Saturday, January 9, 2016

பொதிகைமலைப் பயணம் 2016

**UPDATE**

குருதேவரின் கருணையால் அவரை தரிசிக்கவும் அவரின் ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு கிடைத்து விட்டது. வரும் 28ம் தேதி அன்று சென்னையிலிருந்து கிளம்புகிறோம். இந்த முறை சென்னையிலிருந்து இரண்டே பேர் தான். மதுரையிலிருந்து கிளம்பும் மூன்று  நண்பர்கள் விதுராவில் எங்களுடன் இணைந்து கொள்கிறார்கள். வேறு யாரவது இந்த தேதியில் கிளம்புவதாக இருந்தால் தெரிவிக்கவும். சேர்ந்து போகலாம்.


****************************************************************************************************


நமது ஞான குருவான ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் கருணையால் இந்த வருடம் பொதிகை சென்று அவரை தரிசிக்க நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.



கேரள வனத்துறையின் தகவல்படி, வரும் 11ம் தேதி காலை 11 மணிக்கு முன்பதிவு ஆரம்பமாகிறது. http://serviceonline.gov.in/serviceLinkHome.html?serviceToken=kjSTCZISXJ&OWASP_CSRFTOKEN=7STR-P1XK-AT3Y-RML5-N547-OS8X-LLHW-TNEX#! என்ற தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு மட்டும் தான் அனுமதி.

சென்ற வருடம் காலை 8 மணிக்கு ஆரம்பித்த முன்பதிவு வெறும் அரை மணிநேரத்திலேயே முடிந்துவிட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காததால் பதிவு செய்ய முடியவில்லை.  இந்த வருடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம். பார்ப்போம். 

மேலும் இந்த வருடம் என்று டிக்கெட் கிடைக்கிறதோ அன்று செல்லலாம் என்ற முடிவுடன் இருக்கிறோம். எங்களுடன் இணைந்து வர விருப்பம் உள்ளவர்கள் தயவு செய்து தங்கள் தொலைபேசி எண்ணுடன் தங்கள் விவரத்தை பின்னூட்டத்தில் (comments) இட்டால் தொடர்பு கொண்டு ஆலோசனை செய்ய எதுவாக இருக்கும். அல்லது என்னை தொடர்பு கொள்ளலாம்.

பொதிகை தொடர்பான ஏதேனும் கூடுதல் தகவல் தேவைப்பட்டால் தயங்காமல் அடியேனை தொடர்பு கொள்ளலாம். போன் நம்பர் 7448812399.

Monday, May 4, 2015

ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்

திரு. ஸ்ரீ சக்தி சுமணன் ஐயா அவர்களின் அனுமதியோடு இப்பதிவு பதியப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு http://yogicpsychology-research.blogspot.in/ என்ற வலைப்பூவை தொடருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

இன்று சித்ரா பௌர்ணமி நன்னாளில் ஆர்வமுள்ள சாதகர்களுக்கு காயத்ரி உபாசனை சாதனை பாடங்களை கற்பிப்பதற்கு குருமண்டலத்தின்  உத்தரவு கிடைத்துள்ளது. 

இதன்படி ஆர்வமும், சிரத்தையும், குருபக்தியும் உள்ள எவரும் இதனை கற்றுக்கொள்ள முடியும். உங்கள் மனத்தடையை தவிர வேறு எந்த தடைகளும் இல்லை! 

இந்த பாடங்கள் ரிஷி பரம்பரையினரின் பிரம்ம ஞான உபதேசங்கள் எளிய முறையில் அனுபவ பயிற்சிகளாகவும், எளிமையான மொழியில் விளக்கங்களாகவும் தரப்படும். 

இதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் முதலாவதாக கீழ்வரும் விண்ணப்ப படிவத்தினை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம்

இது தொடர்பான அனைத்து கேள்விகள், தொடர்புகள்  கீழ்வரும் மின்னஞ்சலில் மாத்திரம் தொடர்பு கொள்ளவும்: sumanangs@gmail.com 

இதன்பின்னர் எமது உதவி குழுவிடமிருந்து உங்களுக்கு வசதியான ஒரே நேரத்தில் ஸ்கிப்பினூடாக  பதினைந்து நிமிட நேர்முக உரையாடல்  நடைபெறும். 

