Friday, December 12, 2014

பிறந்த நேரத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

பொதுவாக 90 சதவீத ஜோதிடர்களிடம் ஒரு மனப்பாங்கு உண்டு. என்னவென்றால் ஜோதிடம் பார்க்க வருபவர் எந்த  ஜாதகத்தை நீட்டினாலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அடித்து விட ஆரம்பித்து விடுவார்கள். ஜாதகத்தின் 12 கட்டங்களையும் ரவுண்டு கட்டி அடித்தால் தான் இவருக்கும் நிம்மதி; பார்க்க வருபவருக்கும் சந்தோசம்.
  • முதலில் கொண்டு வந்த ஜாதகம் சரியானது தானா?
  • பிறந்த நேரம் சரியாக உள்ளதா அல்லது சரி பார்க்க வேண்டுமா? 
  • ஜாதகர்/ஜாதகி தற்போது உயிரோடு உள்ளாரா? 
  • அவரின் ஆயுள் எப்படி உள்ளது?
என்றெல்லாம் பார்ப்பது இல்லை. வாய்க்கு வந்தபடி அடித்து விட ஆரம்பித்து விடுவார்கள்.

ஏன் இவற்றை சரி பார்க்க வேண்டும்? ஜாதகத்தை உள்ளவாறு பார்த்தால் என்ன? இவற்றிற்கு நேரம் இருக்குமா? என்றெல்லாம் கேள்விகள் தோன்றுகிறதா? மேற்கொண்டு படியுங்கள்.

பிறந்த நேரத்தை முதலில் ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே.

முதலில் பிறந்த நேரம் என்பது என்ன? அதை எவ்வாறு கணிப்பது என்பது குறித்து பலவித குழப்பங்கள் இன்று உள்ளன.  தொப்புள் கொடி அறுத்த நேரமா, குழந்தை அழுத நேரமா, தலை வெளியில் தெரியும் நேரமா? முதல் இதய துடிப்பு நேரம் என்று எடுத்து கொள்ளவும் முடியாது. ஏனெனில் குழந்தையின் இதய துடிப்பு தாயின் கருவிலேயே துவங்கி விடும். பொதுவாக ஜனன காலம் என்பது சிரசோதயகாலம் என்று பழைய ஜாதகக் குறிப்புகளில் இருக்கும்.  அதாவது குழந்தையின் (சிரசு) தலை உதயமான காலம்.  இப்போது தொப்புள் கொடி அறுப்பது தான் குழந்தையை தனிமைப்படுத்தி தனி உயிராக்குகிறது என்கிறார்கள்.

ஆனால், ஒரு சிசுவானது எப்பொழுது சுயமாக சுவாசிக்க ஆரம்பித்து, தனது கர்ம வினைகளின்படி வாழக்கையை ஆரம்பிக்கிறதோ, அந்த வினாடியே சிசுவின் உண்மையான பிறந்த நேரம் என்று முடிவு செய்யலாம்.

அது சரி, பிறந்த நேரத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?

நமது கருத்து என்னவெனில், பிறந்த நேரம் சரியாக இருந்தால்தான் ஒருவரது குழந்தை பருவம் தொடங்கி முதுமை காலம் வரை அவருக்கு நடக்கும் நன்மை, தீமை பலன்களை சரியாக கணிக்க முடியும். இறைநிலை அருளிய 36 பாக்கியங்களில் எவற்றையெல்லாம் அனுபவிக்கும் அமைப்பு உள்ளது. எவை மூலமாக இன்னல்கள் வரும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஜாதகர் வளரும் சூழ்நிலை, அடிப்படை கல்வி, உடல் நிலை, தந்தை-தாயின் அரவணைப்பு, செய்யும் தொழில், பார்க்கும் உத்தியோகம், திருமண பாக்கியம், இல்லற வாழ்க்கையில் அனுபவிக்கும் இன்பம், குழந்தைப் பேறு, ஆயுள் காலம் போன்ற அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

சரி, பிறந்த நேரம் தவறாக இருந்தால் பலன்கள் மாறுமா?

உறுதியாக. ஒரு ஜாதகர் தன் கர்ம வினைப்படி எவற்றை அனுபவித்து ஆகவேண்டுமோ அவற்றை அனுபவித்தே தீர வேண்டும். இதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. ஆனால் பிறந்த நேரம் தவறாக குறிக்கப்பட்ட ஒரு ஜாதகர், தனது எதிர்காலத்தை கணிக்க வேண்டி ஜோதிடரிடம் வரும்போது, ஜோதிடர் கணிக்கும் அத்தனையும் தவறாக போகும். இங்குதான் அனைத்து ஜோதிடர்களும் கேலிக்கு உள்ளாகின்றனர்.

என்றுமே ஜோதிடம் தவறாகாது; ஜோதிடர்தான் தவறு செய்வார்.

ஒரு ஜாதகரின் பிறந்த நேரத்தை துல்லியமாக நிர்ணயம் செய்ய நமது ஜோதிடத்தில் சிறப்பான முறைகள் பல உண்டு. இதற்கு தேவை
  • ஜாதகரின் பிறந்த தேதி
  • ஜாதகரின் பிறந்த நேரம்
  • ஜாதகரின் பிறந்த இடம் 
ஆகியன மட்டுமே. மேற்கண்ட விபரங்கள் இருந்தால் ஜாதகரின் துல்லியமான பிறந்த நேரத்தை கணித்துவிட முடியும். ஜாதகரின் ஜாதக பலாபலன்களை தெளிவாக தெரிதுகொள்ள முடியும்.

நமது ஸ்ரீ ஜோதிடத்திலும் அவ்வாறு பிறந்த நேரம் சரிபார்த்தபின்னரே பலன்கள் சொல்ல துவங்குகிறோம்.

அன்பர்களது கருத்துகள் பின்னூட்டத்தில் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

தொடர்புக்கு : 98404 65277, 9444 97 9615
 

No comments:

Post a Comment

Pinned Notes

பொதிகைமலைப் பயணம் 2016

**UPDATE** குருதேவரின் கருணையால் அவரை தரிசிக்கவும் அவரின் ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு கிடைத்து விட்டது.  வரும் 28ம் தேதி அன்று சென்னையிலிரு...