூஷ்ம தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வதும், மனம், சித்தம் ஆகியவற்றை ஒத்திசைவாக வைத்துக் கொள்வதும் சித்த வித்தையினை கற்பதற்கான முக்கியமான அடிப்படை தேவையாகும்.

4 . சித்த வித்தையின் தன்மையினை  புரிந்துகொள்ளுதல் 

சித்த வித்தை என்பது நாம் தற்காலத்தைய அறிவுத்தேடலில் ஆசிரியர் ஒருவரிடமோ, விரிவிரையாளர் ஒருவரிடமோ வகுப்பு போய் படிக்கும் விடயமல்ல. எல்லா அறிவும் பிரபஞ்சமாகிய ஆகாய மனதில் (Cosmic mind) உறைந்துள்ளது. அவற்றை அறிந்துகொள்ள சூஷ்ம தன்மையுடைய சித்தம்  எனும் ஆழ்மனம் மனிதனிற்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. அதனை செயற்படுத்தி நாமாக அவற்றை அறிந்துகொள்ளும் பயிற்சிதான் சித்த வித்தை. ஆகவே ஒரு விடயத்தினை நன்கு புரிந்துகொள்ளுங்கள் உங்களுக்கு யாரும் எதுவும் கற்பித்து விடமுடியாது, குருவானவர் அவற்றை அறிவதற்கு உரிய முறைகளை மட்டுமே தருவார். அவற்றை பயிற்சித்து அனுபவமாக்கி கொள்ளவேண்டியது உங்கள் கடமை.

இந்தப் பயிற்சிகளின் போது ஒவ்வொருவருக்கும் உண்டாகும் அனுபவம் அவர்களுக்கே உரியதாகும். அவற்றில் உயர்வு தாழ்வு, சரி பிழை என்பது இல்லை. அவரவர் மன, பிராண சித்த பரிணாமங்களுக்கு ஏற்ப அவை வேறுபடும். ஆதலால் பலபேரின் அனுபவங்களைக் கேட்டு மனக் குழப்பமுற வேண்டாம்.

இதிலிருந்து உங்களுக்கு இன்னும் ஒரு விடயம் விளங்கியிருக்கும் என எண்ணுகிறேன்.  அகம் சார்ந்த வித்தைகள் எவற்றிலும் எது சரி அது பிழை என்ற மேற்கத்தைய தர்க்க விவாதங்கள் இல்லை. எமது மூல நூற்களை எடுத்துப் பார்த்தீர்களானால் சூத்திர வடிவிலேயே இருக்கும். அவற்றின் பொருளை குரு எப்படி என்று விளக்கி சொல்லியிருக்க மாட்டார். அவற்றை மனதில் இருத்திக்கொண்டு உங்கள் பயிற்சியினை செய்து வருவிர்களானால் உங்கள் பயிற்சிக்கு தக்க விதத்தில் அவற்றின் பொருளும் பிரயோகமும் விளங்கும்.  உங்களுக்கு இன்னும் தெளிவாக விளங்குவதற்கு ஒரு உதாரணம் பதஞ்சலி யோகத்தின் சூத்திரத்தில் இருந்து காட்டுவோம்.

சூத்திரம் 1 .2 : "யோக சித்த வ்ருத்தி ந்ரோத"

இதன் பொருள் மனதின் விருத்திகளை கட்டுப்படுத்துவது எனவே பொதுவாக பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் சித்த வித்தை (பின்னர் வரும் படங்களில் விளக்கப்படும் ) படி மனத்தை மூன்று வகையாக பிரிக்கலாம் என்பதனை சாதனை மூலம் அறிந்து கொள்ளும் மாணவன் படிப்படியாக மேல் மனதின் விருத்திகளை கட்டுப்படுத்தி, பின் சித்த மனத்தை கட்டுப்படுத்தி, பின் ஆழ் மனத்தை கட்டுப்படுத்தி, இறுதியாக பிரபஞ்ச மனத்தை கட்டுப்படுத்துவதே முழுமையான யோகம். இந்த நிலையில் மேல் மனதை கட்டுப்படுத்தும் பயிற்சி செய்பவரிற்கும், சித்தத்தை கட்டுப்படுத்துபவரிற்கும் இடையிலான அனுபவம், ஆற்றல் வேறுபாடும். 

இவை பற்றி வரும் காலங்களில் நீங்கள் மேலும் அறிந்து கொள்வீர்கள். தற்போதைக்கு நீங்கள் மனக்குழப்பம் அடையக்கூடாது என்பதற்காகவே விளக்கினோம். ஏனெனில் இன்றைய காலத்தில் சித்தர் பாடல்கள், சித்தர்களது கலைகள் எல்லாம் தற்காலத்திய தர்க்க கல்விமுறையிலேயே ஆராயப்படுகிறது,இதனால் தகவல்கள் பெறலாமே அன்றி அனுபவம் பெறமுடியாது என்பதனை விளங்கிக்கொள்ளவும். 

ஆகவே மனதில் இவற்றை கிரகித்துக்கொண்டு குருவுடன் சூஷ்ம தொடர்பினை ஏற்படுத்துவதற்கு தயாராவோம்.

5. குருவைத் தேர்ந்தெடுத்தல்

சித்த வித்தை என்பது மதம் மொழி கலாச்சாரம் என்பவற்றிற்கு அப்பாற்பட்டது,  ஆகவே குருவைத் தேர்ந்தெடுக்கும் உரிமை  மாணவரின் உரிமை, இதில் வீணான பயமுறுத்தல்கள் எவையும் இல்லை.  அடுத்து சூஷ்ம நிலையடைந்த சித்தர்கள் எவரிடமும் பேதமில்லை.  ஒவ்வொரு சித்தரும் இறுதி நிலையடையும் போது பிரபஞ்ச மகா சக்தியில்  கலக்கின்றனர். நாம் எமது மனதை ஒருமைப்படுத்தி அவற்றை பெறுவதற்கும் அவர்களின் பௌதிக இருப்பை நிலைப்படுத்துவதற்கும்  வைத்துக்கொண்டவை தான் பல தெய்வங்கள், பல சித்தர்களின் பெயர்கள் எல்லாம். ஆதாலால் இவற்றை கற்க விரும்புபவர்கள் உங்கள் மன நம்பிக்கைக்கு தகுந்தபடி குருவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.  முக்கியமான நிபந்தனை அவர் சூஷ்மத்தில் இருக்க வேண்டும் அதாவது அவர் தற்போது உடலில் இல்லாதவராக இருத்தல் வேண்டும்.

ஆகவே கீழ்வருவனவற்றை தெளிவாக முடிவு செய்யுங்கள்;

1. நீங்கள் எந்த சித்தரை, ரிஷியை குருவாக கொள்ளப்போகிறீர்கள்?

2. பின்பு அவரை எந்த வடிவில் மனதில் உருவகப்படுத்த போகிறீர்கள்? (உருவத்திலா, ஜோதியிலா, மானசீகமாகவா)

3. தினமும் எந்த நேரத்தில் உங்கள் சாதனையினை செய்யப்போகிறீர்கள் என்பதனை முடிவு செய்யுங்கள்.

இவற்றை முடிவு செய்து கொண்டு அடுத்த பாடத்தினை எதிர்பாருங்கள், அதில் எப்படி குருவுடன் சூஷ்ம தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வது என்ற செயல்முறை பதியப்படும்.

