காலங்கிநாதர் அருளிய "பூஜாவிதி 85”

காலங்கி நாதர் திருமூலரின் சீடர்களில் முக்கியமானவராக கருதப் படுகிறார். சொல்வதை விட கேட்பதே சிறந்தது என்ற கோட்பாட்டைக் கொண்டவர். அதனால் பல்வேறு சித்தர் பெருமக்களை தேடிச் சென்று பலதகவல்களை அறிந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் காஞ்சியம்பதியில் சமாதியடைந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது.

இத்தனை பெருமை கொண்ட சித்த புருஷரின் இந்த நூலானது அவரது பரந்து பட்ட அனுபவத்தின் தொகுப்பாக விளங்குகிறது. கணபதி பூஜை முதல் நவக்கிரக பூஜை, மூலிகை வித்தை, யந்திர பூஜைகள், மருந்துகள், கற்பவகைகள், மைகள், வாதவித்தைகள், குளிகைகள் போன்ற பல அரிய தகவல்களையும் அதன் முறைகளையும் தெளிவாக விளக்கி கூறியிருக்கிறார்.

"ஆமப்பா பூசைவிதி மார்க்கந் தன்னை
அன்பு வைத்து கைமுறைகள் அதிகம் சொன்னேன்
ஓமப்பா கைமுறைகள் அதிகம் சொன்னேன்
உண்மையுள்ள பூசையது நுணுக்கமெத்த"

மின்னூலைத் தரவிறக்க இங்கே அழுத்தவும்.

நன்றி : தோழி, www.siththarkal.com

0 comments:

Post a Comment