இதன்போது கற்கை நிபந்தனைகளுக்கு உறுதி அளித்தால். குருநாதர் அனுமதியின் பின்னர்  முதலாவது பாடமும் வினாத்தாளும் மின்னஞ்சல் உடாக அனுப்பப்படும்.  இதற்கு வாரம் ஒரு நாள் குறித்த நேரம் ஒதுக்கி படித்து விளங்கி கொண்டு பின்னர் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையினை டைப் செய்து திருத்தத்திற்கு எமக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

உங்களது விடைகள் திருப்தியாக இருந்தால் உங்களுக்கு அடுத்த பாடம் அனுப்பி வைக்கப்படும். 

இந்த முறையில்  மொத்தம் எண்பது பாடங்கள் மூலம் நீங்கள் காயத்ரி உபாசனையின் அடிப்படைகளை விளங்கி கொள்வீர்கள். 

இந்த பாடத்திட்டத்தில் நீங்கள் எவற்றை எல்லாம் கற்று கொள்வீர்கள் என்பதற்கான பாடத்திட்டம் கீழ்வருமாறு; 

பகுதி ஒன்று: காயத்ரி உபாசனை மாணவர் 

குருபரம்பரை வரலாறு, குரு வணக்க முறை, குரு சாதனை 

ஐயமும் தெளிவும், காயத்ரியும் பிராணனும், காயத்ரி சாதனைக்குரிய ஏற்பாடுகள், காயத்ரி பிராண ஆகர்ஷண சாதனை ,காயத்ரி மந்திர அடிப்படை சாதனை,  பாவனை மூலம் தெய்வ சக்தியை சூக்ஷ்ம உடலில் ஏற்கும் பயிற்சி, காயத்ரி பிராண வளர்ச்சி சாதனை, காயத்ரி அடிப்படை பிரணாயாமம், காயத்ரி கும்பக பிரணாயாம சாதனை, காயத்ரியும் முக்குண வளர்ச்சியும், மந்திர இரகசியம்,  காயத்ரியும் பிரபஞ்ச சூக்ஷ்ம சக்திகளும், காயத்ரியும் உடலின் சூக்ஷ்ம கிரந்திகளும்,  எமது துன்பங்களுக்கான காரணம்,  பிரபஞ்ச ஞானத்தை பெறுவதற்கான இரகசிய வழி,  காயத்ரியும் உடல் மனச்சுத்தியும், காயத்ரியும் பாவ விமோசனமும், காயத்ரி உபாசனையின் நியமங்கள், காயத்ரி உபாசனையின் முக்கிய அங்கங்கள், 

பகுதி ஒன்றினை ஒழுங்காக கற்று அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தவர்கள் முறையான காயத்ரி உபாசனை பத்ததி கற்பிக்கப்பட்டு உபாசனைக்குரிய வழிமுறைகள் கற்பிக்கப்படும். இந்த உபாசனையினை தினசரியோ, வாரம் ஒருமுறையோ செய்தவண்ணம் பகுதி இரண்டு கற்கையினை ஆரம்பிக்க வேண்டும், 

பகுதி இரண்டு: காயத்ரி உபாசகர் 
பகுதி இரண்டில் கீழ்வரும் விடயதானங்கள் கற்பிக்கப்படும்.  

உபாசனையின் அங்கங்களான பிராண பிரதிஷ்டை, தீக்ஷை, ரிஷி, அங்க, ஷடங்க  நியாச முறைகளும் அவற்றின் விஞ்ஞான விளக்கங்களும், ஆசமனம், உபாசனையில் தெய்வ சக்தியை ஈர்க்கும் பிரணாயாம முறைகள், ஆவாகனாதி தூப, தீப உபசார முறைகளும் அவற்றிற்கான விளக்கங்கள். அர்ச்சனை, மந்திர ஜபம், மானச ஜெப முறைகள், க்ஷமாபானம், 

பகுதி இரண்டு கற்றல் முடியும்போது நீங்கள் பிரபஞ்ச ஞான சக்தியை உபாசிக்கும் காயத்ரி உபாசகர் என்ற நிலையினை பெறுவீர்கள். இந்த கற்கை மூலம் தெய்வ உபாசனை என்பது வெறுமனே ஒரு கண்மூடித்தனமான ஒரு நம்பிக்கை இல்லை என்பதயும் எமது முயற்சியாலும் இதற்கு முன்னர் இந்த முயற்சியில் வெற்றி பெற்று சூக்ஷ்ம நிலையில் உள்ள  குருமண்டலத்தின் உதவியாலும் பெறப்படும் ஒரு பேறு என்பதனை நன்கு விளங்கி கொள்வீர்கள்.  
மூன்றாவது காயத்ரி உபாசனை தத்துவ விளக்கம் 

இந்த பகுதியில் காயத்ரி ஸ்ம்ருதி, காயத்ரி உபநிஷதம், காயத்ரி இராமாயணம், காயத்ரியிற்கான மகரிஷிகளது பாஷ்யம் என்பன விளங்கப்படுத்த படும். இதன் மூலம் காயத்ரி பற்றி மகரிஷிகள் என்ன இரகசியங்களை கூறியிருக்கிறார்கள் என்பதனை விளங்கி கொள்ள முடியும். 


