Friday, April 15, 2011

போகர் ஏழாயிரம் - 21 - 30 பாடல்கள்


  1. வாசியோகம்
    நாட்டமாய் லகுவாக மூலம்பாரு நலமான வாசிகொண்டு ஊதியூதி
    ஊட்டமாய் சாக்கிரத்தில் நின்றுநின்று உத்தமனே நந்திகண்டால் வாதங்காணும்
    தூட்டமாய் வெறும்பேச்சால் வார்த்தைசொன்னால் சுடுகாட்டுப்பிணமாக
    சொல்லுக்கொக்கும்
    பூட்டுவாய் மூலத்தின் ஒளிகாண்மட்டும் பொற்கொடிபோல் சுழிமுனையும் திறந்துபோகும்

  2. சுழிமுனையே திறந்தாக்கால் மனமொடுங்கும் சுழியிலே அகப்பட்ட துரும்புபோலாம்
    வழிமுனையே ஆதாரம் ஏறலாகும் மகத்தான சித்தியது எட்டுவாகும்
    சுழிமுனையாஞ் சுழித்துள்ளே அழித்திடாது கணக்கோடே வாசியென்ற குதிரையேறு
    சுழிமுனையில் இருந்தாக்கால் அங்கொன்றுமில்லை

  3. ஏறவே ஐம்புலனும் உலக்கையாக விடும்பான ஆங்காரம் உரலுமாக
    ஆறவே ஆசையது உருவமாக வழுப்பான மனதை உள்ளெகாட்டிக்கொண்டு
    மூறவே ஆசையதை அடித்துத்தள்ளி முழுமோசமாகியல்லோ பிரலப்பண்ணும்
    தேறவே யோகம்முதல் ஞானம்ரெண்டும் தெரியாதே இறந்தவர்கள் கோடிதானே

  4. கோடியென்ற நரஜென்மம் மண்ணாசையாலும் குணமான ஆசையுட தீனியாலும்
    ஓடியென்ற மோகத்தில் பெண்ணாசையாலும் மோகத்தால் பூட்டுகின்ற பொன்னாசையாலும்
    தூடியென்ற சுகபோக சுகியினாலும் துலையாத பாகத்தின் மயக்கத்தாலும்
    வாடியிந்த உலகமெலாம் மயக்கமாச்சு மக்களே வாய்ஞானம் பேச்சுமாச்சே

  5. ஆச்சென்ற பேச்சாலே ஒன்றுமில்லை அரிதான சாத்திரத்தை ஆராய்ந்து பார்த்து
    மூச்சென்ற மூச்சாலே சகலஜனமிறந்தார் மூச்சடங்கி சாகாமல் முயற்சிகேளு
    நாச்சென்ற நடுமூலம் கண்டத்தூன்றி நலியாமல் வுடவீட்டில் கட்டி
    தோச்சென்ற தேசியெங்கும் ஓடாதப்பா சோடகத்தில் சீவகளை இருப்புமாமே

  6. இருப்பான மூலத்தில் கணேசன்பாதம் இருத்தியே வாசியைநீ அதற்குள்மாட்டு
    தடுப்பான பிராணயந்தான் தவறிற்றானால் தம்பித்து வரவழைத்து தளத்தில்சேரு
    குறிப்பான மாத்திரைதான் ஏற ஏறக் குறிகளெல்லாம் குறிப்பாக வடிவம்தோன்றும்
    மதிப்பான வாசியது வழுவிற்றானால் மனிதரெல்லாம் மாடென்ற வார்த்தைதாமே

  7. வார்த்தையால் தாக்கத்தால் ஒன்றுமில்லை வல்லமையால் ஐம்புலனை அடுத்துக்கட்டி
    ஆர்த்தையால் அக்கரத்தை விழிரெண்டில்வைத்து அறிவான மனந்தன்னை
    அதற்குள்மாட்டி
    தேர்த்தையால் தேசியென்ற குதிரைதன்னை சிக்கெனவாய் சிங்கென்று கடிவாளம்பூட்டி
    மூர்த்தையால் மூலத்தில் மறிந்துகட்டி முனையான சுழினைவிட்டு மூட்டில்பாரே

  8. மூட்டியே அதுவுண்ணும் கற்பமுண்ணும் மூதண்டை காயத்தைசுத்தி பண்ணும்
    காட்டியே கனமான மூலிகையுமுண்ணும் கசடகற்றும் கழுகனத்தில்
    கண்ணொளிதான்மீறும்
    ஆட்டியே அண்ணாக்கில் கபத்தைதள்ளி அடுத்தாறு தளத்திலுள்ள ஆமம்நீக்கும்
    வாட்டியே ஐம்புலனை வாளால்வீசு மறவாதே இரவுபகல் வாசிவாட்டே

  9. மாட்டவே மார்க்கமாய் மூலத்தில் நில்லு மறவாதேயொன்றில் நின்றுதேறினாக்கால்
    ஆட்டவே அடிமரத்தைதொத்தியேற ஆச்சர்யம் நுனிமட்டும் ஏறலாகும்
    மூட்டவே மூலமதுபழகினாக்கால் முகிந்தவிடமாறுகடந்தப்பால் தாண்டி
    தூண்டவே துவாதசாந்தத்தில் சொக்கிச் சுருதிமுடிந்திடமறிந்து சேரலாமே

  10. சேரவே சகஸ்திரமா முண்டகத்தின் பூவைச்சேர்ந்தேறிச் சந்திரமண்டலத்தில் புக்கு
    ஆரவே அறிவென்ற மனதால்கொய்து ஆனைமுகன் வல்லபைக்குங்
    குண்டலியாந்தாய்க்கும்
    பாரவே பதத்தில்வைத்து அர்சித்துத்தூபம் பலதூபம்பணிமாரி விவேகத்தாலே
    தூரவே சோமப்பாலுகந்தளித்து தூயநால்மூலத்தில் குதிரைமுனைகட்டே

Tagged: ,

0 comments:

Post a Comment