Thursday, April 25, 2013

சித்ராபவுர்ணமி மற்றும் கிரகணநாளில் பைரவ சஷ்டி கவசம் எழுதுவோம்!!!


அஷ்ட மங்கள கால பைரவர்
விஜய வருடத்தின் முதல் பவுர்ணமியானது  25.4.13 அன்று ஆரம்பித்து மறுநாள் 26.4.13 வரை இருக்கிறது. பவுர்ணமியோடு சேர்ந்து கிரகணமும் வருவதால், இந்த பவுர்ணமியானது அதிமுக்கியத்துவம் பெறுகிறது. ஆமாம்! மேஷ ராசியில் ஆத்மக்காரனாகிய சூரியன், ஞானக் காரனாகிய கேதுவுடன் சேர.மனக்காரனாகிய சந்திரன், ராகுவுடன் துலாம் ராசியில் சேருகிறது. ஆண்டுக்கு ஒருமுறையே இவ்வாறு கிரகணம் அமையும். இந்த நன்னாளில் இன்னொரு சூட்சுமரகசியம் அமைவது என்னவெனில், சூரியனும் கேதுவும் ஸ்ரீகால பைரவரின் ஜன்ம நட்சத்திரமான பரணியில் சேர்ந்து இந்த கிரகணத்தை தோற்றுவிப்பதால், இந்த வாய்ப்பினை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.ஒருவேளை இந்த கிரகண நாளை விட்டு விட்டால் மீண்டும் இதே கிரகணம் உருவாக பதினெட்டு ஆண்டுகள் தான் ஆகும்.

கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த நற்செயல்களின் விளைவாக நாம் இப்போதைய வசதிகளை அனுபவிக்கிறோம்; செல்வாக்குடன் இருக்கிறோம்; நமது ரேஞ்சுக்கு புகழுடன் வாழ்ந்துவருகிறோம்; அதே போல ,கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த தீயச் செயல்களின் விளைவாக இந்தப் பிறவியில் கடன்கள் அல்லது நோய் அல்லது அவமானம் அல்லது புறக்கணிப்பு அல்லது மனவேதனைகள் அல்லது இவைகள் அனைத்தையும் அனுபவித்தும் வருகிறோம்.இந்த இரண்டும் நாடாளும் மன்னனாக இருந்தாலும் சரி, வீட்டிலேயே மரியாதை இல்லாத பெண்ணாக (ஆணாக) இருந்தாலும் சரி அனைவருக்கும் பொதுவாகவே அமைந்திருக்கிறது.இதில் நமது தீயச் செயல்களின் விளைவுகளைத் தாங்க முடியாமல் ஏதேதோ வழிபாடு, பரிகாரம் செய்து வருகிறோம்.இதைச் செய்தாலாவது நாம் நிம்மதியை அடைய மாட்டோமா? என்று ஏங்குகிறோம்.

அந்த ஏக்கத்தை நீக்கிட ஒரு அரியவாய்ப்பு இன்றும்(25.4.13),நாளையும்(26.4.13) ஏற்பட்டிருக்கிறது.நாம் செய்ய வேண்டியது இதுதான்:

நமது ஆன்மீகக்கடலில் பிப்ரவரி மாதம் 2013 இல் வெளியிடப்பட்டிருக்கும் பைரவ சஷ்டி கவசத்தை இந்த இருநாட்களில் எழுதி முடிப்பது மட்டுமே!

எங்கே எழுதுவது?

வசதி உள்ளவர்கள் அருகில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் எழுதலாம். அது முடியாதவர்கள் அவரவர் வீட்டிலேயே எழுதலாம்; கூட்டுக் குடும்பமாக இருப்பவர்களில் அனைவருமே எழுதலாம். ஒரே நிபந்தனை: இரண்டே நாட்களில் பைரவ சஷ்டி கவசத்தையும் எழுதி முடித்துவிட வேண்டும்.

சரி! எப்போது இந்த இரண்டு நாட்களில் எழுத வேண்டும்?

இந்த இரண்டு நாட்களில் எப்போது வேண்டுமானாலும் எழுத ஆரம்பிக்கலாம்; எப்போது வேண்டுமானாலும் எழுதி முடிக்கலாம்;

சரி! எதில் எழுதுவது?

நோட்டு புத்தகத்தில் எழுதலாம்;வெள்ளைக் காகிதத்தில் எழுதலாம்; கணினியில் டைப் செய்யக் கூடாது;

எப்படி எழுதுவது?

அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுவதும்,எழுதி முடிப்பதும் அவசியம்.

எழுதி முடித்துவிட்டு என்ன செய்ய?

