Monday, December 15, 2014

அன்பர்களுக்கு,

வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி அன்று குருவருளின் துணையால் ஷீரடிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளோம். 3.2.2015 செவ்வாய் இரவு கிளம்பி 8.2.2015 ஞாயிறு அன்று வருவதாக திட்டம்.

ஷீரடி, சனிசிக்னாபூர் (சனி பகவான் கோவில்), ரேணுகாதேவி கோவில், மகா கணபதி கோவில் போன்ற கோவில்களுக்கு செல்லப் போகிறோம்.

இருவழி ரயில் கட்டணம், தங்குமிடம், பஸ், வேன் போன்ற கட்டணங்கள் உட்பட ரூ.3400 மட்டுமே. (உணவு தவிர்த்து)

கலந்து கொள்ள விருப்பம் இருப்பவர்கள் அடியேனை தொடர்பு கொள்ளலாம். எண்: 9840465277, 9444979615.Friday, December 12, 2014

பொதுவாக 90 சதவீத ஜோதிடர்களிடம் ஒரு மனப்பாங்கு உண்டு. என்னவென்றால் ஜோதிடம் பார்க்க வருபவர் எந்த  ஜாதகத்தை நீட்டினாலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அடித்து விட ஆரம்பித்து விடுவார்கள். ஜாதகத்தின் 12 கட்டங்களையும் ரவுண்டு கட்டி அடித்தால் தான் இவருக்கும் நிம்மதி; பார்க்க வருபவருக்கும் சந்தோசம்.
  • முதலில் கொண்டு வந்த ஜாதகம் சரியானது தானா?
  • பிறந்த நேரம் சரியாக உள்ளதா அல்லது சரி பார்க்க வேண்டுமா? 
  • ஜாதகர்/ஜாதகி தற்போது உயிரோடு உள்ளாரா? 
  • அவரின் ஆயுள் எப்படி உள்ளது?
என்றெல்லாம் பார்ப்பது இல்லை. வாய்க்கு வந்தபடி அடித்து விட ஆரம்பித்து விடுவார்கள்.

ஏன் இவற்றை சரி பார்க்க வேண்டும்? ஜாதகத்தை உள்ளவாறு பார்த்தால் என்ன? இவற்றிற்கு நேரம் இருக்குமா? என்றெல்லாம் கேள்விகள் தோன்றுகிறதா? மேற்கொண்டு படியுங்கள்.

பிறந்த நேரத்தை முதலில் ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே.

முதலில் பிறந்த நேரம் என்பது என்ன? அதை எவ்வாறு கணிப்பது என்பது குறித்து பலவித குழப்பங்கள் இன்று உள்ளன.  தொப்புள் கொடி அறுத்த நேரமா, குழந்தை அழுத நேரமா, தலை வெளியில் தெரியும் நேரமா? முதல் இதய துடிப்பு நேரம் என்று எடுத்து கொள்ளவும் முடியாது. ஏனெனில் குழந்தையின் இதய துடிப்பு தாயின் கருவிலேயே துவங்கி விடும். பொதுவாக ஜனன காலம் என்பது சிரசோதயகாலம் என்று பழைய ஜாதகக் குறிப்புகளில் இருக்கும்.  அதாவது குழந்தையின் (சிரசு) தலை உதயமான காலம்.  இப்போது தொப்புள் கொடி அறுப்பது தான் குழந்தையை தனிமைப்படுத்தி தனி உயிராக்குகிறது என்கிறார்கள்.

ஆனால், ஒரு சிசுவானது எப்பொழுது சுயமாக சுவாசிக்க ஆரம்பித்து, தனது கர்ம வினைகளின்படி வாழக்கையை ஆரம்பிக்கிறதோ, அந்த வினாடியே சிசுவின் உண்மையான பிறந்த நேரம் என்று முடிவு செய்யலாம்.

அது சரி, பிறந்த நேரத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?

நமது கருத்து என்னவெனில், பிறந்த நேரம் சரியாக இருந்தால்தான் ஒருவரது குழந்தை பருவம் தொடங்கி முதுமை காலம் வரை அவருக்கு நடக்கும் நன்மை, தீமை பலன்களை சரியாக கணிக்க முடியும். இறைநிலை அருளிய 36 பாக்கியங்களில் எவற்றையெல்லாம் அனுபவிக்கும் அமைப்பு உள்ளது. எவை மூலமாக இன்னல்கள் வரும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஜாதகர் வளரும் சூழ்நிலை, அடிப்படை கல்வி, உடல் நிலை, தந்தை-தாயின் அரவணைப்பு, செய்யும் தொழில், பார்க்கும் உத்தியோகம், திருமண பாக்கியம், இல்லற வாழ்க்கையில் அனுபவிக்கும் இன்பம், குழந்தைப் பேறு, ஆயுள் காலம் போன்ற அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

சரி, பிறந்த நேரம் தவறாக இருந்தால் பலன்கள் மாறுமா?

உறுதியாக. ஒரு ஜாதகர் தன் கர்ம வினைப்படி எவற்றை அனுபவித்து ஆகவேண்டுமோ அவற்றை அனுபவித்தே தீர வேண்டும். இதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. ஆனால் பிறந்த நேரம் தவறாக குறிக்கப்பட்ட ஒரு ஜாதகர், தனது எதிர்காலத்தை கணிக்க வேண்டி ஜோதிடரிடம் வரும்போது, ஜோதிடர் கணிக்கும் அத்தனையும் தவறாக போகும். இங்குதான் அனைத்து ஜோதிடர்களும் கேலிக்கு உள்ளாகின்றனர்.