ஓம் ஸத்குரு பாதம் போற்றி!
ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ:

நன்றி : உயர்திரு.சுமணன் அவர்கள்

இனி வரும் பதிவுகளில் பதியப்படும் சித்த வித்தை பாடங்களைப் படிப்பதற்கு முன் எப்படியான தன்மையில் இருந்து அவற்றை கற்கவேண்டும் என்பதனை விளங்கிக் கொள்தல் அவசியமாகும். இன்று இவற்றை கற்பிக்கும் முறைகள் எமது பாரம்பரிய கல்விமுறை அல்ல! எமது பாரம்பரிய கல்வி முறை குருகுலவாசமாகும். குருகுல வாசத்தில் மாணவன் எப்படி வித்தையினை கற்றுக்கொள்கிறான் என்பதனை அறிந்து அதன் செயல் முறையினை உணர்ந்தால் மட்டுமே உண்மையில் நாம் இவற்றை கற்றுக் கொள்ளமுடியும்.

பண்டைக்காலத்தில் ஒரு மாணவன் வித்தை கற்கவேண்டுமானால் குருவின் ஆசிரமத்திற்கு செல்லவேண்டும், அங்கு அவருடனேயே வசித்தவண்ணம் அவரது அன்றாட கடமைகளை செய்துகொண்டு அவர் கூறும் உபதேசங்களை மனதில் கிரகித்துக்கொண்டு தனது அன்றாட வேலைகளை தவறவிடாமல் செய்தவண்ணம் பயிற்சிக்க வேண்டும். குருவின் உபதேசம் மிக சுருக்கமாக சூத்திரமாகவே இருக்கும், அவற்றை கிரகித்து பயிற்சித்து தனது அனுபவமாக்கி கொள்வதே மாணவனின் கடமை. இது மனிதனில் சித்தமாகிய ஆழ்மனதை செயல்படுத்தி கற்கும் முறையாகும். இந்த முறையின் அடிப்படைகள்:
 1. குரு தனது அனுபவத்தினை சுருக்கமாக மாணவனிற்கு விளக்குவார்.
 2. அவன் தனது நாளாந்த கடமைகளினை தவறவிடக் கூடாது.
 3. கூறியவற்றை கிரகித்து அதன் படி பயிற்சித்து அதன் உண்மைத்தன்மையினை தன்னுள் உணர்ந்து தன்னுடையதாக்கி கொள்ளுதல் வேண்டும்.
 4. இதுதவிர இவற்றை சரியா, பிழையா என விவாதித்து விளங்கப்படுவதில்லை. இதன் அர்த்தம் சொல்வதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொண்டு குருவிற்கு அடிமையாக இருத்தல் என்பதல்ல. எந்த ஆய்வும் உங்களுடைய அகத்தில் இருத்தல் வேண்டும், அவற்றை சீர்தூக்கி சரியானதா எனப்பயன் பெறும் உரிமை உங்களுடையதாக இருத்தல் வேண்டும். அந்த உண்மை தங்களுக்கு தங்களே நிருபிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.
 5. தங்களால் குறித்த விடயங்கள் உணரமுடியாத தன்மை இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அவற்றை மகிழ்வுடன் ஏற்கும் கொண்டு மீண்டும் முயற்சிக்க வேண்டும்.
இந்த அடிப்படையிலேயே இந்த சித்தவித்யா பாடங்களும் நடை பெறப்போகிறது. அப்படியா! எப்படி? யார் குரு? எங்கு ஆசிரமம்? எவ்வளவு நாள் போயிருக்கவேண்டும்? இப்போது இது சாத்தியமா? என உங்கள் மனதில் எண்ணங்கள் உதிக்கலாம். இதற்கு எமது பதில் முடியும் என்பதே!

எப்படி?

நன்றாக கவனியுங்கள், ஒருவிடயத்தினை கற்பதற்கு அடிப்படையான சூஷ்மமே முக்கியமே, இதுவே சித்த வித்யா! அல்லாது ஸ்தூல வடிவம் அல்ல! குருகுலவாசத்தில் மனம் பெறும் நிலையினை தற்போது செயற்படுத்தினால் அதே நிலையில் நாமும் கற்கலாம் என்பதே இதன் அடிப்படை!. எப்படி என்பதனை காண்போம்.

ஒருவன் தனது சாதனையினை தொடங்குவதற்கு முதலில் அதுபற்றிய உண்மைகள் சுருக்கமாக வார்த்தை மூலமாக குரு விளக்க வேண்டுமே!

அதனை இந்த பதிவுகள் செய்யும். பதிவுகளை தொடர்ச்சியாக படிப்பதும், அவற்றை கிரகிப்பதும் உங்களுடைய கடமை,

எனினும் இந்தப்பதிவுகளை எழுதும் சுமனன் ஆகிய நான் யாருக்கும் குரு அல்லன். எமது ஆதிகுருவாகிய ஸ்ரீ அகஸ்திய மகரிஷி, அவரின் மாணவர் ஸ்ரீ கண்ணைய யோகி, அவரின் மாணவர் ஸ்ரீ காயத்ரி சித்தர் அவரிடம் நான் கற்றவற்றை அவர்களின் ஆணையில் ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு "செயலாளராக" வெளியிடுவதே எனது பணி. உங்களுடன் சேர்ந்து நானும் அவர்களிடம் கற்றுக் கொள்ளவே இந்த முயற்சி. இன்னும் ஒரு வார்த்தையில் சொல்வதானால் வெறும் தபால்காரன் மட்டுமே, மற்றும்படி வழிமுறைகளை பின்பற்றி பலனடைந்து கொள்வது உங்களுக்கும் சூஷ்மத்தில் உள்ள மேற்குறித்த குரு நாதர்களுக்கும் இடையிலானது.

உங்களது நாளாந்த கடமைகள் எதுவும் இருந்தால் அவற்றை தவறவிடக்கூடாது என்பதுதான் முக்கியமே அல்லது குருவின் ஆசிரமத்தில் சேவை செய்தால்தான் ஞானம் வரும் என்ற மன நிலையில் எதுவித உண்மையும் இல்லை, வாய்ப்பு இருந்து நீங்கள் செய்தால் அவருடைய அன்பு நிறையக் கிடைக்கும், இல்லாவிட்டால் எது உங்களது நாளாந்த கடமையோ அதனை தவறாது ஒழுங்காக செய்யுங்கள்.

பதியப்படும் விடயங்களை பலமுறை படியுங்கள், அவற்றை உங்களது சொந்த பயிற்சியில் அனுபவத்தின் மூலமாக பெறுவதைக் கொண்டு உங்களுடையதாக்குங்கள்.

ஆக நாம் வாழும் இந்த பூமி, சூழல், குடும்பம்தான் எமது குருவின் ஆசிரமம், பிரபஞ்சம் முழுவதும் கலந்துள்ள அகஸ்தியமகரிஷி (அல்லது உங்களுடைய குரு) தான் எமது குரு, எமது தற்போதைய அன்றாட வாழ்க்கை கடமைகள்தான் குரு சேவை, இந்தப் பாடங்கள்தான் குரு உபதேசம். ஆகவே இந்தப் பாடங்களை தவறாமல் கற்று, குரு சேவையாக உங்களது நாளாந்த கடமைகளை செய்தவண்ணம், பயிற்சிகளை செய்துவருவீர்களேயானால் அவற்றினால் பலன் அடைவீர்கள் என்பதனை உறுதி கூறுகிறோம்.