நான்காவது யாக விஞ்ஞானம் 

காயத்ரியும் யஞமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை. ஆகவே காயத்ரி சாதகன் கட்டாயம் அக்னியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதனை தெரிந்திருக்க வேண்டும். இந்த பகுதியில் யாக விஞ்ஞானம், யக்ஞ சிகிச்சை,  யாக தத்துவம், சாஸ்திரங்கள் கூறும் வேள்வியின் மகிமை, யாக சாதநியினால பெறக்கூடிய நன்மைகள், வேள்வியும் பாபநாசமும், வேள்வியும் விஞ்ஞானமும், யாகமும் குணமாற்றமும், ரோக நிவாரண ஹோமத்திரவியங்கள், சப்த பரிணாமங்கள், யாக பூமி நிர்ணயம், சுபதின நிர்ணயம், ஜபமாலா இலக்கணம், யாக விதானம், தினசரி காயத்ரி ஹோமம், இல்லற வேள்வி. 

ஐந்தாவது காயத்ரி லகு அனுஷ்டான சாதனை 

மேலே கூறிய நான்கு நிலைகளிலும் காயத்ரி பற்றிய உண்மைகளை கற்ற உங்களுக்கு காயத்ரி மந்திரத்தின் மூலம் குறைந்த காலத்தில்  உங்கள் உடல், மன, பிராண சக்திகளை அதிகரித்து எப்படி சக்தி பெறுவது எனும் வழியினை சொல்லித்தரும். இந்த அனுஷ்டானத்தின் மூலம் நீங்கள் 

இப்படி காயத்ரி லகு அனுஷ்டானம் செய்பவர்கள் படிப்படியாக குருமண்டலத்தின் ஈர்ப்பினை பெற்று மிக உயர்ந்த சாதனைகளுக்கு தயாராவார்கள். 

இவற்றை எல்லாம் வாசித்து விட்டு பிரமித்து நாம் குடும்பஸ்தர்கள், மாணவர்கள், தொழில் செய்பவர்கள், நேரம் இல்லை என உங்களுக்கு நீங்களே தடைகளை  ஏற்படுத்தி கொண்டு விலகி விடாமல் இப்படியான விடயத்தினை பார்த்து வாசிக்க கிடைத்ததே ரிஷிகளின் அழைப்பு உங்களுக்கு உள்ளது என்ற நேர்மறை மனோபாவத்துடன் (Positive attitude) கற்கையில் இணையுங்கள். 

கற்கைக்கான குரு தட்சணை

மின்னஞ்சல், இணையம் மூலம் கற்பதற்கு எதுவித கட்டணமும் இல்லை. பாடங்கள் மின்னஞ்சல் மூலமாக அனுப்ப படும் அவற்றை அச்சிட்டு உங்கள் பாவனைக்கு வைத்துக்கொள்வதனை நீங்களே செய்து கொள்ளவேண்டும். 

எமது நேரத்தை எமது குருநாதரின் பணியாக வாழ்கையின் தர்மத்தின் ஒரு பகுதியாக மற்றவர்களுக்கு கற்பிப்பதற்காக  தருகிறோம். அதற்கு எதுவித கட்டணமும் இல்லை. உங்களிடம் இருந்து நாம் எதிர்பார்ப்பது இவற்றை சிரத்தையுடன் கற்று அதன்மூலம் பெறும் சக்தியையும், ஞானத்தையும் உங்களது வாழ்க்கை அனுபவத்திற்கு கொண்டு வந்து உங்கள் வாழ்க்கையினை மகிழ்ச்சியும், இன்பமும் உள்ளதாக்கி இனிய குடும்பத்தை, சமூகத்தை உருவாக்கினால் அதே மிகப்பரிய குருதட்சணை!

