Thursday, March 24, 2011

சித்தர்கள்


கொஞ்ச நாளாவே இணைய வலைப்பூக்கள்ள சித்தர்களைப் பற்றி படிக்க ஆரம்பிச்சேன். சத்தியமா இதுக்கு எந்த காரணுமும் இல்ல. அனுஷ்காவையும் த்ரிஷாவையும் வழிய வழிய பாத்துட்டு சித்தர்களை பத்தி படிக்கறது என்னவோ கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். ஆனா எனக்கென்னவோ சித்தர்கள் டாபிக் interesting ஆகவே இருந்திச்சு.

ஒரு வாரமா ஆபீஸ்ல வேலைக்கு நடுவுல (Please note this point)  நல்லா அவங்களைப் பத்தி research பண்ண ஆரம்பிச்சேன்.

அவங்களுடைய பிறப்பு, வளர்ந்த முறைகள், வளர்ந்த காலக்கட்டங்கள், உணவு முறைகள்,  மருத்துவ முறைகள், சமூக கட்டமைப்புகள், இப்படி எல்லாத்தையுமே....ஆனா என்னால எல்லாத்தையும் gather பண்ண முடியல. இதுக்கான முக்கிய காரணம் அந்த காலத்து தமிழ். அவங்க சொன்னதும் அவங்களப் பத்தி சொன்னவங்களும் செய்யுள் நடையா தான் சொல்லிருக்காங்க. நம்ம (செய்யுள்)தமிழ்ல கொஞ்சம் வீக். So, நா கிளீன் போல்ட்.

ஆனாலும் பலப்பல இணையங்கள்ள நல்லா விரிவாஅவங்களப் பத்தி சொல்லிருக்காங்க. அந்த மாதிரியான இணையத்தளங்கள், வலைப்பூக்கள் எனக்கு ரொம்ப உதவியா இருந்திச்சு.

சித்தர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளோ ஆவணங்களோ கல்வெட்டுகளோ எதுவுமே காணக்கூடியதாக இல்லை. (or எனக்கு தெரியல...) இந்நிலையில் சித்தர்கள் எத்தனைபேர்கள் என்பதில் பல்வேறு கருத்துகள் இருக்குதுங்க. திரேதாயுகத்தில் ஆயிரம்பேர், துவாபார யுகத்தில் ஐந்நூறு பேர், கலியுகத்தில் மூவாயிரம் பேர் 59 சித்தர்கள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுது.


சரி, சித்தர்கள் னா யாருங்க?

பொதுவா எல்லாருக்கும் தெரிஞ்ச மாதிரி, இரும்பை தங்கமா மாத்திறவங்க...தண்ணி மேல நடகறவங்க, வானத்துல பறக்கறவங்க...இந்த மாதரியான சித்து வேலைகளை பண்றவங்களா...? சத்தியமா இல்லை. நானும் ரொம்ப நாளா அப்படிதான் நினைச்சுட்டு இருந்தேன்.

சித்தர்கள்னா சித்தி பெற்றவங்கனு பொருள் கொள்ளலாம். அதாவது சிவத்தை நினைத்து, தியானித்து அவரை அகக்கண்ணால் தரிசித்து தன்னுள் இருக்கும் ஆத்ம சக்தியை எழுப்பி இந்த உலகில் மற்ற சாதரணமான மக்கள் செய்ய முடியாத காரியங்களை செய்யறது சித்தர்களுடைய வேலையாகும். இதைத்தான் சித்து விளையாட்டுகள்னு நாம சொல்றோம்.


சித்தத்தை அடக்கியவங்க மட்டும் சித்தர்கள் இல்லைங்க. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்ச இரகசியத்தை, இறை ஆற்றலை இப்படி அனைத்தையும் கண்டு தெரிஞ்சவங்களே சித்தர்கள். அதாவது இயற்கையோடு  இயற்கையாக வாழ்ந்து இயற்கையோட இரகசியத்தை கண்டு தெரிஞ்சவங்களே சித்தர்கள்.

சித்தர்களின் இருப்பிடம்

சித்தர்கள் தங்கள் இருப்பிடமாக மக்கள் வாழ்விடங்களைத் தேர்வு செய்யாமல், மலைகளிலேயே இருந்திருக்காங்கன்னு  தெரியுது. மலை என்பது தனிமை, அமைதி, மூலிகை போன்றவற்றின் இருப்பிடம் என்பதால் அவ்விடங்கள் சித்தர்களுக்குச் சிறந்ததாக இருந்திச்சு.

No comments:

Post a Comment

Pinned Notes

பொதிகைமலைப் பயணம் 2016

**UPDATE** குருதேவரின் கருணையால் அவரை தரிசிக்கவும் அவரின் ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு கிடைத்து விட்டது.  வரும் 28ம் தேதி அன்று சென்னையிலிரு...