நாம் விளக்கிய முறையில் இவற்றைக்கற்பதற்கு உங்களது சிரத்தை அல்லது ஆர்வம் இன்மை தவிர்ந்த எதுவும் தடையாக இருக்காது என நம்புகிறேன்.

இன்றிலிருந்து இப்படி உங்களது குருகுலவாசத்தினை ஆரம்பியுங்கள்!

அடுத்த பாடத்தில் குருநாதருடன் தொடர்பினை ஏற்படுத்தும் வழிக்கான ஆரம்ப நிலைகளைப்பற்றிப் பார்ப்போம். 

ஓம் ஸத்குரு பாதம் போற்றி!

ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ:

நன்றி : உயர்திரு.சுமணன் அவர்கள்

 Source : http://yogicpsychology-research.blogspot.in/2011/12/blog-post_29.html

சித்த வித்தை கற்க எண்ணும் பலரிற்கு உள்ள தடைகளை கீழ் வருமாறு வகைப்படுத்தலாம் என எண்ணுகிறேன்.

சித்தர்களது நூற்கள் அனைத்துமே பாடல் வடிவில் இருத்தல், அவற்றை புரிந்து கொள்ளும் தன்மையினை சமுகம் இழந்துவிட்டமை. இதற்கு காரணம் எமது பாரம்பரிய கல்வி முறை மாற்றமடைந்தமை, தற்கால கல்வி அறிவுடன் அவற்றை அணுகும் போது அபத்தமான விளைவுகள் பல உண்டாகின்றது. இது கிட்டத்தட்ட நுண்கணித பாடப்புத்தகத்தினை (Calculus text book) சாதரணமான ஒருவன் பார்த்த நிலைதான்.

சித்த வித்தைகள் பற்றிய மாயை,கட்டுக்கதைகள், அற்புதமாக்கல், வியாபாரப்படுத்தப்பட்ட பிரச்சாரங்கள், நோக்கத் தெளிவு இன்மை என்பன. எமது பழைய சமூகம் அகவயப்பட்ட சமூகம், எமது பண்பாடுகள்,கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் அனைத்தும் தன்னையறியும் முறையுடனேயே வடிவமைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் இவை மாறுபட்டு சமூகம் புறவயப்பட்ட சமூகமாக மாறா ஆரம்பித்தது, இப்படி மாற்ற முற்ற சமூகத்தினூடாக பரிமாறப்பட்ட சித்த வித்தைகளும் பல வித கிளைகளாக யோகமுறைகளாக, காப்புரிமை கோரல்களுடன் மேற்கத்தைய முறையில் "புதுப் புது ப்ராடக்ட்" ஆக வடிவம் பெற்று இன்று வேற்று கலாச்சாரத்தவர்கள் மொழியினர்  போற்றும் ஒரு அரிய கலையாக வடிவம் பெற்றுள்ளது. எம்மைப் பொருத்தவரையில் எம்மிடமிருந்துதான் இவையெல்லாம் சென்றது எனத்தெரியும், ஆனால் அவற்றை மூல நூற்களில் விளங்கும் ஆற்றலோ முறைப் படுத்தப்பட்ட கல்வியோ எம்மிடம் இல்லை.

இந்த நிலையில் இவை பற்றிய அதீத கற்பனைகள், புனைவுகள், இவற்றை சாமானியர் கற்க முடியாது என்ற பயமுறுத்தல், ஒரு சாரார் தமக்கு மட்டுமே அவற்றின் உண்மை விளங்கப்படுத்தப் பட்டுள்ளதாக கருதல், நாவல்கள், சினிமாக்களின் எடுத்தாள்கை என்பவற்றினூடாக பெற்ற கருத்தாக்கங்கள் மீண்டும் எம்மவர்களாலேயே எமக்கு இடப்பட்ட தடைகளாக உருப்பெற்றுள்ளன.

இவற்றை அடிப்படையாகக் கொண்டும் தற்காலத்து நடைமுறையில் சித்த வித்தையினை விளங்கிக் கொண்டு உள்ளத்தில்  இலகுவாக பதியும் வண்ணம் அவற்றின் மூலங்களின் சாரம் குறையாதவகையில் கற்பதற்கான ஒரு முயற்சிதான் இந்த சித்த வித்யா பாடங்கள்.

பாடத்தினுள் செல்லமுன் இந்த வகுப்புகளிடையான ஒத்திசைவினை மேம்படுத்த அவற்றின் தன்மை பற்றிய ஓர் அறிமுகம் அவசியமானது என்பதால் இதுவரை நான் பெற்ற பின்னூட்டங்களின் அடிப்படையில் ஒரு சில தெளிவுகளை சுயமாக முன் வைக்கிறேன். இவை தவிர்ந்து மற்றய கேள்விகள் இருப்பின் அவற்றினை பின்னூட்டமிட்டால் அவற்றிற்கான பதில்கள் பின்னூட்டமாகவோ, அடுத்துவரும் பாடங்களிலோ இணைத்துக்கொள்ளப்படும்.

இவற்றை பயில்வதற்கு என்ன தகுதிகள் வேண்டும், பலரும் பயமுறுத்துகின்றனரே? குரு நேரடியாக இல்லாமல் எப்படி இவையெல்லாம் சாத்தியம்? என உங்கள் எண்ண அலைகள் ஓடுவது எமக்கு புரிகின்றது அன்பர்களே! அதற்கு பதில் ஏகலைவன் எப்படி வித்தை கற்றான்? என்பதில் அடங்கியுள்ளது. அதேவழியில்தான் நாமும் கற்க்கப்போகிறோம். ஆர்வமும் கற்க வேண்டும் என்ற தாகமும்தான் ஒரே தகுதி! ஏகலைவன் குருவிற்கே தெரியாமல்தான் அவர் மனதிலிருந்த ஞானத்தினை ஆகர்ஷித்தான், ஆனால் நாம் ஆதி குரு அகஸ்தியரை எப்போதும் மனதில் இருத்தியே இதைத் தொடரப்போகிறோம், நீங்கள் மற்றைய சித்தர்களை குருவாகக் கொண்டவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. சூஷ்மத்தில் இறைவன், சித்தர்கள் எவருக்கும் எந்தவித வேறுபாடுமில்லை. உங்கள் மனதிற்கு பிடித்த சித்தரையோ, தெய்வத்தினையோ குருவாகக் கொள்ளலாம். அவர்களுடன் சூஷ்ம இணைப்பினை ஏற்ப்படுத்திவிட்டால் பின்பு அவர்கள் சூஷ்ம உடலில் உள்ள குருநாதர், தேவதைகள், ஆகாய மனதுடன் தொடர்பு ஏற்படுத்துவதன் மூலமும் மேலதிக அறிவினை உங்களது நாளாந்த பயிற்சியின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இது எப்படி என்பதனை படிப்படியாக பாடங்களினூடே விளக்கப்படும். இப்படிப் படிப்படியாக பெறும் ஞானத்தின் மூலம் எல்லாக் கேள்விக்குமான விடையினை நீங்களாகவே பெற்றுக் கொள்ளலாம்.
தெய்வ நம்பிக்கை, உபாசனை எதுவும் செய்ய வேண்டுமா? இல்லை, செய்பவராக இருந்தால் அவற்றின் உண்மை விளக்கம், பயன்பாடு என்னவென்பதனை அறிந்து கொள்வீர்கள்.