மேலும் எதிர்காலத்தில் தெய்வ, யோக சாதனை தொடர்பாக நூற்களாக ஏதும் வெளியிடுவதாக, அல்லது கலந்துரையாடல்கள் நடைபெறுவதாக ஏற்பாடுகள் இருந்தால் நீங்களாக முன்வந்து அவற்றின் செலவுகளை பகிர்ந்து செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.  

நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் 
  • ஒருபாடத்தை படித்து தகுந்த வினாக்களுக்கு விடையினை நீங்கள் அனுப்பி வைக்காமல் எக்காரணம் கொண்டும் அடுத்த பாடம் அனுப்ப படமாட்டாது. 
  • உங்கள் தொடர்பாடல் மரியாதையான முறையிலும், குரு சிஷ்ய பாவத்திலும் இருக்க வேண்டும். 
  • ஒவ்வொரு சாதனைகள் பயிற்சிகள் தரப்படும் போதும் அவற்றை உங்களது சொந்த வாழ்க்கையின் தன்மைக்கு ஏற்றவாறு செய்ய முடியுமா என்பதனை நிதானமாக துணிந்து கொண்டு செய்ய தொடங்க வேண்டும். 
  • இவ்வாறு நிபந்தனைகளை கடைப்பிடித்து செய்ய முடியாமல் போகும்போது எம்மால் முடியாது என்று கைவிட்டுவிடாமல் மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும். இப்படி முயற்சிக்கும்போது குருவருளாலும் இறையருளாலும் நீங்கள் நம்பவே முடியாத பல நன்மைகள் பெறுவீர்கள். 
இந்த  கற்கையில் உங்கள் சிரத்தையும் முயற்சியும்தான்  மூலதனமே அன்றி வேறு எதுவும் இல்லை. தாகம் உள்ளவர்கள் பெற்று பயனடைவதகாகவே இந்த ஏற்பாடு.

அன்புடன் 
திரு. ஸ்ரீ சக்தி சுமணன் ஐயா அவர்களின் அனுமதியோடு இப்பதிவு பதியப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு http://yogicpsychology-research.blogspot.in/ என்ற வலைப்பூவை தொடருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

Friday, January 2, 2015

பொதிகைப் பயணம் 2015

நமது ஞான குருவான ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் கருணையால் இந்த வருடம் பொதிகை சென்று அவரை தரிசிக்க நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Pothigai 2015

கேரள வனத்துறையின் தகவல்படி வரும் ஜனவரி 8ம் தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை பொதிகை செல்லலாம். அதற்காக ஆன்லைனில் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. http://www.forest.kerala.gov.in/ என்ற தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு மட்டும் தான் அனுமதி.

இந்த வருடம் ஜனவரி 15ம் தேதி அன்று செல்லலாம் என்று குருவருளால் முடிவு செய்துள்ளோம். எங்களுடன் இணைந்து வர விருப்பம் உள்ளவர்கள் தயவு செய்து தங்கள் தொலைபேசி என்னுடன் தங்கள் விவரத்தை பின்னூட்டத்தில் (comments) இட்டால் தொடர்பு கொண்டு ஆலோசனை செய்ய எதுவாக இருக்கும். அல்லது என்னை தொடர்பு கொள்ளலாம்.

பொதிகை தொடர்பான ஏதேனும் கூடுதல் தகவல் தேவைப்பட்டால் தயங்காமல் அடியேனை தொடர்பு கொள்ளலாம். போன் நம்பர் 7448812399.

Monday, December 15, 2014

ஷீரடி சுற்றுலா - பிப்ரவரி 2015

அன்பர்களுக்கு,

வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி அன்று குருவருளின் துணையால் ஷீரடிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளோம். 3.2.2015 செவ்வாய் இரவு கிளம்பி 8.2.2015 ஞாயிறு அன்று வருவதாக திட்டம்.

ஷீரடி, சனிசிக்னாபூர் (சனி பகவான் கோவில்), ரேணுகாதேவி கோவில், மகா கணபதி கோவில் போன்ற கோவில்களுக்கு செல்லப் போகிறோம்.

இருவழி ரயில் கட்டணம், தங்குமிடம், பஸ், வேன் போன்ற கட்டணங்கள் உட்பட ரூ.3400 மட்டுமே. (உணவு தவிர்த்து)

கலந்து கொள்ள விருப்பம் இருப்பவர்கள் அடியேனை தொடர்பு கொள்ளலாம். எண்: 9840465277, 9444979615.







