14.4.13 ஞாயிற்றுக்கிழமை தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.ஜோதிடரீதியாகப் பார்க்கும் போது,ரவி என்ற சூரியன் பனிரெண்டு ராசிகளையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு மீண்டும் மேஷ ராசிக்குள் நுழையும் நாள் இது.சூரியன் ஒரு ராசிக்குள் நுழையும் நாளில் சூரியனின் சக்தி பல மடங்கு வெளிப்படும்.இந்த நாளில் நாம் செய்யும் இறைவழிபாடு,தியானம் நமக்கு அளவற்ற சக்தியைத் தரும்.இதன்மூலமாக படிப்படியாக நமது கடுமையான கர்மவினைகள் தீரத் துவங்கும்;
கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த புண்ணியச்செயல்களுக்கு ஏற்ப இப்பிறவியில் நமக்கு குறிப்பிட்ட திறமைகள், கல்வித்தகுதி, சாதனைகள், சொத்துக்கள், மனைவி, புகழ் அமைந்திருக்கிறது; அதே போல,கடந்த ஐந்துபிறவிகளில் நாம் செய்த பாவச் செயல்கள்,திமிர்த்தனங்களுக்கு ஏற்ப இப்பிறவியில் நமக்கு குறிப்பிட்ட அவமானங்கள், குறைகள், ஏக்கங்கள், கடன்/நோய்/எதிரி/தோல்விகள் உருவாகின்றன.இதைச் சரி செய்ய நாம் எந்த சித்தரை வணங்கினாலும்,அவர் நம்மை ஆசிர்வாதிப்பார்;அவ்வளவுதான்!நமது கர்மவினைகளை நாமே நமது சுய முயற்சியில் போராடி தீர்க்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்;அவ்வாறு குறைக்க உதவுபவையே அன்னதானம்,ஆடைதானம்,ஓம்சிவசிவஓம் ஜபித்தல்,காலபைரவ மந்திரம் ஜபித்தல்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்தல்,இவைகளை நேரடியாகவோ இணையம் மூலமாகவோ பரப்புதல் ஆகும்.
எமது அனுபவப்படி,இந்த விஜயவருடத்தின் முதல் நாள் 14.4.13 ஞாயிறு வருகிறது.இன்று முதல் கன்னி ராசி,துலாம் ராசி,விருச்சிகராசி,மீன ராசி,மேஷ ராசியினர் ஸ்ரீகால பைரவர் வழிபாடு மற்றும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யத் துவங்குவது நன்று.இந்த ராசிக்காரர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டாம்.ஏனெனில்,இந்த ஐந்து ராசிக்காரர்களும் சனிபகவானின் பாதிப்பில் படாத பாடு பட்டு வருகிறார்கள்;இதிலிருந்து மீள சனிபகவானின் குருவாகிய ஸ்ரீகாலபைரவரை தினமும் வழிபட்டு வருவது அவசியம்.
இதில் கன்னி ராசி,மீன ராசியினர் 16.12.2014 வரையிலும்;துலாம் ராசி,மேஷ ராசியினர் 1.7.2017 வரையிலும்;விருச்சிகராசியினர் 2021 வரையிலும் தினமும் ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்வதே நன்று.மிக எளிமையாக வீட்டில் ஒம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்பதை தினமும் 108 முறை ஜபித்து வருவதும்;ஓவ்வொரு சனிக்கிழமையும் அருகில் இருக்கும் பழமையான சிவாலயம் சென்று அங்கே அவரவர் ராசிப்படி நாம் முன்பே வெளியிட்டபடி ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்து வருவது அவசியம்.மேலும்,ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வருவதும் அவசியம்.
இந்த ராசிகளைத் தவிர,பிற ராசியில் பிறந்தவர்கள் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருவது நன்று.ஓம்சிவசிவஓம் ஜபித்துவரும் காலங்களில் பவுர்ணமி அல்லது திருவாதிரை நாட்களில் மட்டும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதற்கு விடுமுறை விட்டு,அன்று மட்டும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றியை எழுதுவது நன்று.
இதுவரை ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தவர்கள்,இடையில் பல்வேறு காரணங்களால் ஜபிக்க முடியாமல் போயிருக்கலாம்;அவர்கள் அனைவரும் இந்த புத்தாண்டு முதல் நாளில் மீண்டும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிப்பது நன்று.
இதுவரை ஸ்ரீகாலபைரவர்/ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தவர்கள் ஏதாவது காரணத்தால் நிறுத்தியிருந்தால் இன்று (14.4.13) முதல் மீண்டும் உரிய பைரவ வழிபாட்டைத் துவக்குவது அவசியம். இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் எத்தனை பேர்களுக்கு ஆன்மீகக்கடல் தெரிந்திருக்கும்? நமக்கு தெரிந்திருக்கிறது!
ஆன்மீகக்கடலின் ஜோதிட மற்றும் ஆன்மீக ஆலோசனைகளில் ஏதாவது ஒன்றே ஒன்றை மட்டும் நீங்கள் பின்பற்றத் துவங்கியிருந்தாலும் ஆன்மீகக்கடல் உங்களது சிறந்த ஆன்மீக வழிகாட்டி என்பதை புரிந்திருப்பீர்கள்; நாம் முதலில் நமது ஆத்மசக்தியை அதிகரிப்போம்; நம்மைப் பார்த்து,கவனித்து, நம்மைச் சுற்றியிருப்பவர்கள் பிறகு நம்மோடு கைகோர்க்கட்டும்!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
ஓம்சிவசிவஓம்
அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
நன்றி :: www.aanmigakkadal.com
No comments:
Post a Comment