சித்த வித்தை பற்றி பேசுவதற்கும் அவற்றினைப் பதிவதற்கும் உங்களுடைய தகுதி மற்றும் காரணம் என்ன? அந்த வித்தையிற்குரிய குருபரம்பரையினை தொடர்பு கொண்டு கற்றமையும் குருநாதர் உத்தரவுமே இவற்றிற்கான தகுதியும் காரணமாகும். இவைபற்றிய மேலதிக விளக்கம் அடுத்து வரும் பாடங்களில் விளக்கப்படும்.

இவற்றை பயிற்ச்சி செய்ய விருப்பமில்லை, ஆனால் வாசித்து விளங்க விருப்பமாயுள்ளேன்? நிச்சயமாக, நீங்கள் தொடர்ந்து பலமுறை வாசிக்கும் போது படிப்படியாக மனம் அவற்றை செய்வதற்கான நிலையினை, சூழலை உருவாக்கும். எதுவிதமான தாழ்வு மனப்பன்மையினையோ,பய எண்ணங்களையோ ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். மகிழ்ச்சியாக கற்க்கும் மனநிலையில் அணுகுங்கள். மற்றவற்றை குருநாதர் பார்த்துக் கொள்வார். ஆனால் உங்கள் முயற்சி உண்மையானதாக, உள்ளம் விரும்பி செய்வதாக இருக்க வேண்டும். 

இதுவரையிலான விளக்கங்கள் அடிப்படை தெளிவையும் இவற்றை கற்க்கவேண்டும் என்ற ஆர்வத்தினையும் மனத்துணிவினையும் தந்திருக்கும் என நம்புகிறோம்.

அடுத்து இனிவரும் பதிவுகளில் பதியப்படப்போகின்ற பாடங்களின் ஒழுங்கைப் பார்ப்போம். இவை பாடத்தின் விரிவுகளுக்கேற்ப மாறுபடக்கூடியவை. எனினும் அடிப்படை இவ்வாறே இருக்கும்.

பாடங்களது உள்ளடக்கம்

பாடம்:00 அறிமுகம்
பாடங்களின் தன்மை, நிபந்தனைகள், தகுதி, பக்குவம், குரு பரம்பரை

பாடம்: 01 முத‌ன்மையான‌ மூன்று த‌த்துவ‌ங்க‌ள்

மனிதனின் அமைப்பு, மனிதனின் ஏழு அடிப்படைகள், ஸ்தூல உடல், சூஷ்ம உடல், பிராணன்

பாடம்:02 மான‌ச‌ த‌த்துவ‌ங்க‌ள்

நான்காவ‌தும் ஐந்தாவ‌துமான‌ அடிப்படைகள், இயற்கையுணர்வு மனமும், புத்தியும்

பாடம்: 03 ஆன்ம தத்துவங்கள்
ஆறாவதும் ஏழாவது அடிப்படைகள், ஆன்ம மனம், ஆன்ம ஒளி அல்லது ஆன்ம உணர்வு

பாடம்: 04 மனித கதிர்ப்பு
ம‌னித கதிர்ப்பு, ஆரோக்கிய கதிர்ப்பு, பிராண கதிர்ப்பு, மான‌ச‌ த‌த்துவ‌த்தின் மூன்று கதிர்ப்பு (ஆன்மா, கதிர்ப்பு, கதிர்ப்பின் நிற‌ம், க‌திர்ப்பு உருவாகும் வித‌ம்)

பாட‌ம்: 05 எண்ண‌ங்க‌ளின் இய‌க்க‌விய‌ல்
எண்ண‌ இய‌க்க‌விய‌ல்,எண்ண‌த்தின் இய‌ல்பு, த‌ன்மை, ச‌க்தி, எண்ண‌த்தின் வ‌டிவ‌ம், எண்ண‌த்தின் மூல‌ம் செல்வாக்கு செலுத்துத‌ல், எண்ண‌த்தின் இய‌க்க‌விய‌ல் ப‌ற்றிய‌ இர‌க‌சிய‌ வித்தை கோட்பாடுக‌ள்

பாட‌ம்: 06 தொலைவினுண‌ர்த‌ல், தூர‌திருஷ்டி
தூர‌திருஷ்டி, தூர‌சிர‌வ‌ண‌ம், தொலைவினுண‌ர்த‌ல் ப‌ற்றிய‌ கோட்பாடுக‌ளும் அவ‌ற்றை எப்ப‌டி எம்மில் வ‌ள‌ர்த்துக்கொள்வ‌து

பாடம்: 07 ம‌னித‌ காந்த‌ம்

ம‌னித‌ காந்த‌ம், பிராண‌ ச‌க்தி, அவ‌ற்றின் த‌ன்மைக‌ளும் ப‌ய‌ன்பாடும், அவ‌ற்றை வ‌ள‌ர்ப்ப‌த‌ற்கான‌ ப‌யிற்சிக‌ளும் பிர‌யோக‌ முறைக‌ளும்.

பாட‌ம்: 08 சூட்சும‌ சிகிச்சா முறைக‌ள்
சூட்சும‌ சிகிச்சை, ஆன்ம‌ சிகிச்சை, மான‌ச‌ சிகிச்சை, பிராண‌ சிகிச்சைக‌ளின் கோட்பாடும் பிர‌யோக‌ முறைக‌ளும்

பாட‌ம்: 09 ம‌னோவ‌சிய‌ம் அல்ல‌து ம‌ன‌ ஆற்ற‌ல் மூல‌ம் ம‌ற்ற‌வ‌ரை வ‌ச‌ப்ப‌டுத்துத‌ல்
ம‌னோவ‌சிய‌ம், வ‌சீக‌ர‌ காந்த‌சக்தி, ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் மான‌சீக‌ தாக்குத‌ல்க‌ளை த‌டுக்கும் முறைக‌ள், இந்த‌ ஆற்ற‌லை த‌வ‌றாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தால் ஏற்ப‌டும் விளைவுக‌ள்,

பாட‌ம்: 10 சூஷ்ம‌ உல‌க‌ம்
சூஷ்ம‌ உல‌க‌ம், அத‌ன் அமைப்பு, எம‌து சூஷ்ம‌ உட‌ல், சூஷ்ம‌ ச‌க்திக‌ளின் உத‌வி பெற‌ல்

பாட‌ம்: 11 உட‌லிற்கு அப்பால்
ம‌னித‌ உட‌லிலிருந்து உயிர்பிரிந்து இற‌ப்பின் பின் ந‌டைபெறுவ‌து என்ன‌?

பாட‌ம்: 12 ஆன்ம‌ ப‌ரிணாம‌ம்
ஆன்மாவின் ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி, எப்ப‌டி வ‌ள‌ர்கிற‌து, அத‌ன் நோக்க‌ம், அத‌ன் இல‌க்கு

பாட‌ம்: 13 ஆன்மீக‌த்தில் கார‌ண‌ காரிய‌ தொட‌ர்பு
வாழ்க்கையில் ந‌டைபெறும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளுக்கான‌ கார‌ண‌ காரிய‌த்தொட‌ர்புக‌ள், வினைக‌ளை விதைத்த‌லும் அவ‌ற்றை அறுத்த‌லிற்கான‌ கோட்பாட்டு விள‌க்க‌ம்,

பாட‌ம்: 14 யோக‌ப்பாதையில் இல‌க்கினை அடைத‌ல்
மூன்று ம‌டிப்புட‌ன் கூடிய‌ முறை (ச‌ரியான‌ முறை, திசை, திட்ட‌ம், சாதனை செய்ய விரும்பும் மாணவர்களுக்கான உப‌தேச‌ங்க‌ளும் ஆர்வ‌மூட்ட‌லும்.