Friday, December 12, 2014

பிறந்த நேரத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

பொதுவாக 90 சதவீத ஜோதிடர்களிடம் ஒரு மனப்பாங்கு உண்டு. என்னவென்றால் ஜோதிடம் பார்க்க வருபவர் எந்த  ஜாதகத்தை நீட்டினாலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அடித்து விட ஆரம்பித்து விடுவார்கள். ஜாதகத்தின் 12 கட்டங்களையும் ரவுண்டு கட்டி அடித்தால் தான் இவருக்கும் நிம்மதி; பார்க்க வருபவருக்கும் சந்தோசம்.
  • முதலில் கொண்டு வந்த ஜாதகம் சரியானது தானா?
  • பிறந்த நேரம் சரியாக உள்ளதா அல்லது சரி பார்க்க வேண்டுமா? 
  • ஜாதகர்/ஜாதகி தற்போது உயிரோடு உள்ளாரா? 
  • அவரின் ஆயுள் எப்படி உள்ளது?
என்றெல்லாம் பார்ப்பது இல்லை. வாய்க்கு வந்தபடி அடித்து விட ஆரம்பித்து விடுவார்கள்.

ஏன் இவற்றை சரி பார்க்க வேண்டும்? ஜாதகத்தை உள்ளவாறு பார்த்தால் என்ன? இவற்றிற்கு நேரம் இருக்குமா? என்றெல்லாம் கேள்விகள் தோன்றுகிறதா? மேற்கொண்டு படியுங்கள்.

பிறந்த நேரத்தை முதலில் ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே.

முதலில் பிறந்த நேரம் என்பது என்ன? அதை எவ்வாறு கணிப்பது என்பது குறித்து பலவித குழப்பங்கள் இன்று உள்ளன.  தொப்புள் கொடி அறுத்த நேரமா, குழந்தை அழுத நேரமா, தலை வெளியில் தெரியும் நேரமா? முதல் இதய துடிப்பு நேரம் என்று எடுத்து கொள்ளவும் முடியாது. ஏனெனில் குழந்தையின் இதய துடிப்பு தாயின் கருவிலேயே துவங்கி விடும். பொதுவாக ஜனன காலம் என்பது சிரசோதயகாலம் என்று பழைய ஜாதகக் குறிப்புகளில் இருக்கும்.  அதாவது குழந்தையின் (சிரசு) தலை உதயமான காலம்.  இப்போது தொப்புள் கொடி அறுப்பது தான் குழந்தையை தனிமைப்படுத்தி தனி உயிராக்குகிறது என்கிறார்கள்.

ஆனால், ஒரு சிசுவானது எப்பொழுது சுயமாக சுவாசிக்க ஆரம்பித்து, தனது கர்ம வினைகளின்படி வாழக்கையை ஆரம்பிக்கிறதோ, அந்த வினாடியே சிசுவின் உண்மையான பிறந்த நேரம் என்று முடிவு செய்யலாம்.

அது சரி, பிறந்த நேரத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?

நமது கருத்து என்னவெனில், பிறந்த நேரம் சரியாக இருந்தால்தான் ஒருவரது குழந்தை பருவம் தொடங்கி முதுமை காலம் வரை அவருக்கு நடக்கும் நன்மை, தீமை பலன்களை சரியாக கணிக்க முடியும். இறைநிலை அருளிய 36 பாக்கியங்களில் எவற்றையெல்லாம் அனுபவிக்கும் அமைப்பு உள்ளது. எவை மூலமாக இன்னல்கள் வரும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஜாதகர் வளரும் சூழ்நிலை, அடிப்படை கல்வி, உடல் நிலை, தந்தை-தாயின் அரவணைப்பு, செய்யும் தொழில், பார்க்கும் உத்தியோகம், திருமண பாக்கியம், இல்லற வாழ்க்கையில் அனுபவிக்கும் இன்பம், குழந்தைப் பேறு, ஆயுள் காலம் போன்ற அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

சரி, பிறந்த நேரம் தவறாக இருந்தால் பலன்கள் மாறுமா?

உறுதியாக. ஒரு ஜாதகர் தன் கர்ம வினைப்படி எவற்றை அனுபவித்து ஆகவேண்டுமோ அவற்றை அனுபவித்தே தீர வேண்டும். இதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. ஆனால் பிறந்த நேரம் தவறாக குறிக்கப்பட்ட ஒரு ஜாதகர், தனது எதிர்காலத்தை கணிக்க வேண்டி ஜோதிடரிடம் வரும்போது, ஜோதிடர் கணிக்கும் அத்தனையும் தவறாக போகும். இங்குதான் அனைத்து ஜோதிடர்களும் கேலிக்கு உள்ளாகின்றனர்.

