விஜய வருடத்தின் முதல் பவுர்ணமியானது 25.4.13 அன்று ஆரம்பித்து மறுநாள் 26.4.13 வரை இருக்கிறது. பவுர்ணமியோடு சேர்ந்து கிரகணமும் வருவதால், இந்த பவுர்ணமியானது அதிமுக்கியத்துவம் பெறுகிறது. ஆமாம்! மேஷ ராசியில் ஆத்மக்காரனாகிய சூரியன், ஞானக் காரனாகிய கேதுவுடன் சேர.மனக்காரனாகிய சந்திரன், ராகுவுடன் துலாம் ராசியில் சேருகிறது. ஆண்டுக்கு ஒருமுறையே இவ்வாறு கிரகணம் அமையும். இந்த நன்னாளில் இன்னொரு சூட்சுமரகசியம் அமைவது என்னவெனில், சூரியனும் கேதுவும் ஸ்ரீகால பைரவரின் ஜன்ம நட்சத்திரமான பரணியில் சேர்ந்து இந்த கிரகணத்தை தோற்றுவிப்பதால், இந்த வாய்ப்பினை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.ஒருவேளை இந்த கிரகண நாளை விட்டு விட்டால் மீண்டும் இதே கிரகணம் உருவாக பதினெட்டு ஆண்டுகள் தான் ஆகும்.
கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த நற்செயல்களின் விளைவாக நாம் இப்போதைய வசதிகளை அனுபவிக்கிறோம்; செல்வாக்குடன் இருக்கிறோம்; நமது ரேஞ்சுக்கு புகழுடன் வாழ்ந்துவருகிறோம்; அதே போல ,கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த தீயச் செயல்களின் விளைவாக இந்தப் பிறவியில் கடன்கள் அல்லது நோய் அல்லது அவமானம் அல்லது புறக்கணிப்பு அல்லது மனவேதனைகள் அல்லது இவைகள் அனைத்தையும் அனுபவித்தும் வருகிறோம்.இந்த இரண்டும் நாடாளும் மன்னனாக இருந்தாலும் சரி, வீட்டிலேயே மரியாதை இல்லாத பெண்ணாக (ஆணாக) இருந்தாலும் சரி அனைவருக்கும் பொதுவாகவே அமைந்திருக்கிறது.இதில் நமது தீயச் செயல்களின் விளைவுகளைத் தாங்க முடியாமல் ஏதேதோ வழிபாடு, பரிகாரம் செய்து வருகிறோம்.இதைச் செய்தாலாவது நாம் நிம்மதியை அடைய மாட்டோமா? என்று ஏங்குகிறோம்.
அந்த ஏக்கத்தை நீக்கிட ஒரு அரியவாய்ப்பு இன்றும்(25.4.13),நாளையும்(26.4.13) ஏற்பட்டிருக்கிறது.நாம் செய்ய வேண்டியது இதுதான்:
நமது ஆன்மீகக்கடலில் பிப்ரவரி மாதம் 2013 இல் வெளியிடப்பட்டிருக்கும் பைரவ சஷ்டி கவசத்தை இந்த இருநாட்களில் எழுதி முடிப்பது மட்டுமே!
எங்கே எழுதுவது?
வசதி உள்ளவர்கள் அருகில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் எழுதலாம். அது முடியாதவர்கள் அவரவர் வீட்டிலேயே எழுதலாம்; கூட்டுக் குடும்பமாக இருப்பவர்களில் அனைவருமே எழுதலாம். ஒரே நிபந்தனை: இரண்டே நாட்களில் பைரவ சஷ்டி கவசத்தையும் எழுதி முடித்துவிட வேண்டும்.
சரி! எப்போது இந்த இரண்டு நாட்களில் எழுத வேண்டும்?
இந்த இரண்டு நாட்களில் எப்போது வேண்டுமானாலும் எழுத ஆரம்பிக்கலாம்; எப்போது வேண்டுமானாலும் எழுதி முடிக்கலாம்;
சரி! எதில் எழுதுவது?
நோட்டு புத்தகத்தில் எழுதலாம்;வெள்ளைக் காகிதத்தில் எழுதலாம்; கணினியில் டைப் செய்யக் கூடாது;
எப்படி எழுதுவது?
அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுவதும்,எழுதி முடிப்பதும் அவசியம்.
எழுதி முடித்துவிட்டு என்ன செய்ய?
எழுதி முடித்ததை பத்திரப்படுத்தி வைக்கவும்:அடுத்தபடியாக 9.5.13 வியாழக்கிழமை அன்று சித்திரை மாதத்து அமாவாசை வருகிறது.இந்த அமாவாசையானது ஸ்ரீகால பைரவப் பெருமானின் ஜன்ம நட்சத்திரமான பரணியில் வருகிறது. அன்று ஸ்ரீகாலபைரவரின் 1008 போற்றி அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரின் 1008 போற்றியை இத்துடன் சேர்த்தே எழுதி வைக்கவும்.
மேலும்
உங்கள் மகன்/ள் பள்ளிப் படிப்பு/பாலிடெக்னிக்/கல்லூரி படித்துக் கொண்டிருப்பவரா?இந்தியாவில் ஆண்டுவிடுமுறைக் காலம் துவங்கியிருக்கிறது.எனவே,உங்கள் மகன்/ளை பின்வரும் ஸ்ரீகால பைரவ மந்திரத்தை தினமும் நூற்றிஎட்டுமுறை எழுதச் சொல்லலாம்;மீண்டும் பள்ளி/கல்லூரி திறக்கும் வரையிலும் தினமும் எழுதச் சொல்லலாம்;
தாங்கள் எழுதியவைகளை தங்களின் வீட்டுப்பூஜை அறையில் அல்லது பணம் வைக்கும் பெட்டியில் பத்திரமாக வைக்கவும்.தாங்கள் மனப்பூர்வமாக எழுதியது எப்படி உங்களுக்கு பாதுகாவலாக,வழிநடத்தும் பைரவ சக்தியாகச் செயல்படுகிறது என்பதை உணர்வீர்கள். இவைகளில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது செய்வதன் மூலமாக உங்களுடைய நீண்டகாலப் பிரச்னைகள் தீரத்துவங்கும்;
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
முக்கியமான விஷயம் இவைகளில் எதை எழுதத் துவங்கினாலும்,எழுதுபவர் அசைவம் சாப்பிடக் கூடாது;எச்சரிக்கை!!!
ஓம்சிவசிவஓம்
நன்றி :: www.aanmigakkadal.com
No comments:
Post a Comment