ஸத் குரு பாதம் போற்றி!
குருவானவர் எம்மை சரியான வழியில் நடாத்திச் செல்வாராக!

ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ:

நன்றி : உயர்திரு.சுமணன் அவர்கள்

Gayathri Devi
காயத்ரி தேவி
 நண்பர்களுக்கு

கொழும்பில் வாழும் உயர்திரு.சுமணன் என்கிற மகாப்பெரியவர் தமது சித்த வித்யா விஞ்ஞானம் என்ற வலைப்பூவில் தொடர்ந்து சித்தர்களது வித்தைகள் பற்றியும் பலப்பல ஆன்மிக ரகசியங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறார். அப்பாடங்கள் தமிழ் தெரிந்த அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கோடு  அவர்களது மேலான அனுமதியுடன் அவரது வலைப்பூவில் வெளியிட்ட சித்த வித்யா பாடங்களை நமது வலைப்பூவில் வெளியிட இருக்கிறோம்.

அப்பெரியவருடைய வலைப்பூ முகவரி http://yogicpsychology-research.blogspot.in/

ஆன்மிகம், சித்தர்கள் மற்றும் அவர்களது சித்து முறைகள், சித்த பாடங்கள் போன்றவற்றில் அவர் கூறிய அரிய தகவல்களை நாம் நம் தளத்தில் காண்போம்.

மேலும் பல தகவல்கள் வேண்டுவாயின் மற்றும் சந்தேகங்கள் இருப்பின் உயர்திரு.சுமணன் அவர்களை அணுகுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். இ-மெயில் முகவரி : sithhavidya@gmail.com.

மக்கள் இந்த முறைகளை பின்பற்றி ஆன்மிக வாழ்வில் முன்னேற எல்லாம் வல்ல குருவை பிரார்த்திக்கிறோம்.

ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ;

Thursday, April 25, 2013

Pothigai Hills

சென்ற வருடம் வரை ஒரு நாளைக்கு 100 நபர் என்ற அளவில் அகத்திய பெருமானை தரிசிக்க அனுமதி அளித்து வந்த கேரளா வனத்துறை இந்த ஆண்டு திடீரென ஒரு நாளைக்கு 5 பேருக்கு மட்டுமே அனுமதி என்று மிகப்பெரிய  குண்டை வீசி உள்ளது.

ஏற்கனவே பல வருடங்களாக தமிழக வனத்துறை அனுமதி மறுத்து வரும் நிலையில் இந்த செய்தி அகத்திய பெருமானின் அடியவர்களை மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்குகிறது.

இது பற்றி மேலும் தகவல் அறிய கேரளா வனத்துறை திருவனந்தபுரம் அலுவலக எண் 0471 - 2360762.

அன்பர்களுக்கு, இந்த எண்ணை தொடர்பு கொண்டு நமது எண்ணங்களை பதிவு செய்வோம். 


வணங்குவோர்க்கு வாழ்வு தரும்
வாழ்த்துவோர்க்கு வசதி தரும்
போற்றுவோர்க்கு புகழ் தரும்
தூற்றுவோர்க்கும் இன்பம் தரும்

நினைத்தாலே நிம்மதி தரும்
நீடு வாழ் பைரவ சஷ்டி கவசமே!
பக்தர் பரவசமுற பலன் தரும்
பைரவர் திருவடியே கதி

சஷ்டியின் சிறப்பில் சண்டபைரவர்
திருஷ்டியால் காக்கும் காலபைரவர்
அகிலம் போற்றும் அஷ்ட பைரவர்
அன்பால் காக்கும் ஆனந்த பைரவர்

சொர்ணம் தருவார் சொர்ண பைரவர்
சுகமே தருவார் சுப்பிரமணிய பைரவர்
சங்கடம் தீர்ப்பார் சட்டநாத பைரவர்
சகலமும் தருவார் சர்வதேவ பைரவர்

வருக வருக வடுகபைரவா வருக
வளம்தர வருக வஜ்ரபைரவா வருக
வருக வருக உக்கிரபைரவா வருக
உவகைதர வருக உலகபைரவா வருக

பைரவி போற்றும் பைரவா வருக
ஆனந்த நடனா ஆனந்த பைரவா வருக
ஆணவம் அழிக்கும் ஆக்ரோஷ பைரவா வருக
ஆபத்தில் காக்கும் ஆபதோத்தாரண பைரவா வருக

காலத்தின் நாயகா கால பைரவா வருக
கலக்கம் போக்கும் கதாயுத பைரவா வருக
நலம் தரும் நரசிங்க பைரவா வருக
நாளும்காக்கும் நாக பைரவா வருக

கோபம் போக்கும் கோவிந்த பைரவா வருக
ஞாலம் போற்றும் ஞானபைரவா வருக
தாகம் தீர்க்கும் தராபாலன பைரவா வருக
மோகம் போக்கும் முண்டனப்பிரபு பைரவா வருக

அவலம் போக்கும் அஸிதாங்கபைரவா வருக
குவலயம் காக்கும் குரோதன பைரவா வருக
உலகம் புரக்கும் உன்மத்த பைரவா வருக
திருவருள் புரியும் திகம்பர பைரவா வருக

சண்டைகள் தடுக்கும் சண்டபைரவா வருக
ருசியான  உணவுதரும் ருருபைரவா வருக
சந்தோஷம் தரும் சம்கார  பைரவா வருக
பித்தம் போக்கும் பீஷணபைரவா வருக

வருகவருக வரமருளும் வரதபைரவா வருக
தருகதருக தாராளமாய் தரும் தயாள பைரவா வருக
பருகபருக பழரசம் தரும் பிதாமக பைரவா வருக
பெருகபெருக செல்வம் தரும் பிசித பைரவா வருக

நடனம் புரியும் நர்த்தன பைரவா வருக
சதிராடும் சர்ப்ப பைரவா வருக
ஆட்டமாடும் ஆனந்த பைரவா வருக
பாட்டுபாடும் பர்வத வாகன பைரவா வருக

சுடரொளி வீசும் ஜ்வாலா மகுடமும்
முப்புரமெரி செய் முக்கண்ணும்
முகவழகு கூட்டும் நாசியும்
சீற்றம் காட்டும் சிங்க பல்லும்

இடது செவியில் பொன்னாபரணமும்
இன்பமூட்டும் இள நகையும்
அழகிய தோளும் அற்புத அழகும்
மார்பில் பஞ்சவடி தரும் எழிலும்

எழில் மிகு இடுப்பில் நாகாபரணமும்
இளமை காட்டும் வாலிபமும்
மணி ஓசை தரும் கிண்கிணியும்
கையிலே கபாலமும் சூலமும்

தோற்றமிகு கைகளிலே பலவகை ஆயுதமும்
ஏற்றம் தரும் தோற்றமாய்
பத்தினிப் பெண்டிரும் பார்த்து மகிழும் வண்ணம்
பரவசம் தர வருகவே வருகவே

மெய் உணவு கேட்ட மெய்யடியாரே
உய்ய வழிகாட்டும் உத்தமரே
பொய் புனைவோர் செயலறுக்கும் சீலரே
சேய் மகிழ விரைந்து வருவீரே