எழுதி முடித்ததை பத்திரப்படுத்தி வைக்கவும்:அடுத்தபடியாக 9.5.13 வியாழக்கிழமை அன்று சித்திரை மாதத்து அமாவாசை வருகிறது.இந்த அமாவாசையானது ஸ்ரீகால பைரவப் பெருமானின் ஜன்ம நட்சத்திரமான பரணியில் வருகிறது. அன்று ஸ்ரீகாலபைரவரின் 1008 போற்றி அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரின் 1008 போற்றியை இத்துடன் சேர்த்தே எழுதி வைக்கவும்.

மேலும்

உங்கள் மகன்/ள் பள்ளிப் படிப்பு/பாலிடெக்னிக்/கல்லூரி படித்துக் கொண்டிருப்பவரா?இந்தியாவில் ஆண்டுவிடுமுறைக் காலம் துவங்கியிருக்கிறது.எனவே,உங்கள் மகன்/ளை  பின்வரும் ஸ்ரீகால பைரவ மந்திரத்தை தினமும் நூற்றிஎட்டுமுறை எழுதச் சொல்லலாம்;மீண்டும் பள்ளி/கல்லூரி திறக்கும் வரையிலும் தினமும் எழுதச் சொல்லலாம்;
தாங்கள் எழுதியவைகளை தங்களின் வீட்டுப்பூஜை அறையில் அல்லது பணம் வைக்கும் பெட்டியில் பத்திரமாக வைக்கவும்.தாங்கள் மனப்பூர்வமாக எழுதியது எப்படி உங்களுக்கு பாதுகாவலாக,வழிநடத்தும் பைரவ சக்தியாகச் செயல்படுகிறது என்பதை உணர்வீர்கள். இவைகளில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது செய்வதன் மூலமாக உங்களுடைய நீண்டகாலப் பிரச்னைகள் தீரத்துவங்கும்;

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

முக்கியமான விஷயம் இவைகளில் எதை எழுதத் துவங்கினாலும்,எழுதுபவர் அசைவம் சாப்பிடக் கூடாது;எச்சரிக்கை!!!

 ஓம்சிவசிவஓம்

நன்றி :: www.aanmigakkadal.com

நவக்கிரக ஸ்தலங்கள்

நவக்கிரக ஸ்தலங்கள்


படத்தின் மீது cursor ஐ வைத்து அழுத்தினால் படம் பெரியதாக தெரியும்.

அருமையான table  ஆக நமக்கு அளித்தவர் திரு.வேங்கடரமணன், தினமலர், சென்னை.

Saturday, April 13, 2013

சித்தர்கள் தின மாநாடு

மதுரையில், பதினெண் சித்தர்கள் ஆலயம் சார்பில், உலக சித்தர்கள் தின மாநாடு, ஏப்.,14 ல் நடக்கிறது. சித்தர்கள் ஆலய நிறுவனர், விஜயராகவ் கூறியதாவது: பசுமலை திருமலை நாயக்கர் கல்லூரியில் நடக்கும் மாநாட்டில், சித்தர்களின் ஆற்றலை உணர வைத்து, சிறப்புக்களை மக்களுக்கு எடுத்துரைப்போம். சித்தர்களின் வாழ்க்கை குறிப்பு, சமுதாயத்திற்கு அவர்கள் உணர்த்த விரும்பிய கருத்துக்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்; தசவாயு மருத்துவ பயிற்சி விளக்கமும் கிடைக்கும் என்றார்.

பங்கேற்க விரும்புவோர், 82203 53559 ல் தொடர்பு கொள்ளலாம்.


விஜய புத்தாண்டின் முதல்நாளில் நாம் செய்ய வேண்டியது...


14.4.13 ஞாயிற்றுக்கிழமை தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.ஜோதிடரீதியாகப் பார்க்கும் போது,ரவி என்ற சூரியன் பனிரெண்டு ராசிகளையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு மீண்டும் மேஷ ராசிக்குள் நுழையும் நாள் இது.சூரியன் ஒரு ராசிக்குள்  நுழையும் நாளில் சூரியனின் சக்தி பல மடங்கு வெளிப்படும்.இந்த நாளில் நாம் செய்யும் இறைவழிபாடு,தியானம் நமக்கு அளவற்ற சக்தியைத் தரும்.இதன்மூலமாக படிப்படியாக நமது கடுமையான கர்மவினைகள் தீரத் துவங்கும்;

கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த புண்ணியச்செயல்களுக்கு ஏற்ப இப்பிறவியில் நமக்கு குறிப்பிட்ட திறமைகள், கல்வித்தகுதி, சாதனைகள், சொத்துக்கள், மனைவி, புகழ் அமைந்திருக்கிறது; அதே போல,கடந்த ஐந்துபிறவிகளில் நாம் செய்த பாவச் செயல்கள்,திமிர்த்தனங்களுக்கு ஏற்ப இப்பிறவியில் நமக்கு குறிப்பிட்ட அவமானங்கள், குறைகள், ஏக்கங்கள், கடன்/நோய்/எதிரி/தோல்விகள் உருவாகின்றன.இதைச் சரி செய்ய நாம் எந்த சித்தரை வணங்கினாலும்,அவர் நம்மை ஆசிர்வாதிப்பார்;அவ்வளவுதான்!நமது கர்மவினைகளை நாமே நமது சுய முயற்சியில் போராடி தீர்க்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்;அவ்வாறு குறைக்க உதவுபவையே அன்னதானம்,ஆடைதானம்,ஓம்சிவசிவஓம் ஜபித்தல்,காலபைரவ மந்திரம் ஜபித்தல்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்தல்,இவைகளை நேரடியாகவோ இணையம் மூலமாகவோ பரப்புதல் ஆகும்.

எமது அனுபவப்படி,இந்த விஜயவருடத்தின் முதல் நாள் 14.4.13 ஞாயிறு வருகிறது.இன்று முதல் கன்னி ராசி,துலாம் ராசி,விருச்சிகராசி,மீன ராசி,மேஷ ராசியினர் ஸ்ரீகால பைரவர் வழிபாடு மற்றும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யத் துவங்குவது நன்று.இந்த ராசிக்காரர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டாம்.ஏனெனில்,இந்த ஐந்து ராசிக்காரர்களும் சனிபகவானின் பாதிப்பில் படாத பாடு பட்டு வருகிறார்கள்;இதிலிருந்து மீள சனிபகவானின் குருவாகிய ஸ்ரீகாலபைரவரை தினமும் வழிபட்டு வருவது அவசியம்.

இதில் கன்னி ராசி,மீன ராசியினர் 16.12.2014 வரையிலும்;துலாம் ராசி,மேஷ ராசியினர் 1.7.2017 வரையிலும்;விருச்சிகராசியினர் 2021 வரையிலும் தினமும் ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்வதே நன்று.மிக எளிமையாக வீட்டில் ஒம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்பதை தினமும் 108 முறை ஜபித்து வருவதும்;ஓவ்வொரு சனிக்கிழமையும் அருகில் இருக்கும் பழமையான சிவாலயம் சென்று அங்கே அவரவர் ராசிப்படி நாம் முன்பே வெளியிட்டபடி ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்து வருவது அவசியம்.மேலும்,ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வருவதும் அவசியம்.

இந்த ராசிகளைத் தவிர,பிற ராசியில் பிறந்தவர்கள் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருவது நன்று.ஓம்சிவசிவஓம் ஜபித்துவரும் காலங்களில் பவுர்ணமி அல்லது திருவாதிரை நாட்களில் மட்டும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதற்கு விடுமுறை விட்டு,அன்று மட்டும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றியை எழுதுவது நன்று.

இதுவரை ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தவர்கள்,இடையில் பல்வேறு காரணங்களால் ஜபிக்க முடியாமல் போயிருக்கலாம்;அவர்கள் அனைவரும் இந்த புத்தாண்டு முதல் நாளில் மீண்டும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிப்பது நன்று.

இதுவரை ஸ்ரீகாலபைரவர்/ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தவர்கள் ஏதாவது காரணத்தால் நிறுத்தியிருந்தால் இன்று (14.4.13) முதல் மீண்டும் உரிய பைரவ வழிபாட்டைத் துவக்குவது அவசியம். இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் எத்தனை பேர்களுக்கு ஆன்மீகக்கடல் தெரிந்திருக்கும்? நமக்கு தெரிந்திருக்கிறது!

ஆன்மீகக்கடலின் ஜோதிட மற்றும் ஆன்மீக ஆலோசனைகளில் ஏதாவது ஒன்றே ஒன்றை மட்டும் நீங்கள் பின்பற்றத் துவங்கியிருந்தாலும் ஆன்மீகக்கடல் உங்களது சிறந்த ஆன்மீக வழிகாட்டி என்பதை புரிந்திருப்பீர்கள்; நாம் முதலில் நமது ஆத்மசக்தியை அதிகரிப்போம்; நம்மைப் பார்த்து,கவனித்து, நம்மைச் சுற்றியிருப்பவர்கள் பிறகு நம்மோடு கைகோர்க்கட்டும்!!!

