Tuesday, March 29, 2011

போகரின் சப்த காண்டம் - 7000 : 11 - 20 பாடல்கள்

போகர் ஏழாயிரம் - 11 - 20 பாடல்கள்

  1. காணவே மூலமது அண்டம்போல காரணமாய் திரிகோணமாகி நிற்கும்
    பூணவே மூன்றின்மேல் வளையமாகும் பிரம்பாக இதழதுதான் தானுமாகும்
    நாணவோ நாற்கமலத்து அட்சரத்தைக்கேளு நலமான வயநமசி ரீரீயாகும்
    மூணவே முக்கோணத்துள் ஒளிஓங்காரம் முயற்சியால் அதற்குள்ளே யகாரமாச்சே

  2. அகாரத்தின் மேலாக கணேசன் நிற்பார் ஆதியொருகோணத்தில் உகாரம்நிற்கும்
    உகாரத்தின் வல்லமையால் சக்தி நிற்பாள் ஒடுங்கியதோர் மூலையொன்றில் கதலிப்பூவாய்
    புகாரமாய் முகங்கீடிந குண்டலியாஞ்சக்தி பெண்பாம்புபோல் சுருட்டி சீறிக்கொண்டு
    சுதாரமாய் சுழிமுனையோடு உருவிநிற்பாள் துரியாதீதமென்ற அவத்தைதானே

  3. அவத்தைக்கு இருப்பிடம் மூலமாகும் அழகான கதலிப்பூ எட்டிதழாய் நிற்கும்
    நவத்திற்கு நந்தியநூல் வாயில்நிற்பாள்நற்சிவமாம் சிகாரத்தில் கோடியாகும்
    வவத்தைக்கும் வாய்திறவான் மலனால்மூடும் மைந்தனே எட்டிதழில் எட்டுசக்தி
    பவத்தைக்கு சக்திஎட்டின் பேரேதென்றால் பாங்கான அனிமாவும் லகிமாத்தானே

  4.  தானான லகிமாவும் கிரிமாவோடு தங்குமே சுரக்கத்தான் சத்தில்சத்து
    பூனான பிரதாசத்தி பிரகாமிசத்தி பேரேட்டுத்தேவரையும் தளத்தில் நின்று
    ஏனான இதழாலே மூடிக்கொள்வார் ஏத்தமாம் நந்தியைத்தான் காணாமையால்
    வானான வஸ்துவைநீ பாணம்பண்ணி வங்கென்று வாங்கியே கும்பித்ததே

  5.  ஊதினால் என்வாசத்தில் அகரியாலே உலவுவார் இதழெல்லாம் திறந்துவிட்டு
    போதினால் ஆயிசொன்ன ஏவல் கேளப்பா பூந்துபார் நந்திகண்டால் யோகமாகும்
    வாதினால் பத்தான வருவித்திக்கும் வாசலையே திறவாமல் மூடிக்கொள்வர்
    ஏதினால் இதுக்குல்லே வாசிமாட்டு இடத்தோடி வங்கென்றே உள்ளேவாங்கே

  6. வாங்கியே நந்திதனில் சிங்கென்றுகும்பி வலத்தோடில் சிங்கென்று உள்ளேவாங்கி
    தாங்கியே வங்கென்று இருத்திக்கும்பி தளமான தெளிவாகும் வெளியால்காணும்
    ஓங்கியே மாணிக்க ஒளிபோல்தோன்றும் உத்தமனே மூலத்தின் உண்மைகாணும்
    தேங்கிய வல்லமையாஞ்சத்தி தானும் சிறந்திருந்தால் பச்சைநிறமாகுந்தானே

  7. பச்சைநிற வல்லமையை பணிந்துபோற்று பாங்கான யாருக்கும் பருவம்சொன்னால்
    மொச்சையாய் மூலமது சத்தியானால் மூவுலகும் சஞ்சரித்து திரியலாகும்
    கச்சைநிற காயமுமே கனிந்துமின்னும் கசடகன்று ஆறுதளம் தன்னில்தோன்றும்
    துச்சைநிற வாதமது சொன்னபடிகேட்கும் துரியத்தின் சூட்சமெல்லாம் தோன்றும்பாரே

  8. பாரென்று புரிஅஷ்ட நாவில்சேர்க்கும் பளிச்சென்று மூலத்தில் ஜோதிகாணும்
    காரென்ற தீபவொளி கண்ணோகூசும் கணபதிதான்கண்முன்னே நிர்த்தம்செய்வார்
    ஊரென்ற யோகத்துக்கு உறுதிசொல்வார் உற்பணமாம் வாதத்தின் உண்மைசொல்வார்
    நேரென்ற சதாசிவத்தின் நிலையும் சொல்வார் நீச்சென்று விட்டாக்கால் யோகம்போச்சே

  9.  போச்சென்று விடுக்காதே மூலந்தன்னை போகையிலும் இருக்கையிரு மனத்தில்பூனு
    சேச்சென்ற வீரசத்தம் கேளாய்பக்கம் புரந்திருந்து லட்சியத்தை பூட்டி வாங்கு
    மாச்சென்று வாசியைநீ தவறொட்டாதே மனந்தன்னை மூலத்தில் மருவிச்சேர்க்கும்
    மேச்சென்று கடினம்போல் முன்னேகாணும் விடுகாதே மாச்சலாய் விரைந்துண்ணே

  10. உன்னியே பழகுமட்டும் கடுக்காய்காணும் உட்புகுந்து பார்த்துவந்தால் உறுதிகூடும்
    வன்னியே துலங்குமட்டும் மனதலைக்கும் மாசற்றொளிவு கண்டால் மகிடிநச்சியாகும்
    பின்னியே பிங்கலையில் இசையும்கூடும் பேரானசுழினைதன்னில் கெட்டிசேரும்
    நன்னியே நமன்வெகுன்டு அப்பால்போவான் ஆளெல்லாம் கடிகையுமாய் நாட்டலாமே

No comments:

Post a Comment

Pinned Notes

பொதிகைமலைப் பயணம் 2016

**UPDATE** குருதேவரின் கருணையால் அவரை தரிசிக்கவும் அவரின் ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு கிடைத்து விட்டது.  வரும் 28ம் தேதி அன்று சென்னையிலிரு...