ஆணவ பிரமன் ஆர்ப்பரிக்க
அன்னை பார்வதி மனம் நொந்திடவே
ஆற்றல்மிகு மகா பைரவரும் வெளிகிளம்பி
அச்சம் தரும் வடிவுடனே பிரமசிரம் துண்டித்தார்

தலையொன்றை துண்டான பிரமனும் சாபமிட்டான்
தாயுமானவன் சிரித்தபடி ஏற்றான்
கையிலொட்டிய கபாலத்துடன் பிச்சை ஏற்றடவே
பூமி நோக்கி வந்திட்டான் பூமிபால பைரவனே

கற்றவர் போற்றும் காசியாம்
பாவம் போக்கும் பத்ரிநாத்தாம்
எங்கும் திரிந்தான் பரமன்
காசியிலே கபாலம் கையை விட்டுபோனதே

மூலப்பொருள் யாரென ஓர் தேடல் நடந்திட்ட வேளையிலே
ஜீவப் பொருளைத் தேடிய பிரமனும் பொய்யுரைத்தானே
பொய்யுரைத்த வேளையிலே பொங்கியெழுந்த பைரவனும்
கிள்ளியெடுத்திட்டான் அத்தலைதனை

வீடு தேடியொரு வேளையிலே
பிரம இல்லம் புகுந்து நின்ற பரமனையே
ஐந்தில் ஒருதலையே தூற்றியதாம்
தூற்றிய துஷ்டதலையினை கிள்ளிட்டான் ஈசனுமே

எத்தனை சொல்லினும் எப்படி சொல்லினும்
அகங்காரம் கொண்டோர் ஆணவமுள்ளோர்
அழிந்திடத் தான் வேண்டுமென்றே
பிரம சிரம் துண்டித்தான் எம்பிரானே

பத்ரிநாத்திலே பிரம்மகபாலம் தெறித்துவிழுந்ததாம்
காசியிலே கபாலம் கையைவிட்டகன்றதாம்
கண்டியூரிலே கபாலம் நீருக்குள் மறைந்ததாம்
மலையனூரில் பரமேஸ்வரின் காலில் மிதிபட்டதாம்

எல்லோர் ஆணவமும் பிச்சையேற்றிட்டார் பைரவர்
முனிவரும் தேவரும் அனைவருமிதில் அடங்குவர்
அன்னமளப்பவனுக்கே அன்னமிட்டாள் அன்னபூரணி
ஆண்டியாய் அகிலமெலாம் சுற்றிவந்தார் பரமனே

இரத்தபிட்சை பெற்றிட வைகுண்டமேகினார்
இடையே வந்த விஸ்வக்சேனர் சூலத்தில் சிக்கிட்டார்
விஷ்ணுவோ விரைந்து தந்தார் ரத்தம்
கபாலமே நிறையவில்லை மயங்கிட்டார் மகாவிஷ்ணு

கண்ணான கணவன் மயங்கிவிழவே
கதறி அழுதிட்டாள் மகாலட்சுமி
கணவனுயிரை தருமாறு சாவித்திரியானாள்
மணவாளன் உயிர் தந்தார் தங்கை மகிழ

மாண்டவர் மீண்டால் மகிழ்வாரன்றோ
மாயவனும் மகிழ்ந்திட்டார் வாக்குறுதி தந்திட்டார்
பத்து அவதாரமெடுத்து பகைவரையழித்தே
இரத்த மளித்து கபாலம் நிரப்பிடுவேன் என்றார்.

அந்தகாசுரனென்னும் புதல்வனும் அசுரனானான்
அகிலத்தையே ஆட்டி படைத்தான்
அன்னையுருவு கண்டு ஆசைப்பட்டான்
அவனை அழித்து அல்லல் அகற்றினார்

மணிமல்லர்கள் செய்திட்ட கொடுமை அதிகம்
இனியொரு விதி செய்தே மக்களை காக்க
கனிதரும் காயகல்பன் மார்த்தாண்ட பைரவனாகியே
மதிகெட்டவர்களை அழித்திட்டார்.

முண்டகன் என்றொரு கொடியவன்
கண்டபடி தந்தான் துன்பங்களை
அண்டம் நடுங்க ஆட்டிப்படைத்தான்
பிண்டமாய் வீழ்த்தினார் பைரவரே

எண்ணங்களிலே மாற்றம் தரும்
இதயத்திலே எழுச்சி தரும்
அடியவருக்கு அருள்புரியும்
பைரவ புராணத்தை பாடிடுவோம்

காலத்தின் நாயகன் கால பைரவனென்றே
ஜோதிடமும் ஆன்மீகமும் கூறிடுமே
விதியும் அவனே வெற்றியும் அவனே
வேதமும் அவனே வேதநாயகனும் அவனே

அட்டவீரட்ட தலங்கள் அற்புதத்தலங்கள்
ஆர்ப்பாட்டம் செய்தோரை அழித்த இடங்கள்
அம்பலவாணன் பைரவரூபமான இடங்கள்
அகிலத்தோரை காத்திட தலங்கள்

தெய்வமொன்றுக்கு ஒரு மதம் என்றார்
ஐந்துமுக பைரவருக்கோ ஐந்து மதம் கண்டார்
எத்தனை பிரிவோ அத்துணைக்கும் இவரோ தெய்வம்
அத்துணை மகத்துவமுடையோர் அருள் பெறுவோமே

எங்கும் பைரவர் எதிலும் பைரவர்
என்றோதி மகிழும் நெஞ்சோர் வாழ்க
ஐந்து தலையரசே ஆகாசபைரவரே
அல்லல் நீங்கிட வருவீரே

தலைதனை தராபாலன பைரவர் காக்க
கேசந்தனை கேசர பைரவர் காக்க
நெற்றிதனை நிர்பய பைரவர் காக்க
கண்ணிரெண்டும் கதாதர பைரவர் காக்க

செவிதனை ஸ்வஸ்கந்த பைரவர் காக்க
நாசிதனை நர்த்தன பைரவர் காக்க
வாய்தனை வஜ்ர அத்த பைரவர் காக்க
நாக்கினை நானாரூப பைரவர் காக்க

கழுத்தினை கராள பைரவர் காக்க
தோள்தனை திரிநேத்ர பைரவர் காக்க
கைகளிரெண்டும் கபாலபூடண பைரவர் காக்க
மார்பினை மந்திரநாயக பைரவர் காக்க

விலாவினை விருபாச பைரவர் காக்க
வயிறுதனை விஷ்ணு பைரவர் காக்க
இடுப்பினை இரத்தபிட்சா பைரவர் காக்க
மறைவுப் பகுதிதனை மங்கள பைரவர் காக்க

தொடைகளிரெண்டும் திரிபுராந்தக பைரவர் காக்க
முழுங்கால்களை முத்தலைவேல் பைரவர் காக்க
பாதமிரண்டும் பரம பைரவர் காக்க
விரல்களைத்தும் விஜய பைரவர் காக்க

இன்னல்தரும் இதயநோய் போக்குவாய் போற்றி
சங்கடம் தரும் சர்க்கரைநோய் போக்குவாய் போற்றி
சீரழிக்கும் சிறுநீரகநோய் போக்குவாய் போற்றி
உயிர்க்கொல்லி நோய் போக்குவாய் போற்றி

உன்மத்தம் போக்குவாய் போற்றி
குருட்டை நீக்குவாய் போற்றி
கர்ப்பதோஷம் போக்குவாய் போற்றி
உஷ்ணரோகம் போக்குவாய் போற்றி

