இந்த வருடம் பொதிகை செல்ல மிக முக்கிய காரணமாக இருந்தவர் திண்டுகல்லை சேர்ந்த நண்பர் திரு.முருகேசன் தான். கிட்டத்தட்ட 6 மாதங்களாக தினமும் போன் செய்து விசாரித்து கொண்டிருப்பார். சென்ற மே மாதம் முதற்கொண்டு முயற்சி செய்து வந்தோம். கேரளா வனத்துறையின் கெடுபிடிகள் காரணமாக செல்ல முடியவில்லை. தமிழக பாதை வழியாக செல்லவும் முயற்சி செய்து பார்த்தோம் ஆனால் வனத்துறை அதிகாரிகள் கருணை காட்டவில்லை. ஆகவே வழக்கம் போல் கேரள பாதை தான் என முடிவு செய்து தினமும் folow செய்து ஒரு வழியாக(பல போராட்டங்களுக்கு நடுவில்) ஜனவரி 28 அன்று அனுமதி கிடைத்தது.
சென்னையிலிருந்து அடியேன், CTS ராஜன் கணேஷ் மற்றும் CTS ஜெய் நம்பி ராஜா ஆகிய மூவரும் கிளம்புவதாக எங்கள் திட்டம். கடைசி நேரத்தில் ராஜன் கணேஷ் அவரால் வர முடியாத சூழலால் அடியேனும் ஜெய் நம்பி ராஜா வும் கிளம்பினோம். சென்னையிலிருந்து திருநெல்வேலி சென்று சில ஸ்தலங்களை பார்த்துவிட்டு அங்கிருந்து பாநாசம் சென்று மற்ற அடியார்களுடன் சேர்ந்து அங்கிருந்து பொதிகை செல்வது தான் எங்கள் திட்டம்.
ஒருநாள் முன்னதாக நம்பி நெல்லை சென்றுவிட்டார். அடியேன் 26.1.14 ஞாயிறு அன்று நெல்லை எக்ஸ்பிரஸ்-ல் கிளம்பினேன். மறுநாள் காலை 9 மணியளவில் நெல்லை போய் சேர்ந்தேன். காலைக்கடன்களை முடித்துவிட்டு பஸ்ஸில் பாபநாசம் சென்றடைந்தோம்.
முதலில் அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில் தரிசனம்.

No comments:
Post a Comment