வானம் 12 பிரிவுகளாகப்பிரிக்கப்பட்டு, 12 ராசிகளாக பெயரிடப்பட்டுள்ளன. அவையே ஆன்மீகமயமாக்கப்பட்டு, ஜோதிடமாக உருவெடுத்தது. இந்த 12 ராசிகளில் ஞானத்தை வழங்கும் ராசிகள் கடகராசியும், மகர ராசியும் ஆகும். கடகராசியில் ராகு அல்லது கேதுவும், மகரராசியில் கேது அல்லது ராகுவும் இருக்க பிறந்திருந்தால் அவர்கள் இறைவனது அளவற்ற அனுக்கிரகத்திற்கு பாத்திரமானவர்கள் ஆவர்.
அதே போல, ஆடிமாதத்தில் அமாவாசை வரும் நாளன்று கடகராசியில் சூரியனும், சந்திரனும் ஒன்று சேருவார்கள்; தை மாதத்தில் வரும் அமாவாசையன்றும் சூரியனும் சந்திரனும் ஒன்றிணைவார்கள். இந்த இரண்டு அமாவாசை நாட்களிலும் நாம் செய்யும் எந்த ஒரு புண்ணியச் செயலும் பல கோடி மடங்காகப் பெருகி நமது வாழ்க்கையில் கர்மவினைகளை அழிக்கும்; அளவற்ற புண்ணியத்தையும், செல்வ வளத்தையும், ஆரோக்கியத்தையும், நிம்மதியையும் அள்ளித் தரும்.
இவ்வாறு செய்வதன் மூலமாக நமது கடுமையான கர்மவினைகள் அடியோடு நீங்கிவிடும்; அப்பேர்ப்பட்ட அற்புதமான நாள் இந்த ஆடி அமாவாசை!
இந்த நன்னாளில் சதுரகிரி அல்லது அண்ணாமலை அல்லது பர்வதமலை அல்லது கொல்லிமலை அல்லது காசி அல்லது இமயமலை அல்லது எந்த ஒரு மலைமீதும் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும் மூலவருக்கு முன்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து இந்த மந்திரத்தை ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் ஜபிப்பது அவசியம்.
குறிப்பாக கன்னி, துலாம், விருச்சிகம், மீனம், மேஷம், கடக ராசியினர் இந்த மந்திரத்தை ஜபிப்பதால் சனிபகவானின் தாக்கம் பெருமளவு குறையும். ஒரே நேரத்தில் ஸ்ரீகால பைரவரின் அருளும்,சதாசிவனின் ஆசியும் கிட்டும்.
செய்வோமா?
ஓம்சிவசிவஓம்
நன்றி : வீரமுனி ஐயா, ஆன்மிகக்கடல்.
சொர்ண ஆகர்ஷன பைரவர், இலுப்பைக்குடி |

- விஜய வருடத்தின் ஆடி அமாவாசை நாளான இன்று 6.8.2013 செவ்வாய்க்கிழமையும், பூச நட்சத்திரமும்,அமாவாசைத் திதியும் சேர்ந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசையானது பூச நட்சத்திரத்தில் தான் வரும்.
- இறைவழிபாட்டுக்குரிய செவ்வாய்க்கிழமையன்று ஆடி அமாவாசை வருவது அரிதிலும் அரிதாகும்.
- இந்த நன்னாளில் நாம் அன்னதானம் செய்யலாம்; ஆடை தானம் செய்யலாம்; (முடிந்தால்) சொர்ணதானம் செய்யலாம்; தண்ணீர் தானம் செய்யலாம்; கோவில்களில் உழவாரப் பணியில் ஈடுபடலாம்; பிறருக்கு முக்கியமான உதவி செய்யலாம்; மந்திரங்கள் ஜபிக்கலாம்;
- இந்த நன்னாள் முழுவதும் நாம் ஒவ்வொருவரும் (அசைவம் சாப்பிடாமல் இருந்து) ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிப்பது அவசியம்; அவசரம்; முக்கியம்!!!
- இதைச் செய்யமுடியாதவர்கள், இன்று ஏதாவது ஒரு மணிநேரம் (குரு ஓரை வரும் நேரமான காலை 12 மணி முதல் மதியம் 1 மணி வரை; அல்லது இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை) ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்கலாம்;
- இந்த மந்திரத்தை இன்று ஏதாவது ஒரு பழமையான சிவாலயம் சென்று ஏதாவது ஒரு மணி நேரம் ஜபிக்கலாம்; மூலவராகிய சிவபெருமான் முன்பாகவோ, ஸ்ரீகால பைரவப் பெருமான் முன்பாகவோ ஜபிக்கலாம்; முடிந்தால் கோவிலில் மஞ்சள் துண்டு விரித்து, இரு கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை (ஐந்து முகம்) வைத்துக் கொண்டு ஜபிக்கலாம்;
- இதையும் செய்ய முடியாதவர்கள், அருகில் இருக்கும் ஜீவசமாதிக்குச் சென்று இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;
- அல்லது நமது வீட்டிலேயே இந்த மந்திரத்தை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் ஜபிப்பது நன்று;
ஓம் (உங்கள் குலதெய்வம்) நமஹஎன்று 108 முறை எழுத வேண்டும். இந்த நாளில் மட்டும் மூன்று ஒரு மணி நேரமும், பிற நாட்களில் ஏதாவது ஒரு 108 முறை வீதம் ஒரு வருடம் வரையிலும் தினமும் எழுத வேண்டும். இன்று மூன்று ஒரு மணி நேரத்திற்குள் எத்தனை தடவை 108 முறை எழுத முடியுமோ அத்தனை தடவை எழுதலாம்.
ஓம் கணபதி நமஹ
1.ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
2.ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
இவ்வாறு செய்வதன் மூலமாக நமது கடுமையான கர்மவினைகள் அடியோடு நீங்கிவிடும்; அப்பேர்ப்பட்ட அற்புதமான நாள் இந்த ஆடி அமாவாசை!
இந்த நன்னாளில் சதுரகிரி அல்லது அண்ணாமலை அல்லது பர்வதமலை அல்லது கொல்லிமலை அல்லது காசி அல்லது இமயமலை அல்லது எந்த ஒரு மலைமீதும் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும் மூலவருக்கு முன்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து இந்த மந்திரத்தை ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் ஜபிப்பது அவசியம்.
குறிப்பாக கன்னி, துலாம், விருச்சிகம், மீனம், மேஷம், கடக ராசியினர் இந்த மந்திரத்தை ஜபிப்பதால் சனிபகவானின் தாக்கம் பெருமளவு குறையும். ஒரே நேரத்தில் ஸ்ரீகால பைரவரின் அருளும்,சதாசிவனின் ஆசியும் கிட்டும்.
செய்வோமா?
ஓம்சிவசிவஓம்
நன்றி : வீரமுனி ஐயா, ஆன்மிகக்கடல்.
No comments:
Post a Comment