ஒவ்வாமை அகற்றுவாய் போற்றி
இளைப்பு நோய் நீக்குவாய் போற்றி
சளித்தொல்லை போக்குவாய் போற்றி
சருமத்தொல்லை நீக்குவாய் போற்றி

விஷபயம் போக்குவாய் போற்றி
பொய்சூது பொல்லாங்கு நீக்குவாய் போற்றி
விலங்குகள் தொல்லை போக்குவாய் போற்றி
பகைமையை அழிப்பாய் போற்றி

உடன்பிறந்தோர் உபத்திரம் தீர்ப்பாய் போற்றி
அன்னையின் அகம் மகிழ்விப்பாய் போற்றி
தந்தைக்கு தளரா நெஞ்சம் தருவாய் போற்றி
முன்னோர்க்கும் நலம்தருவாய் போற்றி

நல்லதொரு துணைதருவாய் போற்றி
துணையின் துன்பம் களைவாய் போற்றி
சந்தானபாக்கியம் தருவாய் போற்றி
புத்திரதோஷம் போக்குவாய் போற்றி

கடன் தொல்லை நீக்குவாய் போற்றி
களிப்புடன் வாழ்விப்பாய் போற்றி
என்றும் புகழ் தருவாய் போற்றி
ஏற்றம் பெற செல்வம் தருவாய் போற்றி

பொல்லாதவர் கொடும் பார்வை துன்பம் நீக்குவாய் போற்றி
பில்லி சூன்யக் கொடுமை போக்குவாய் போற்றி
கெட்டவர் சதித்திட்டம் அழிப்பாய் போற்றி
பேய்,பிசாசு கொடுமை தீர்ப்பாய் போற்றி

சேட்டைகள் போக்கும் சேத்திர பாலனே வருக
பாசமிகு பைரவமூர்த்தியே வருக
காலனைவிரட்டும் கால பைரவா வருக
ஸமயோசித புத்தி தரும் ஸமயபைரவா வருக

கயவர்களுக்கு காலனாகும் காலாக்கினிபைரவா வருக
பாவிகளையழிக்கும் பாதாள பைரவா வருக
சுகமான வாழ்வுதரும் சுகாசன பைரவா வருக
சந்ததிதரும் சந்தான பைரவா வருக
ஆபத்தை நீக்கும் ஆதிபைரவா வருக

சிவபக்தியூட்டும் சிவஞான பைரவா வருக
வெற்றிதனை விரைந்து தரும் வீர பைரவா வருக
நிராயுதபாணிக்கும் நிம்மதிதரும் சூலாயுதபாணி பைரவா வருக
சுற்றம் காக்கும் சுவேட்சர பைரவா வருக

தடைகளிலிருந்து விடுவிக்கும் சுதந்திர பைரவா வருக
விசாலமனம் தரும் விசாலாக்ஷ பைரவா வருக
ஸம்ஸார வாழ்வுதரும் சம்ஸார பைரவா வருக
குறைவிலா செல்வம் தரும் குபேர பைரவா வருக

கல்வி உயர்வு தரும் கபால பைரவா வருக
மேன்மை தரும் மேகநாத பைரவா வருக
சோதனை நீக்கும் சோமசுந்தர பைரவா வருக
கற்பனை வளம் தரும் மனோவேக பைரவா வருக

அவமரியாதை போக்கும் அப்ரரூப பைரவா வருக
சங்கடம் நீக்கும் சசிவாகன பைரவா வருக
பூதபைசாசத்தினை விரட்டும் சர்பூத பைரவா வருக
தண்டனையிலிருந்து தப்புவிக்கும் தண்டகர்ண பைரவா வருக

காதலில் வெற்றிதரும் காமராஜ பைரவா வருக
லாபம் தரும் லோகபால பைரவா வருக
பூமிசெல்வம் தரும் பூமிபால பைரவா வருக
ஆற்றல் தரும் ஆகர்ஷண பைரவா வருக

கண்டத்திலிருந்து காத்திடும் பிரகண்டபைரவா வருக
அந்தகரையும் காக்கும் அந்தக பைரவா வருக
தட்சணை பெறுவோர்க்குமருளும் தட்சிணபித்தித பைரவா வருக
வித்தையிலே வெற்றிதரும் வித்ய ராஜ பைரவா வருக

அதிர்ஷ்டம் தரும் அதிஷ்ட பைரவா வருக
பிரஜைகளின் துன்பம் தீர்க்கும் பிரஜா பாலன பைரவா வருக
குலம் காக்கும் குல பைரவா வருக
சர்வமும் தரும் சர்வக்ஞ பைரவா வருக

ஈனனையும் காக்கும் ஈசான பைரவா வருக
சிம்மமாய் வாழ்விக்கும் சிவராஜ பைரவா வருக
சீறிய சிந்தனைதரும் ஸீதாபாத்ர பைரவா வருக
கர்மவினை போக்கும் காலநிர்ணய பைரவா வருக

குற்றம் களையும் குலபால பைரவா வருக
சடுதியில் காத்திடும் வடுகநாத பைரவா வருக
கோரவடிவு மாற்றும் கோரநாத பைரவா வருக
புத்திதரும் புத்திமுக்தி பலப்ரத பைரவா வருக

லட்சுமி கடாட்சம் தரும் லலித ராஜபைரவா வருக
நிறைவான வாழ்வுதரும் நீலகண்ட பைரவா வருக
சிக்கல் தீர்க்கும் சீரிட பைரவா வருக
கஷ்டத்தில் காத்திடும் காலராஜ பைரவா வருக

பிதுர்களுக்கு சொர்க்கம் தரும் பிங்களேட்சண பைரவா வருக
மண்டலம் போற்றும் ருண்டமால பைரவா வருக
விருப்பமானவற்றை தரும் விஸ்வரூப பைரவா வருக
சலியாத வாழ்வுதரும் பிரளய பைரவா வருக

கத்தும் கடலும் வாழ்த்தும் ருத்ரபைரவா வருக
பட்டினிபோக்கும் பயங்கர பைரவா வருக
எதிர்ப்பழிக்கும் மகாரவுத்திர பைரவா வருக
சோபித வாழ்வுதரும் சோமராஜ பைரவா வருக

பீடுநடைபோட வைக்கும் பிரேசத பைரவா வருக
பூர்வீக சிறப்புதரும் பூதவேதாள பைரவா வருக
ரத்தபாசம் தரும் ரத்தாங்க பைரவா வருக
பசிக்குணவு தரும் பராக்கிரம பைரவா வருக

வினைகள் தீர்க்கும் விக்னராஜ பைரவா வருக
நிர்மலமான நெஞ்சம்தரும் நிர்வாணபைரவா வருக
சக்திக்கும்  பாதியுடல் தந்த சச்சிதானந்த பைரவா வருக
அட்டமாசித்தி தரும் ஓங்கார பைரவா வருக

பைரவப்ரியர் போற்றும் சிவபைரவா வருக
பண்ணாரிதாசனும் போற்றும் பாலபைரவா வருக
ராஜவேல் மைந்தன் வணங்கும் ராஜபைரவா வருக
முந்தைய சமணரும் வணங்கிய திகம்பர பைரவா வருக

பார்போற்றும் பைரவ சஷ்டி கவசம்
பக்தரைக் காக்கும் நல்லதொரு கவசம்
சண்முகசுந்தரம் பாடிய கவசம்
நவபைரவர் அருளும் நற்கவசம்