என்றுமே ஜோதிடம் தவறாகாது; ஜோதிடர்தான் தவறு செய்வார்.

ஒரு ஜாதகரின் பிறந்த நேரத்தை துல்லியமாக நிர்ணயம் செய்ய நமது ஜோதிடத்தில் சிறப்பான முறைகள் பல உண்டு. இதற்கு தேவை
  • ஜாதகரின் பிறந்த தேதி
  • ஜாதகரின் பிறந்த நேரம்
  • ஜாதகரின் பிறந்த இடம் 
ஆகியன மட்டுமே. மேற்கண்ட விபரங்கள் இருந்தால் ஜாதகரின் துல்லியமான பிறந்த நேரத்தை கணித்துவிட முடியும். ஜாதகரின் ஜாதக பலாபலன்களை தெளிவாக தெரிதுகொள்ள முடியும்.

நமது ஸ்ரீ ஜோதிடத்திலும் அவ்வாறு பிறந்த நேரம் சரிபார்த்தபின்னரே பலன்கள் சொல்ல துவங்குகிறோம்.

அன்பர்களது கருத்துகள் பின்னூட்டத்தில் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

தொடர்புக்கு : 98404 65277, 9444 97 9615
 

Sunday, March 9, 2014

உண்மையான திருநீறு

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.

இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும் படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்ற! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.

பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது, விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும்,

வீபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும்
சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.


திருநீறு வகைகள். திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை

1.கல்பம் = கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும்.

2.அணுகல்பம் - ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.

3.உபகல்பம் - மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.

4. அகல்பம். -அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்

Sunday, February 16, 2014

இந்த வருடம் பொதிகை செல்ல மிக முக்கிய காரணமாக இருந்தவர் திண்டுகல்லை சேர்ந்த நண்பர் திரு.முருகேசன் தான். கிட்டத்தட்ட 6 மாதங்களாக தினமும் போன் செய்து விசாரித்து கொண்டிருப்பார். சென்ற மே மாதம் முதற்கொண்டு முயற்சி செய்து வந்தோம். கேரளா வனத்துறையின் கெடுபிடிகள் காரணமாக செல்ல முடியவில்லை. தமிழக பாதை வழியாக செல்லவும் முயற்சி செய்து பார்த்தோம் ஆனால் வனத்துறை அதிகாரிகள் கருணை காட்டவில்லை. ஆகவே வழக்கம் போல் கேரள பாதை தான் என முடிவு செய்து தினமும் folow செய்து ஒரு வழியாக(பல போராட்டங்களுக்கு நடுவில்) ஜனவரி 28 அன்று அனுமதி கிடைத்தது.

சென்னையிலிருந்து அடியேன், CTS ராஜன் கணேஷ் மற்றும் CTS ஜெய் நம்பி ராஜா ஆகிய மூவரும் கிளம்புவதாக எங்கள் திட்டம். கடைசி நேரத்தில் ராஜன் கணேஷ் அவரால் வர முடியாத சூழலால் அடியேனும் ஜெய் நம்பி ராஜா வும் கிளம்பினோம். சென்னையிலிருந்து திருநெல்வேலி சென்று சில ஸ்தலங்களை பார்த்துவிட்டு அங்கிருந்து பாநாசம் சென்று மற்ற அடியார்களுடன் சேர்ந்து அங்கிருந்து பொதிகை செல்வது தான் எங்கள் திட்டம்.

ஒருநாள் முன்னதாக நம்பி நெல்லை சென்றுவிட்டார். அடியேன் 26.1.14 ஞாயிறு அன்று நெல்லை எக்ஸ்பிரஸ்-ல் கிளம்பினேன். மறுநாள் காலை 9 மணியளவில் நெல்லை போய் சேர்ந்தேன். காலைக்கடன்களை முடித்துவிட்டு பஸ்ஸில் பாபநாசம் சென்றடைந்தோம்.

முதலில் அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில் தரிசனம்.
Tuesday, January 14, 2014


Pothigai Tour
பொதிகைப் பயணம்  2014
நமது குரு ஓம் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் கருணையால் வரும் ஜனவரி 28ம் தேதி பொதிகை செல்ல அனுமதி கிடைத்துள்ளது. அடியேன் மற்றும் சில நண்பர்கள் குழுவுடன் (சுமார் 15 பேர்) செல்ல இருக்கிறோம்.

இந்த வருடம் கேரளா வனத்துறையின் கெடுபிடியால் சற்று தாமதமாகியுள்ளது.

மேலும் பக்தர்களுக்கு வசதியாக ஆன்லைனில் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன் முகவரி http://www.forest.kerala.gov.in/. இந்த தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு மட்டும் தான் அனுமதி.

அடியார்களுக்கு ஏதேனும் கூடுதல் தகவல் தேவைப்பட்டால் தயங்காமல் அடியேனை தொடர்பு கொள்ளலாம். போன் நம்பர் 9944309615. 9444979615

S. சேர்மராஜ்