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

ஓம்சிவசிவஓம்

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

நன்றி :: www.aanmigakkadal.com

Saturday, March 2, 2013

பொதிகை மலை - பயணக் கட்டுரை - 2

பொதிகை மலை
ஓம்  அகத்திய மகரிஷியே போற்றி...
முதல்ல சில basic ஆன விஷயங்க.....
  • பொதிகைக்கு எந்த ரூட்ல போகப் போறிங்கனு முடிவு பண்ணிக்கோங்க. தமிழ்நாட்டு வழியா இல்ல கேரளா ரூட்டா னு? தமிழ்நாட்டு வழி ரொம்ப ஆபத்து னு நிறைய பேரு சொல்றாங்க...
  • கேரளா ரூட்னா kerala forest department ல அனுமதி வாங்கணுங்க. எத்தன பேரு போறீங்க, என்னிக்கு போறீங்க, இந்த மாதிரியான தகவல்கள கொடுக்கணுங்க.
  • டிசம்பர், ஜனவரி ல போகணும்னா forest department க்கு தலைக்கு ரூ.350 கப்பம் கட்டனுங்க இதே ஏப்ரல், மே ல போகணும்னா ரூ.800 ங்க. ஏப்ரல், மே ல மட்டும் 4 பேரு கொண்ட குரூப் க்கு நம்ம கூட free யா கைடு ஒருத்தர அனுப்புவாங்க. ரொம்ப ரொம்ப உதவியா இருக்குங்க அந்த கைடு நம்ம கூட வரது.
  • Forest Department அட்ரஸ் இந்தாங்க... 
Forest and Wildlife Office
P .T .P NAGAR
VATTIYUR KAAVU
PH : 0471 - 2360762  
  • போன் பண்ணி நல்ல விசாரிச்சுட்டு  நேர்ல போங்க. நல்ல தமிழ் பேசறாங்க எல்லாரும். நா ரொம்ப கஷ்டப்பட்டு  மலையாளம் தெரிஞ்ச ஒருத்தர ரெடி பண்ணி பேச சொன்னா அவங்க நல்ல அழகா தமிழ் ல பேசறாங்க. 
  •  இந்த ஆபீஸ்ல ஒரு form தருவாங்க. அத fill பண்ணி amount கட்டி, receipt  வாங்கிடுங்க. இந்த receipt அ பத்திரமா வச்சுகோங்க. இந்த receipt அ செக் போஸ்ட் ல கட்டினாதான் அகஸ்திய கூடம் போக விடுவாங்க. செக் போஸ்ட் இருக்கிற இடம் bonacaud (போனகாடு)
  • திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷன் ல இருந்து போனகாடுக்கு 50km தூரம். 

  • View Larger Map
  • நாங்க என்ன பண்ணோம் னா  நேரா போனகாடுக்கே போய்ட்டோம். அங்க போய் தான் permission வாங்கினோம். எங்க வேணாலும் permission  வாங்கலாம் ங்க.
  •  சரிங்க...அடுத்த பதிவுல எங்க கதைகள சொல்றேங்க....கொஞ்சம் வெயிட் பண்ணுங்க  
(பொதிகை மலை தொடர்பா எதாச்சும் தகவல் வேணும்னா 9944309615 9444979615 இந்த நம்பர்க்கு கூப்பிடுங்க. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்றேங்க)

பொதிகை மலை - பயணக் கட்டுரை - 1

ரொம்ப ரொம்ப late ஆ இந்த பதிவ போடறதுக்கு என்ன மன்னிடுசுடுங்க. போன வருஷம் மே ல போயிட்டு வந்தோங்க. இப்ப தான் பதிவு பண்ண முடிஞ்சது. எல்லாத்துக்கும் குருவோட உத்தரவு வேணுங்களே....  
பொதிகை மலை
ஓம்  அகத்திய மகரிஷியே போற்றி...
original படம் வேணுங்கிறவங்க comment ல email id குடுங்க. அனுப்பி வைக்கிறோம். Print போட்டு வீட்டுல வச்சு கும்பிடுங்க.

சரிங்க... நாம பயணத்த ஆரம்பிக்கலாங்களா?

(பொதிகை மலை தொடர்பா எதாச்சும் தகவல் வேணும்னா 9944309615 9444979615 இந்த நம்பர்க்கு கூப்பிடுங்க. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்றேங்க)

Pinned Notes

பொதிகைமலைப் பயணம் 2016

**UPDATE** குருதேவரின் கருணையால் அவரை தரிசிக்கவும் அவரின் ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு கிடைத்து விட்டது.  வரும் 28ம் தேதி அன்று சென்னையிலிரு...