பைரவ சஷ்டி கவசம் இதனை
செப்பிடுவோர் ஜெகமாள்வர்
ஓதுவோர் ஓங்குபுகழ் பெறுவர்
கூறுவோர் கூற்றனை வெல்வர்

வாசிப்போர் வாழ்வுதனை பெறுவர்
பாடுவோர் பார்போற்ற பவனி வருவர்
சொல்வோர் சொத்துக்களை பெறுவர்
கேட்போர் கேடான நோய் நீங்கிடுவர்

சரணம் சரணம் பைரவா சரணம்
சரணம் சரணம் ஸ்ம்ஹார சரணம்
சரணம் சரணம் திருவடி சரணம்

இயற்றியவர்: பண்ணாரிதாசன் என்ற சோம.சண்முகசுந்தரம்,சேலம்

ஓம்சிவசிவஓம்

நன்றி :: www.aanmigakkadal.com


அஷ்ட மங்கள கால பைரவர்
விஜய வருடத்தின் முதல் பவுர்ணமியானது  25.4.13 அன்று ஆரம்பித்து மறுநாள் 26.4.13 வரை இருக்கிறது. பவுர்ணமியோடு சேர்ந்து கிரகணமும் வருவதால், இந்த பவுர்ணமியானது அதிமுக்கியத்துவம் பெறுகிறது. ஆமாம்! மேஷ ராசியில் ஆத்மக்காரனாகிய சூரியன், ஞானக் காரனாகிய கேதுவுடன் சேர.மனக்காரனாகிய சந்திரன், ராகுவுடன் துலாம் ராசியில் சேருகிறது. ஆண்டுக்கு ஒருமுறையே இவ்வாறு கிரகணம் அமையும். இந்த நன்னாளில் இன்னொரு சூட்சுமரகசியம் அமைவது என்னவெனில், சூரியனும் கேதுவும் ஸ்ரீகால பைரவரின் ஜன்ம நட்சத்திரமான பரணியில் சேர்ந்து இந்த கிரகணத்தை தோற்றுவிப்பதால், இந்த வாய்ப்பினை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.ஒருவேளை இந்த கிரகண நாளை விட்டு விட்டால் மீண்டும் இதே கிரகணம் உருவாக பதினெட்டு ஆண்டுகள் தான் ஆகும்.

கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த நற்செயல்களின் விளைவாக நாம் இப்போதைய வசதிகளை அனுபவிக்கிறோம்; செல்வாக்குடன் இருக்கிறோம்; நமது ரேஞ்சுக்கு புகழுடன் வாழ்ந்துவருகிறோம்; அதே போல ,கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த தீயச் செயல்களின் விளைவாக இந்தப் பிறவியில் கடன்கள் அல்லது நோய் அல்லது அவமானம் அல்லது புறக்கணிப்பு அல்லது மனவேதனைகள் அல்லது இவைகள் அனைத்தையும் அனுபவித்தும் வருகிறோம்.இந்த இரண்டும் நாடாளும் மன்னனாக இருந்தாலும் சரி, வீட்டிலேயே மரியாதை இல்லாத பெண்ணாக (ஆணாக) இருந்தாலும் சரி அனைவருக்கும் பொதுவாகவே அமைந்திருக்கிறது.இதில் நமது தீயச் செயல்களின் விளைவுகளைத் தாங்க முடியாமல் ஏதேதோ வழிபாடு, பரிகாரம் செய்து வருகிறோம்.இதைச் செய்தாலாவது நாம் நிம்மதியை அடைய மாட்டோமா? என்று ஏங்குகிறோம்.

அந்த ஏக்கத்தை நீக்கிட ஒரு அரியவாய்ப்பு இன்றும்(25.4.13),நாளையும்(26.4.13) ஏற்பட்டிருக்கிறது.நாம் செய்ய வேண்டியது இதுதான்:

நமது ஆன்மீகக்கடலில் பிப்ரவரி மாதம் 2013 இல் வெளியிடப்பட்டிருக்கும் பைரவ சஷ்டி கவசத்தை இந்த இருநாட்களில் எழுதி முடிப்பது மட்டுமே!

எங்கே எழுதுவது?

வசதி உள்ளவர்கள் அருகில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் எழுதலாம். அது முடியாதவர்கள் அவரவர் வீட்டிலேயே எழுதலாம்; கூட்டுக் குடும்பமாக இருப்பவர்களில் அனைவருமே எழுதலாம். ஒரே நிபந்தனை: இரண்டே நாட்களில் பைரவ சஷ்டி கவசத்தையும் எழுதி முடித்துவிட வேண்டும்.

சரி! எப்போது இந்த இரண்டு நாட்களில் எழுத வேண்டும்?

இந்த இரண்டு நாட்களில் எப்போது வேண்டுமானாலும் எழுத ஆரம்பிக்கலாம்; எப்போது வேண்டுமானாலும் எழுதி முடிக்கலாம்;

சரி! எதில் எழுதுவது?

நோட்டு புத்தகத்தில் எழுதலாம்;வெள்ளைக் காகிதத்தில் எழுதலாம்; கணினியில் டைப் செய்யக் கூடாது;

எப்படி எழுதுவது?

அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுவதும்,எழுதி முடிப்பதும் அவசியம்.

எழுதி முடித்துவிட்டு என்ன செய்ய?

எழுதி முடித்ததை பத்திரப்படுத்தி வைக்கவும்:அடுத்தபடியாக 9.5.13 வியாழக்கிழமை அன்று சித்திரை மாதத்து அமாவாசை வருகிறது.இந்த அமாவாசையானது ஸ்ரீகால பைரவப் பெருமானின் ஜன்ம நட்சத்திரமான பரணியில் வருகிறது. அன்று ஸ்ரீகாலபைரவரின் 1008 போற்றி அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரின் 1008 போற்றியை இத்துடன் சேர்த்தே எழுதி வைக்கவும்.

மேலும்

உங்கள் மகன்/ள் பள்ளிப் படிப்பு/பாலிடெக்னிக்/கல்லூரி படித்துக் கொண்டிருப்பவரா?இந்தியாவில் ஆண்டுவிடுமுறைக் காலம் துவங்கியிருக்கிறது.எனவே,உங்கள் மகன்/ளை  பின்வரும் ஸ்ரீகால பைரவ மந்திரத்தை தினமும் நூற்றிஎட்டுமுறை எழுதச் சொல்லலாம்;மீண்டும் பள்ளி/கல்லூரி திறக்கும் வரையிலும் தினமும் எழுதச் சொல்லலாம்;
தாங்கள் எழுதியவைகளை தங்களின் வீட்டுப்பூஜை அறையில் அல்லது பணம் வைக்கும் பெட்டியில் பத்திரமாக வைக்கவும்.தாங்கள் மனப்பூர்வமாக எழுதியது எப்படி உங்களுக்கு பாதுகாவலாக,வழிநடத்தும் பைரவ சக்தியாகச் செயல்படுகிறது என்பதை உணர்வீர்கள். இவைகளில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது செய்வதன் மூலமாக உங்களுடைய நீண்டகாலப் பிரச்னைகள் தீரத்துவங்கும்;

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

முக்கியமான விஷயம் இவைகளில் எதை எழுதத் துவங்கினாலும்,எழுதுபவர் அசைவம் சாப்பிடக் கூடாது;எச்சரிக்கை!!!

 ஓம்சிவசிவஓம்

நன்றி :: www.aanmigakkadal.com