என்றுமே ஜோதிடம் தவறாகாது; ஜோதிடர்தான் தவறு செய்வார்.

ஒரு ஜாதகரின் பிறந்த நேரத்தை துல்லியமாக நிர்ணயம் செய்ய நமது ஜோதிடத்தில் சிறப்பான முறைகள் பல உண்டு. இதற்கு தேவை
  • ஜாதகரின் பிறந்த தேதி
  • ஜாதகரின் பிறந்த நேரம்
  • ஜாதகரின் பிறந்த இடம் 
ஆகியன மட்டுமே. மேற்கண்ட விபரங்கள் இருந்தால் ஜாதகரின் துல்லியமான பிறந்த நேரத்தை கணித்துவிட முடியும். ஜாதகரின் ஜாதக பலாபலன்களை தெளிவாக தெரிதுகொள்ள முடியும்.

நமது ஸ்ரீ ஜோதிடத்திலும் அவ்வாறு பிறந்த நேரம் சரிபார்த்தபின்னரே பலன்கள் சொல்ல துவங்குகிறோம்.

அன்பர்களது கருத்துகள் பின்னூட்டத்தில் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

தொடர்புக்கு : 98404 65277, 9444 97 9615
 

Sunday, March 9, 2014

உண்மையான திருநீறு

உண்மையான திருநீறு

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.

இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும் படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்ற! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.

பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது, விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும்,

வீபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும்
சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.


திருநீறு வகைகள். திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை

1.கல்பம் = கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும்.

2.அணுகல்பம் - ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.

3.உபகல்பம் - மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.

4. அகல்பம். -அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்

Sunday, February 16, 2014

பொதிகைப் பயணம் 2014 - பகுதி 2

இந்த வருடம் பொதிகை செல்ல மிக முக்கிய காரணமாக இருந்தவர் திண்டுகல்லை சேர்ந்த நண்பர் திரு.முருகேசன் தான். கிட்டத்தட்ட 6 மாதங்களாக தினமும் போன் செய்து விசாரித்து கொண்டிருப்பார். சென்ற மே மாதம் முதற்கொண்டு முயற்சி செய்து வந்தோம். கேரளா வனத்துறையின் கெடுபிடிகள் காரணமாக செல்ல முடியவில்லை. தமிழக பாதை வழியாக செல்லவும் முயற்சி செய்து பார்த்தோம் ஆனால் வனத்துறை அதிகாரிகள் கருணை காட்டவில்லை. ஆகவே வழக்கம் போல் கேரள பாதை தான் என முடிவு செய்து தினமும் folow செய்து ஒரு வழியாக(பல போராட்டங்களுக்கு நடுவில்) ஜனவரி 28 அன்று அனுமதி கிடைத்தது.

சென்னையிலிருந்து அடியேன், CTS ராஜன் கணேஷ் மற்றும் CTS ஜெய் நம்பி ராஜா ஆகிய மூவரும் கிளம்புவதாக எங்கள் திட்டம். கடைசி நேரத்தில் ராஜன் கணேஷ் அவரால் வர முடியாத சூழலால் அடியேனும் ஜெய் நம்பி ராஜா வும் கிளம்பினோம். சென்னையிலிருந்து திருநெல்வேலி சென்று சில ஸ்தலங்களை பார்த்துவிட்டு அங்கிருந்து பாநாசம் சென்று மற்ற அடியார்களுடன் சேர்ந்து அங்கிருந்து பொதிகை செல்வது தான் எங்கள் திட்டம்.

ஒருநாள் முன்னதாக நம்பி நெல்லை சென்றுவிட்டார். அடியேன் 26.1.14 ஞாயிறு அன்று நெல்லை எக்ஸ்பிரஸ்-ல் கிளம்பினேன். மறுநாள் காலை 9 மணியளவில் நெல்லை போய் சேர்ந்தேன். காலைக்கடன்களை முடித்துவிட்டு பஸ்ஸில் பாபநாசம் சென்றடைந்தோம்.

முதலில் அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில் தரிசனம்.




















Pinned Notes

பொதிகைமலைப் பயணம் 2016

**UPDATE** குருதேவரின் கருணையால் அவரை தரிசிக்கவும் அவரின் ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு கிடைத்து விட்டது.  வரும் 28ம் தேதி அன்று சென்னையிலிரு...