Monday, March 28, 2011

போகரின் சப்த காண்டம் - 7000 : 1 - 10 பாடல்கள்

போகர் ஏழாயிரம் - 1 - 10 பாடல்கள்

  1. ஆனந்தமாய் நிறைந்த ஆதிபாதம் அண்டபரி பூரணமாம் ஐயர் பாதம்
    வானந்தமாகி நின்ற கணேசன் பாதம் மருவியதோர் மூலத்தின் நந்தி பாதம்
    தானந்தமாகியதோர் காளாங்கி பாதம் கனவருடவியாக்கிரமர் பதஞ்சலியின் பாதம்
    போனந்தமாகியதோர் ரிஷிகள் பாதம் போற்றி ஏழாயிரம் நூல் பகலுவேனே
  2. தானான தாமிரபரணி ஏழு காதம் தாக்காண காவேரி எழுபது காதம்
    வேனான கங்காவும் எழுநூறு காதம் வேகமுடன் சென்றுமல்லோ குளிகைகொண்டேன்
    கானான கடலேழும் சுற்றிவந்து காணாத காட்சியெல்லாம் கண்ணிற் கண்டு
    பாணான பராபரியை மனதிலெண்ணி பாடினேன் சப்தகாண்டம் பண்பாய்த்தானே
  3.  பண்பான வைத்தியமும் வாதமார்க்கம் பரிதான ஜெகஜால குளிகைமார்க்கம்
    நண்பான சித்தர்களின் மறைவுமார்க்கம் நலமான ராஜாக்கள் இருந்தமார்க்கம்
    திண்பான தேவர்தாம் கடந்தமார்க்கம் திறமான மனோவேகம் செல்லும்மார்க்கம்
    தண்பான சாஸ்திரங்கள் தொகுப்புமார்க்கம் தயவான மூலிகையுட ரகசியங்காணே
  4.  காணவே பாண்டவாளிருந்த மார்க்கம் கதிர்மதியின் கிரிகைகளிலிருக்கும் மார்க்கம்
    பூணவே பிரமாலய தேவாலயங்கள் புகழான பாசமான மலைகள் மார்க்கம்
    தோணவே சரக்குகளின் வைப்பு மார்க்கம் துறையான ஆதிமலைகளிருக்கு மார்க்கம்
    ஈணவே மிருகங்கள் மகத்துவமார்க்கம் எழிலான பட்ஷியுட மார்க்கம்பாரே
  5.  பார்க்கவே மனிதரிடம் பேதாபேதம் பாங்கான உரைகோடி சொந்தங்கோடி
    ஏர்க்ககே அதிசயங்கள் எடுத்துக்கூற ஆதிசேஷனிலும் ஆகா
    சேர்க்கவே உலகத்தின் மகிமைகோடி சிறப்பான அதிசயங்கள் உள்ளதெல்லாம்
    ஆர்க்கவே சித்தர்களை வணங்கியானும் அன்பாக போகரிஷி அறைந்திட்டேனே
  6.  அறைந்திட்டேன் ஏழுலட்சம் கிரந்தந்தன்னைஅன்பாக அதிசயங்களெல்லாம் பார்த்து
    குறைந்திட்டேன் போகரேழாயிரமாக கூறினேன் லோகத்து மாந்தர்க்காக
    வறைந்திட்டேன் நாலுயுக அதிசாயங்கள் யாவும் வாகாக பாடிவைத்தேன் சத்தகாண்டம்
    வுறைந்திட்டேன் சீனதேசம் யானும்சென்று பாடினேன் போகரிஷி புகலுவேனே
  7. புகலுவேன் வாதியென்ற பேர்களுக்கு போற்றியே மெய்ஞானம் வரவேண்டும்
    நிகலுகின்ற ஆதாரம் அறியவேண்டும் நீக்கறிய காலத்தை நிறுத்தவேண்டும்
    புகலுகின்ற பராபரியை பூசிக்கவேண்டும் பானமென்றால் தூசிக்காய் பருவம்வேண்டும்
    மகலுகின்ற குருமுறையும் கைமுறையும் வேண்டும் மறுகாட்டாவிதெல்லாம் வாதம்போச்சே
  8.  போகாமல் வாதத்தை நிறுத்தவென்றால் போக்கோடே சவர்க்காரக் குருவைப்பண்ணு
    வாகாக முப்பைநன்றாய் கட்டியிறு மருவியதன் பூரத்தையுப்பு பண்ணு
    தாகாறும் தாளகத்தை நீறுபண்ணு சமர்த்துடனே வங்கத்தை சுண்ணம்பண்ணு
    வேகாத துரிசியைத்தான் குருவாய்ப்பண்ணு விளங்கியதோர் வாதமெல்லாம் கைக்குள்ளாச்சே
  9.  கரிமுகன் பதம் போற்றி கடவுள் பதம் போற்றி கடாட்சித்து எனையீன்ற ஆயிபதம் போற்றி
    அரிஅயன் பதம் போற்றி வாணி பதம் போற்றி அருள்தந்த லட்சுமிதான் ஆயிபதம்போற்றி
    வரியமாம் பாட்டனென்ற மூவர்பதம் போற்றி துணையான காளாங்கி அய்யர்பதம்போற்றி
    நிரிவிகற்ப சமாதியுற்ற ரிஷிகள்பதம் போற்றி நிறைந்துநின்ற சரளமே காப்புதானே
  10.  தானான ஏழுலட்சம் சிவன்தான் சொன்ன சாஸ்திரத்தின் கருவெல்லாம் திரிக்கப்பண்ணி
    கோனான குருநூலாம் ஏழுகாண்டம் கொட்டினேன் வாதமென்ற முறைதடன்னை
    பானான பாட்டுரைதான் கருக்கள் கேட்டு பயின்றெடுத்த ஆயிசொன்ன பண்புகேட்டு
    தேனான காளாங்கி ஐயரையுங் கேட்டு செப்பினேன் சத்தகாண்டம் திறமாய்த்தானே

No comments:

Post a Comment

Pinned Notes

பொதிகைமலைப் பயணம் 2016

**UPDATE** குருதேவரின் கருணையால் அவரை தரிசிக்கவும் அவரின் ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு கிடைத்து விட்டது.  வரும் 28ம் தேதி அன்று சென்னையிலிரு...